Shop at Amazon

Saturday, May 26, 2018

வவ்வாலின் மூலம் நோய் பரவுகிறது என்ற கூற்று கார்பரேட்களின் கனவு திட்டம்




வவ்வாலின் மூலம் நோய் பரவுகிறது என்ற கூற்று கார்பரேட்களின் கனவு திட்டம்


 வவ்வாளை கொண்டு வெடிகுண்டு தயாரிக்கலாம்

 (கீழே உள்ள பதிவு வவ்வாலின் பயன்களை அலசும் போது கிடைத்த ஒன்று)
 
சமீபக் காலங்களில் மனிதர்கள் வவ்வால்களின் பயன்பாடுகளை வெகுவாக அறிந்து வருகின்றார்கள். பொதுவாக வவ்வால்கள் கதைகளிலும் மற்றும் தொலைக்காட்சிகளிலும் தீய சக்திக்கும் சாத்தானிய சக்திகளுக்கும் உதாரணமாகக் கூறப்படுகின்றது. ஆனால் இன்றைய விஞ்ஞானிகள் இவைகளின் அளவற்ற பயன்பாடுகளைப்பற்றி சிலாகித்து கூறுகின்றனர்.
 இவை முக்கியமாக மனிதர்களுக்கு ஊறுவிளைவிக்கக்கூடிய பூச்சி, கொசு, வண்டு மற்றும் ஈக்களை தங்கள் முக்கிய உணவாக உட்கொள்கின்றன.

மெக்ஸிகோவில் வாழக்கூடிய மஸ்டிப்(mastiff) வவ்வால்கள் காலனியாக(கூட்டமாக) வாழக்கூடியது. இந்த வவ்வால்களின் ஒரு காலனி(கூட்டம்) ஒரு இரவில் 250 டன் (இரண்டு லச்சத்தி ஐம்பது ஆயிரம் கிலோ) எடையுடைய பூச்சி, வண்டு மற்றும் கொசுக்களை தங்கள் உணவாக உண்ணுகின்றன.


சிறிய பழுப்பு நிற வவ்வால்கள் (Little brown bat) ஒரு மணி நேரத்தில் 600 கொசுக்கள் வரைப் பிடித்து உண்ணக்கூடியவை. இதிலிருந்து இவை மனித குலத்திற்கு ஆற்றக்கூடிய அளவற்றத் தொண்டினை வார்த்தைகளினால் எங்ஙனம் விளக்க இயலும். பல நாடுகளில் இன்று மக்களுக்கு நோய்களையும் இன்னபிற தொல்லைகளையும் கொடுக்கும் கொசுக்களை அழிக்க பட்ஜட் போட்டுக்கொண்டிருப்பதை பார்க்கின்றோம். மேலும் இவைகள் தங்கள் உணவாக பழங்களான வாழை, மாம்பழம், கொய்யா பேரிச்சை, அத்தி ஆகியவற்றை உண்பதனால் வவ்வால்களின் மூலம் அயல் மகரந்தச்சேர்க்கை நடைப்பெற பெரிதும் துணைச்செய்கின்றன. இவைகளின் மூலம் 500 க்கும் மேற்ப்பட்ட தாவரங்களின் மகரந்தச் சேர்க்கை நடைப்பெற்று வருவதாக அரிய வந்துள்ளது. மேலும் இவற்றின் கழிவுகளில் மிக அதிக அளவிற்கு நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் உள்ளதால் மிகச்சிறந்க உரமாக பூமிக்கு அமைந்துவிடுகின்றன. பல நாடுகளில் இவை வசிக்கக்கூடிய இடங்களிலிருந்து இவற்றின் கழிவுகள் சேகரிக்கப்பட்டு விவசாயத்திற்கு தேவையான மிக உயர் தரமான உரம் தயாரிக்கப்படுகின்றது. இவையும் இவற்றின பயன்பாடுகளின் மிகமுக்கியமானதாகும்.

