தற்போது வேதாத்திரி மகரிசி ஐயா அவர்களது வைரலாக பரவும் தத்துவம்!
"வாழத் தெரியாதோர் பலர் வாழும் நாட்டில், ஆளத்தெரியாதோர் ஆட்சியே நடக்கும்!"
விளக்கம் :
1. வாழ்வின் நோக்கமான இறை (கடவுள்) உணர்வு பெற்று,
2. அதன்படி இறைநீதி (செயல் விளைவுத் தத்துவம் - எந்த செயல் செய்தாலும் அதற்கு தகுந்த விளைவு உண்டு) வழி வாழ்வது,
3. உயிர் அறிவை (எல்லா உயிர்களும் ஒன்றே) உள்ளுணர்வாய் பெறுதல், இயற்கையோடு ஒன்றி வாழ்தல்,
4. இறைஉணர்வோடு கலந்த அறநெறியான வாழ்க்கை (ஒழுக்கம், கடமை, ஈகை)
இவை வாழ்நாள் முழுக்க கடைபிடித்து வாழ்பவர் ஒரு நாட்டில் வாழத்தெரிந்தோர் ஆவர்!
இப்படி வாழ்வதன் மூலமாக ஒரு நாட்டின் தலைவர் இப்படிதான் சரியாக இருக்க வேண்டும் என்ற சிந்தனை எல்லா மக்களிடத்திலும் இருக்கும்.. அது போன்ற தலைவரையே ஆளத்தெரிந்தோர், ஆட்சியை சரியாக நடத்துவோர் என்று கூறி அவரையே ஆட்சி தலைவராக தேர்ந்தேடுப்பர்!
--------------------------
தற்போதைய சூழலில் மனிதனுக்கு வாழவே தெரியவில்லை.. புலன் கவர்ச்சியில் (ஐம்புலன் இன்பம்) சிக்கி தவிக்கிறான். ஆசையை பேராசையாக மாற்றிக்கொள்கிறான். தடுமாறுகிறான், தடம் மாறுகிறான் (பாதை மாறுகிறான்). இதன் மூலமாக தன்னிலை மறக்கிறான். தன்னுடைய வாழும் முறையை மறக்கிறான். வாழ்வின் நோக்கத்தை மறக்கிறான்.
அதனால் அவனுக்கான சரியானத் தலைவனை தேர்ந்தேடுக்க தெரியவில்லை. எனவே ஆளத் தெரியாதோர் ஆட்சிக்கு வருகின்றனர், நம்மை வாட்டி வதைக்கின்றனர்..!
இதற்கு காரணம் உலக அரசியல் நம்மை சிந்திக்க விடாமல் ஆட்டிப் படைக்கின்றனர். அவர்கள் திட்டமிட்ட வாழும் முறையை திட்டமிட்டு மக்கள் மீது திணிக்கின்றனர். அதை அறிந்து புரிந்து கொண்டால் எல்லாவற்றையும் புரிந்து கொள்வார்கள் மக்கள்!
No comments:
Post a Comment