மனிதர்களுக்கு நேரடியான பயன்களும் இவற்றில் உள்ளன
வம்பைர்(vampire) வவ்வால்களின் வாயில் சுரக்கும் உமிழ் நீரிலிருந்து மனிதர்களுக்கு ஏற்படும் இதய சம்பந்தமான நோய்க்கு மருந்து தயாரிக்கப்படுகின்றது. மேலும் மூளைக்கு செல்லும் இரத்தம் தடைப்படுவதை தடுக்கவும் காயங்களிலிருந்து வெளியேரும் இரத்தத்தை விரைவில் உறைய வைக்கவும் இவை பயனாகின்றன. பிரிடெய்ல் வவ்வால்களின் இருப்பிடங்களில் சேர்ந்த இற்றின் கழிவுகளிலிருந்து கிடைக்கக்கூடிய சோடியம் நைட்ரேட்டைக் கொண்டு அமெரிக்காவில் நடந்த சிவில் போரில்(1861-1865) வெடிமருந்து தயார் செய்துள்ள வரலாறும் நமக்கு காணக்கிடைக்கின்றது.

கார்பரேட்
சரியாக வருமான காய் நகர்த்துகிறான் நிபா எதுவரை போகும் என்று தெரிய வில்லை ஆனால் வவ்வாலை இனிமேல் நாம் விலங்குகள் சரணாலயத்தில் தான் பார்க்க முடியும்.

தகவல் :- சித்த மரபினர் கூட்டமைப்பு

Saturday, May 19, 2018

தற்சார்பு : தமிழ் ஈழம் - விடுதலை புலிகளின் செயல்பாட்டின்போது



தற்சார்பு:


இந்தப்பதிவில் ஈழம் மற்றும் புலிகளைப்பற்றிய தற்சார்பு என்ற பார்வையில்...


புலிகள் ஆயுத போராட்டத்தை கையிலெடுத்தாலும் நாளடைவில் அதற்கான செலவினங்களில் உள்ள வணிகத்தை அறிந்தபிறகு அவர்களே தங்களுக்கு தேவையானதை தயாரித்தலும், உணவு உற்பத்தியில் தன்னிறைவடைந்ததும், பனை மரங்களின் பயண்பாட்டை உச்சத்தில் வைத்திருந்தது மட்டுமே இந்த வணிக உலகிற்கு உறுத்தியது… உலகில் நடக்கும் அத்துனை போராட்டங்களும் ஏதோ ஒரு வகையில் வணிகசம்பந்தமில்லாமல் நடப்பதில்லை… இதை உடைத்து வெளியே வந்ததுமில்லாமல் US டாலரில் பரிவர்ததனையில்லை என்பதுவே பிரச்னை… US டாலரில் பரிவர்ததனையில்லை என்று சொன்ன லிபிய அதிபரை புரட்சி என்கிற பெயரில் கொன்றார்கள்… ஆனால் ஈழத்தில் நிலமை வேறு அதையும் மீறி தற்சார்பாக வாழத்தொடங்கியிருந்தது அந்த அங்கீகரிக்கப்படாத நாடு… இந்த வணிக கட்டமைப்பிலிருந்து தற்சார்புக்கு திரும்பியதில் என்னென்ன காரணங்கள் என்பதை புலிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் தெரிந்திருக்கும்… ஆனால் அவர்களின் பாதை சரியானது அதனாலேயே இராணுவத்தை மட்டும் வெல்லாமல் பொது மக்களையும் சேர்த்தே இன அழிப்பு செய்தார்கள்! பொது மக்களின் அழிப்பை அவர்களின் தற்சார்பை சிதைத்தாகவே கருதுகிறேன்..

வணிக இயங்கியலை உடைத்து தற்சார்பை நோக்கி நகர்ந்த உண்ணதமான போராட்டம்… பிரித்தாளும் சாதி, மதம் , பெண்ணியம் என்ற எந்த ஒரு கருத்தியலும் பேசாமலேய நடைமுறையில் எந்த பிரச்னையுமில்லை! இதை இராணுவ ஆட்சியில் பயம் காரணமாக இப்படித்தான் மக்கள் இருப்பார்கள் என காரணம் சொல்லுபவர்களுமுண்டு… எதற்கும் மதிப்பேயில்லாத மக்களாட்சிக்கு சிறந்த தலைவனைக்கொண்ட இராணுவ ஆட்சி மேல்!

இதிலிருந்து அறிவது என்னவெனில் நீங்கள் தெரிந்தோ / தெரியாமலோ / வேண்டுமென்றோ தற்சார்பை கையிலெடுக்கும்போது வணிகம் தன் வேலையை இப்படி காட்டுமென்பது மிகப்பெரிய படிப்பினை… அப்ப வணிகம் எந்த அளவிற்கு பாதித்திருக்கும் என உங்கள் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்…

இவ்வளவு பெரிய சாதனையை புலிகள் கட்டியெழுப்ப எடுத்த நேரமும் போராட்டங்களும் கணக்கிலடங்காது…

இதை இப்படியே தமிழகத்தில் தற்சார்பை கொண்டுவர எவ்வளவு நேரமாகும் என்பதை பட்டியிலிடுகிறோம்…

*மதுவை ஒழிக்கவேண்டும்

*பனை மரங்களின் பயண்பாட்டை அதிகரிக்கவேண்டும்

*சாதி ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்கவேண்டும்

*இயற்கை வேளாண்மையை கையிலெடுக்கவேண்டும்

*கிரிக்கெட் / சினிமா மோகத்தை ஒழிக்கவேண்டும்

*மதங்களில்லாமல் வாழப்பழகவேண்டும்

*மாநில சுயாட்சி (தற்போது பெயரளவில் மட்டுமே)

*தன்னலிமில்லா செயலாற்றும் தலைமை வேண்டும்

*மாணவர்களும் பெண்களும் அரசியலில் இறங்க வேண்டும்

*மரபு அறிவை அடுத்த தலைமுறைக்கு கடத்துதல்

*தற்போதைய கல்விமுறையை ஒழித்து தமிழகத்திற்கேற்ப கல்வி முறை வேண்டும்..

*நிலம் சார்ந்த மருத்துவம்

*நிலம் சார்ந்த உணவு


இது ஒரு எகா பட்டியலே இதில் எத்தனையை உங்களால் அடையமுடியும் அதன்காலத்தையும் நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்கள்… 9 வருடங்களுக்கு முன்னர் ஈழத்தில் இவற்றில் எத்தனை சாத்தியப்பட்டது என தெரிந்துகொள்ளுங்கள்…

வணிக கட்டமைப்பை உடைத்து தற்சார்பை இந்த நூற்றாண்டில் செய்து காட்டியவர்கள் புலிகள் அவர்கள் எதில் வீழ்ந்தார்கள் என்பதை கவனித்து அதற்கேற்ப பயணித்தால் சாத்தியமென்பதற்கான பதிவு!

#தற்சார்பு_வாழ்வியல்

நன்றி. வெ.செ. இரமேசு பழஞ்சூர் மாகாளியர்

Friday, May 18, 2018

பப்பாளி (Papaya)




பப்பாளி:

யாருக்கு நல்லது: 
மூட்டுவலி உள்ளவர்களுக்கும், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும்.

யாருக்கு வேண்டாம்:
கர்ப்பிணிப் பெண்கள் முதல் எட்டு வாரங்களுக்கு தவிர்க்கவும்.

பலன்கள்: சருமத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கும். குடல் பூச்சிகளைச் அழித்துச் சுத்தம் செய்யும்.





பயன்கள்:

* பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

* பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.

* பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.
* நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

* பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.

* பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.
* பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.

* பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.

* பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.

* பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.

* பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.

* பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

Tuesday, May 15, 2018

குப்பை மேடாகிக் கிடக்கும் வரலாற்றுப் பேழை: எண்ணூர் அருகில்





குப்பை மேடாகிக் கிடக்கும் வரலாற்றுப் பேழை:



எண்ணூர் கடற்கரை நெடுஞ்சாலையில், சுங்கசாவடிக்கு (டோல்கேட்) அருகில், 'ஷாவாலா' மில்லுக்கு எதிரில் குப்பை மேடாகக் கிடக்கும் இந்த கட்டிடம் என்னவென்று தெரியுமா?

இரண்டாவது உலக மகா போரின் போது, விமானத் தாக்குதல்களிலிருந்து பொதுமக்கள் தப்பிக்க பல்வேறு இடங்களில் பாதுகாப்பாக கட்டப்பட்ட பதுங்கு குழிகளில் இதுவும் ஒன்று என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்?


குண்டு வீச்சு விமானங்கள் குண்டு வீச பறந்து வரும்போது, எச்சரிக்கை 'சைரன்' அலறும். உடனே எல்லோரும் இந்த கட்டிடத்தில் பாதுகாப்பாக பதுங்கிக் கொண்டால் குண்டு வீச்சின் ஆபத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

உண்மையில், வரலாற்றுப் பேழையான இது குப்பை மேடாகிக் கிடப்பது பரிதாபம்!

 படம்: Z. மெஹர் அலி (New College)

Sunday, May 13, 2018

சிறுநீரக நோய்கள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

நாள்தோறும் இரண்டரை லிட்டர் தண்ணீரை கண்டிப்பாக குடிக்க வேண்டும். வியர்க்க வியர்க்க வேலை செய்யும் போது அடிக்கடி தண்ணீரை குடித்துக்கொள்வது மிக அவசியமானது. வாரத்தில் இரண்டு நாட்கள் வாழைத்தண்டு, முள்ளங்கி ஆகியவற்றையும் கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும். 

Saturday, May 12, 2018

What sort of Leaders needed for UNO? | ஐக்கிய நாடுகள் (ஐ.நா) சபையின் தலைவர்கள் எப்படி இருக்க வேண்டும்?



                      What sort of Leaders needed for UNO?


ஐக்கிய நாடுகள் (ஐ.நா) சபையின் தலைவர்கள் எப்படி இருக்க வேண்டும்?

 



வாழத் தெரியாதோர் பலர் வாழும் நாட்டில், ஆளத்தெரியாதோர் ஆட்சியே நடக்கும்!































தற்போது வேதாத்திரி மகரிசி ஐயா அவர்களது வைரலாக பரவும் தத்துவம்!




"வாழத் தெரியாதோர் பலர் வாழும் நாட்டில், ஆளத்தெரியாதோர் ஆட்சியே நடக்கும்!"


விளக்கம் :
1. வாழ்வின் நோக்கமான இறை (கடவுள்) உணர்வு பெற்று,
2. அதன்படி இறைநீதி (செயல் விளைவுத் தத்துவம் - எந்த செயல் செய்தாலும் அதற்கு தகுந்த விளைவு உண்டு) வழி வாழ்வது,
3. உயிர் அறிவை (எல்லா உயிர்களும் ஒன்றே) உள்ளுணர்வாய் பெறுதல், இயற்கையோடு ஒன்றி வாழ்தல்,
4. இறைஉணர்வோடு கலந்த அறநெறியான வாழ்க்கை (ஒழுக்கம், கடமை, ஈகை)
இவை வாழ்நாள் முழுக்க கடைபிடித்து வாழ்பவர் ஒரு நாட்டில் வாழத்தெரிந்தோர் ஆவர்!

இப்படி வாழ்வதன் மூலமாக ஒரு நாட்டின் தலைவர் இப்படிதான் சரியாக இருக்க வேண்டும் என்ற சிந்தனை எல்லா மக்களிடத்திலும் இருக்கும்.. அது போன்ற தலைவரையே ஆளத்தெரிந்தோர், ஆட்சியை சரியாக நடத்துவோர் என்று கூறி அவரையே ஆட்சி தலைவராக தேர்ந்தேடுப்பர்!
 

---------------------------------------------------
தற்போதைய சூழலில் மனிதனுக்கு வாழவே தெரியவில்லை.. புலன் கவர்ச்சியில் (ஐம்புலன் இன்பம்) சிக்கி தவிக்கிறான். ஆசையை பேராசையாக மாற்றிக்கொள்கிறான். தடுமாறுகிறான், தடம் மாறுகிறான் (பாதை மாறுகிறான்). இதன் மூலமாக தன்னிலை மறக்கிறான். தன்னுடைய வாழும் முறையை மறக்கிறான். வாழ்வின் நோக்கத்தை மறக்கிறான்.

அதனால் அவனுக்கான சரியானத் தலைவனை தேர்ந்தேடுக்க தெரியவில்லை. எனவே ஆளத் தெரியாதோர் ஆட்சிக்கு வருகின்றனர், நம்மை வாட்டி வதைக்கின்றனர்..!

இதற்கு காரணம் உலக அரசியல் நம்மை சிந்திக்க விடாமல் ஆட்டிப் படைக்கின்றனர். அவர்கள் திட்டமிட்ட வாழும் முறையை திட்டமிட்டு மக்கள் மீது திணிக்கின்றனர். அதை அறிந்து புரிந்து கொண்டால் எல்லாவற்றையும் புரிந்து கொள்வார்கள் மக்கள்!


வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! 🙏🕊️

நீட் தேர்வுக்குப் பின் உள்ள சர்வதேச அரசியல்!






நீட் தேர்வுக்குப் பின் உள்ள சர்வதேச அரசியல்!

- தெளிவாக விளக்கும் டெல்லி பேராசிரியர்..

இது ஏறத்தாழ ஆறு தசாப்தங்களுக்கு முன் நடந்த சம்பவம். ஒல்லியான தேகம்கொண்ட அந்த இளைஞர் பிரபலமான ஒரு கல்லூரியில் சேர்வதற்கான நேர்காணலுக்குச் செல்கிறார். நேர்காணல் தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே அவருக்கு அந்தக் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதற்குக் கூறப்பட்ட காரணம், “நீங்கள் இந்திவழியில் கற்றவர்” என்பதுதான். அந்த இளைஞர் பதற்றப்படாமல் சொல்கிறார், “ஓ, அப்படியா... சரி நீங்கள் எனக்கு வாய்ப்பு மறுக்கும் காரணத்தை ஒரு துண்டுச் சீட்டில் எழுதித் தாருங்கள். அந்தச் சீட்டை எடுத்துக்கொண்டு நான் ராஷ்டிரபதி பவனுக்குச் செல்கிறேன். நான் இந்தியில் படித்ததால் எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது என்று கூறுகிறேன். பன்மைத்துவமான ஒரு தேசத்தில், ஒருவனுக்குத் தன் தாய்மொழியில் படிக்க உரிமையில்லையா...? என்று ஜனாதிபதியிடம் கேட்கிறேன்.” என்கிறார். தேர்வுக் குழு வாயடைத்துப் போகிறது. அவரது கேள்வியில் உள்ள நியாயம் புரிந்து இப்போது அந்த மாணவனைக் கல்லூரியில் சேர்த்துக்கொள்கிறது. அந்த மாணவர் இந்தியாவின் முக்கியமான கல்வி செயற்பாட்டாளரான பேராசிரியர் அனில் சடகோபால்.

தற்போது அனில் சடகோபால் இந்தியா முழுவதும் பயணித்து நீட் தேர்வுக்கு எதிராகத் தீவிரமாக பிரசாரம் செய்துவருகிறார். சென்னைக்கு இன்று (22-05-17) நீட் தேர்வு சம்பந்தமாக பொதுப்பள்ளிக்கான மாநில மேடை ஒருங்கிணைத்த ஒரு கூட்டத்துக்கு வந்தவரிடம் பேசினோம்.

''ஒரு கல்வியாளராக இருந்துகொண்டு ஏன் நீட் தேர்வை எதிர்க்கிறீர்கள்... நம் கல்வித் துறை மேம்பட வேண்டும் என்று உங்களுக்கு விருப்பம் இல்லையா...?''

''நான் கல்வியாளர், பேராசிரியர் என்பதனால்தான் நீட் தேர்வை எதிர்க்கிறேன். நீட் தேர்வினால் கல்வித் தரம் மேம்படும் என்பது மக்களை ஏமாற்றும் வேலை. சொல்லப்போனால், நீட் தேர்வு இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கே எதிரானது.''

''எப்படிச் சொல்கிறீர்கள்...?''

''அரசியலமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு பத்தியும் சமூகநீதியையும், சமத்துவத்தையும் பரிந்துரைக்கிறது. ஆனால், இந்த நீட் தேர்வு, அதற்கு நேரெதிராக இருக்கிறது. இந்தியா என்பது ஒற்றைத் தேசம் கிடையாது. அது, பல்வேறு தேசிய இனங்கள் வாழும் மாநிலங்களின் தொகுப்பு. பல்வேறு தேசிய இனங்களின் மாணவர்களின் திறனை ஆராய ஒற்றைத் தேர்வு என்பது சுத்த அயோக்கியத்தனம். எப்படி எதுவும் இதுவரை சேராமல் இருக்கும் வட கிழக்கு மாணவனும், எல்லா செளகர்யங்களையும் பெற்ற டெல்லி மாணவனும் போட்டி போடுவான். இருவருக்கும் ஒரே தேர்வு என்பது மக்களை மடையர்கள் ஆக்கும் வேலை இல்லையா? அது மட்டுமல்ல, புதிய கல்விக் கொள்கையை மக்கள் மன்றத்தில் வைக்காமல், அதில் உள்ள ஷரத்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றும் வேலையைத்தான் இந்திய அரசாங்கங்கள் செய்துவருகின்றன. அதில் ஒரு பகுதிதான் இந்த நீட் தேர்வு.''

''சரி... அப்படியானால் இன்னும் அதே பழைய கல்விக் கொள்கையைத்தான் தொங்கிக்கொண்டு இருக்க வேண்டுமா... காலத்துக்கு ஏற்றாற்போல் புதிய கல்விக் கொள்கை வேண்டாமா...?''

''கண்டிப்பாக மாற வேண்டும். நிறுவனங்களின் நலனுக்கானதாக இல்லாமல், நம் மாணவர்களின் நலனுக்கானதாக இருக்க வேண்டும். ஆனால், இப்போது நம் கல்விக் கொள்கையைப் பெரும் நிறுவனங்கள் வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன. அதன் பிரதிநிதிகளாக உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வர்த்தக அமைப்பு ஆகியவை வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன. மாணவர்களின் நலன் முதன்மை பெறாமல், முதலாளிகளின் நலன்தான் இந்தக் கல்விக் கொள்கையில் முதன்மையானதாக இருக்கிறது. உலக மூலதனம் இந்தியக் கல்வித் துறையின் மீது ஒரு யுத்தத்தைத் தொடுத்திருக்கிறது. அந்த மூலதனம் தேசத்துக்கு, மக்களுக்கு, இயற்கை வளங்களுக்கு என யாருக்கும் விசுவாசமாக இருக்காது. அது லாபத்துக்கு மட்டும்தான் விசுவாசமாக இருக்கும், அந்த மூலதனத்தின் பிள்ளைதான் ‘நீட்' தேர்வு.''

''புரியவில்லை. நீட் தேர்வுக்கும் உலக வர்த்தக அமைப்புக்கும், உலக மூலதனத்துக்கும் என்ன சம்பந்தம்...?''

''உலக வர்த்தக அமைப்புக்குச் சில வாக்குறுதிகளை இந்திய அரசு அளித்துள்ளது. அதில், ஒன்று இந்தியச் சுகாதாரத் துறையை முழுவதும் தனியார்மயமாக்குவது. அதில் தங்குத்தடை இல்லாமல், அந்நிய நிதியை அனுமதிப்பது. இது நிறைவேற வேண்டுமானால், இந்தியப் பொது சுகாதாரத் துறையைச் சிதைக்க வேண்டும். அதைச் சிதைக்கத்தான் இந்த நீட் தேர்வு.''

''இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா...?''

இப்போதுள்ள மருத்துவக் கல்வி முறையில் மாணவர்கள் சில காலம் கிராமத்தில் பணியாற்ற வேண்டும். அதற்கான ஒதுக்கீடு இருக்கிறது. ஆனால், நீட் தேர்வில் அதற்கான வாய்ப்பே இல்லை. இதனால், கிராம மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அழியும். அந்த இடத்தில் தனியார் மருத்துவமனைகள் வரும். நீங்கள் நீட் தேர்வைத் தட்டையாகப் புரிந்துகொள்ளாமல் இந்தப் பின்னணியில்தான் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நீட் தேர்வைச் சர்வதேச அரசியல் அல்லாமல் சமூகநீதி கண்ணோட்டத்தில் பார்த்தீர்கள் என்றால், வாய்ப்பு மறுக்கப்பட்ட பின்தங்கிய சமூக மக்களை, மருத்துவத் துறையில் உள்ளே வரவிடாமல் பார்த்துக்கொள்ளும் அரசியல் தெரியும்.''

''தகுதியானவர்கள்தானே மருத்துவத் துறையில் வரவேண்டும்?''

அனில் சடகோபால்''தகுதி எதைவைத்து நிர்ணயிக்கப்படுகிறது? தாழ்த்தப்பட்ட, பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த ஒரு மாணவன் கடினப்பட்டு படித்து, நல்ல மதிப்பெண் பெற்று மருத்துவப் படிப்பு வாய்ப்புக்காகக் காத்திருக்கும்போது, அவன் மீது நீட் தேர்வைத் திணிக்கிறீர்கள். கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அவனால், நீட் தேர்வுக்கானச் சிறப்பு வகுப்பில் பணம் கொடுத்து சேர முடியுமா...? ஆனால், பணம் கொடுத்து சிறப்பு வகுப்புகள் சேர முடிந்த ஒரு மாணவனையும், பணம் கொடுத்து சேர முடியாத ஒரு பழங்குடி மாணவனையும் 'ஒன்றாக ரேசில் ஓடுங்கள்' என்கிறீர்கள். கொஞ்சம் மூளையிலிருந்து யோசிக்காமல், மனதிலிருந்து யோசியுங்கள். உங்கள் மாநிலத்திலேய அனைத்து மாவட்டங்களுக்கும், அனைத்து வசதிகளும் கிடைத்துவிட்டதா? நான் இங்கு பேசிக் கொண்டிருக்கும்போது... 'விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்கள் எல்லாம் பின்தங்கி இருக்கின்றன' என்றனர். அப்படியானால், அந்த மாவட்டங்களில் உள்ள பிள்ளைகள் எப்படிச் சென்னை மாவட்டப் பிள்ளைகளுடன் போட்டிபோட முடியும்...? ஒரு மாநிலத்திலேயே இவ்வளவு சிக்கல் இருக்கும்போது, பல்வேறு தேசிய இனங்கள், மதங்கள், சாதிகள், பாகுபாடுகள் உள்ள ஒரு தேசத்துக்கு ஒற்றைத் தேர்வு சரி வருமா....?''

''சரி, இதற்கு என்னதான் தீர்வு...?''

"கூட்டாட்சி தத்துவத்தை மதிப்பதுதான் தீர்வு. தமிழகம்தான் எங்களுக்கு நீட் தேர்வு வேண்டாமென்று சட்டம் இயற்றிவிட்டது . கூட்டாட்சி தத்துவத்தின்படி, அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

கல்வியை வணிகமாகப் பார்க்காமல் இலவசமாக்க வேண்டும். அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். முதலாளித்துவ தேசமான ஜெர்மனியும் சரி... கம்யூனிச தேசமான கியூபாவும் சரி... கல்வியை வணிகமாகப் பார்க்கவில்லை. ஆனால், இவ்வளவு பாகுபாடு உள்ள ஒரு தேசம் கல்வியை வணிகமாகப் பார்க்கிறது; அதிலிருந்து வருபவர்களை ஒற்றைத் தேர்வில் எடைபோடுவோம் என்கிறது.''

''ஆனால், தமிழகம் மட்டும்தானே நீட் தேர்வைத் தீவிரமாக எதிர்க்கிறது?''

''ஆம். அதற்கு நீங்கள் பெருமைகொள்ள வேண்டும். மற்ற மாநிலங்களைவிட உங்களுக்குத்தான் எது சமூக நீதி என்று தெளிவாகத் தெரிந்திருக்கிறது. அதனால்தான், அதற்கு ஏதேனும் சிறு உராய்வு ஏற்படும்போது நீங்கள் கிளர்ந்தெழுகிறீர்கள்... போராடுகிறீர்கள். உண்மையில், தமிழ் மக்கள் நடத்தும் போராட்டங்கள் இந்தியாவின் பிற இனமக்களுக்கானதும்தான். மற்ற மாநிலங்கள் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் இருக்கும்போது நீங்கள் வெற்றிகரமாக ஒரு போராட்டத்தை நடத்தி ஜல்லிக்கட்டை நடத்திவிட்டீர்கள். இப்போது நீங்கள் நடத்தவேண்டியது நீட் தேர்வுக்கு எதிரான ஜல்லிக்கட்டு.''

விழித்துக்கொள்ளுங்கள் மக்களே!!

Saturday, May 5, 2018

வாய் நாற்றம் மாற என்ன செய்ய வேண்டும்?

வாய் நாற்றம் மாற என்ன செய்ய வேண்டும்? 

வயிறு மற்றும் நுரையீரல் நோயுள்ளோருக்கு வாய் நாற்றமடிப்பது அதிகமாக இருக்கும். அவ்வாறுள்ளோர் தக்க சிகிச்சை எடுத்துக்கொண்டால் மட்டுமே வாய் நாற்றம் நீங்கும்.

அவ்வாறான நோயின்றி, சாதாரணமாக வாய் நாற்றமுள்ளோர்கள், காலையில் மட்டுமின்றி  இரவு சாப்பாட்டிற்கு பிறகும் பல்துளாக்க வேண்டும்.

மேலும் எலுமிச்சை சாறு கலந்த நீரினால் காலை - மாலை வாய் கொப்பளிக்க வேண்டும்.

வாயில் ஒரு ஏலக்காயைப் போட்டு மென்று அடக்கிக் கொண்டால், மற்றவர்களிடம் பேசும்போது, அவர்கள் முகம் சுழிக்காமல் இருப்பார்கள், தினமும் இரண்டு ஏலக்காய்களை சாப்பிடுவது, ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

Tuesday, May 1, 2018

வாய்ப்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்?

குறிப்பு : 1
கொப்பரைத் தேங்காய் துண்டை வாயில் போட்டு, நன்றாக மென்று, அப்படியே கொப்பளித்து முடிந்தவரை அடக்கி வைத்து துப்பிவிடவும், இப்படி தினமும் 3 முறை செய்தால் சில தினங்களில் நல்ல நிவாரணம் கிடைக்கும்.


குறிப்பு : 2

வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்.


குறிப்பு : 3



கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.
 

Watch this Video