Shop at Amazon

Showing posts with label உணவு. Show all posts
Showing posts with label உணவு. Show all posts

Monday, October 3, 2022

தினம் ஒரு உலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

பலருக்கும் அத்திப்பழம் பற்றி தெரியாது. ஏன் பாத்திருக்கக்கூடமாட்டார்கள். அப்படியே பார்த்தாலும், இதை எப்படி சாப்பிடுவது என்று பலரும் கேட்பார்கள். ஏனெனில் அத்திப்பழம் பார்ப்பதற்கு அப்படி இருக்கும். மேலும் இந்த அத்திப்பழம் அவ்வளவு எளிதில் கிடைக்காது. ஆனால் இதன் மறுவடிவமான உலர்ந்த அத்திப்பழம் அனைத்து காலங்களிலும் கிடைக்கும்.

பலரும் கடைகளில் முந்திரி, உலர் திராட்சை, பிஸ்தா உள்ள இடங்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால் இதன் வடிவத்தைப் பார்த்து, இது எப்படி இருக்குமோ என்று நினைத்து வாங்கி சுவைத்திருக்கமாட்டீர்கள். இனிமேல் கடைக்கு சென்றால், தவறாமல் இந்த உலர்ந்த அத்திப்பழத்தை வாங்கி சாப்பிடுங்கள். ஏனெனில் மற்ற உலர் பழங்களை விட, இதில் அலாதியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. சரி, இப்போது அந்த உலர்ந்த அத்திப்பழத்தை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.

செரிமானத்தை அதிகரிக்கும்

உலர்ந்த அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. அதிலும் 3 துண்டு உலர்ந்த அத்திப்பழத்தில் ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய 5 கிராம் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் மலச்சிக்கல் மற்றும் இதர செரிமான பிரச்சனைகள் நீங்கி, குடலியக்கம் சீராக நடைபெறும்.
   
எடை குறைவு

உலர்ந்த அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளது. ஒரு துண்டு உலர்ந்த அத்திப்பழத்தில் 47 கலோரிகள் உள்ளது. இதனால் 0.2 கிராம் கொழுப்பைத் தான் இதில் இருந்து பெற முடியும். எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு, இது மிகவும் சிறப்பான ஸ்நாக்ஸ்.

உயர் இரத்த அழுத்தம்

உணவில் உப்பு அதிகம் சேர்த்து வந்தால், உடலில் சோடியத்தின் அளவு அதிகரிக்கும். அப்படி சோடியத்தின் அளவு அதிகரித்து, பொட்டாசியத்தின் அளவு குறைருந்தால், அதன் காரணமாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். ஆனால் உலர்ந்த அத்திப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாகவும், சோடியம் குறைவாக இருப்பதால், இதனை தினமும் உட்கொண்டு வந்தால், உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்கலாம்.
   
ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்தது

உலர்ந்த அத்திப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் வளமையாக நிறைந்துள்ளது. மேலும் மற்ற பழங்களை விட, அத்திப்பழத்தில் நிறைந்துள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மிகவும் தரமானது என்று ஆய்வு ஒன்று சொல்கிறது. குறிப்பாக உலர்ந்த அத்திப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஈ அதிகம் நிறைந்துள்ளது.
உறுதி செயப்பட்ட ஒரு உடல் எடை குறைப்பு டிப்ஸ்
உடல் எடை குறையக்கும் டிரெண்டிங் டிரிக்
அதிர்ச்சி: இந்த முறையில் அவர் சில நாட்களில் முடிவளர பெற்றார்.
   
இதய நோயைத் தடுக்கும்

ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், ப்ரீ-ராடிக்கல்களால் உடலின் இரத்த நாளங்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு, இதய நோயின் தாக்கம் தடுக்கப்படும். மேலும் முன்பு குறிப்பிட்டது போல், இது உயர் இரத்த அழுத்தத்தைத் தடுப்பதால், கரோனரி இதய நோயின் தாக்கமும் குறையும். மேலும் ஆய்வு ஒன்றில் உலர்ந்த அத்திப்பழம் ட்ரை-கிளிசரைடுகளின் அளவைக் குறைப்பதால், இதய நோய் வரும் வாய்ப்பு சீராக குறையும்.
   
புற்றுநோயைத் தடுக்கும்

ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்த அத்திப்பழம், ப்ரீ-ராடிக்கல்களால், செல்லுலார் டி.என்.ஏ பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு, அதனால் புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கும்.
   
எலும்புகளை வலிமையாக்கும்

ஒரு உலர்ந்த அத்திப்பழத்தில் 3% கால்சியம் நிறைந்துள்ளது. இது ஒரு நாளைக்கு ஒருவருக்கு வேண்டிய கால்சியத்தின் அளவாகும். எனவே தினமும் ஒரு உலர்ந்த அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால், எலும்புகளின் அடர்த்தி அதிகரித்து, எலும்புகள் வலிமையாகும்.
   
நீரிழிவிற்கு நல்லது

உலர்ந்த அத்திப்பழம் மிகவும் இனிப்பாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் இதை சாப்பிட யோசிப்பார்கள். ஆனால் இதில் உள்ள நார்ச்சத்து, நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் நல்லது என்பதால், இதனை உட்கொள்ளும் முன் மருத்துவரிடம் கலந்தாலோசித்து, எத்தனை எடுத்துக் கொள்வது என்று கேட்டு தெரிந்து பின் சாப்பிடுங்கள்.
   
இரத்த சோகையை தடுக்கும்

உலர்ந்த அத்திப்பழத்தில் இரும்புச்சத்தும் அதிகம் உள்ளது. அதிலும் ஒரு உலர்ந்த அத்திப்பழத்தில் 2% இரும்புச்சத்து நிறைந்துள்ளது. உடல் முழுவதும் ஹீமோகுளோபினை எடுத்துச் செல்ல இந்த கனிமச்சத்து மிகவும் இன்றியமையாதது. எனவே இதனை தினமும் ஒன்று உட்கொண்டு வந்தால், உடலின் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, இரத்த சோகை வருவதும் தடுக்கப்படும்.

இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியம்

பண்டைய இதிகாசங்களின் படி, கிரேக்கர்கள் அத்திப்பழத்தை ஒரு இயற்கை பாலுணர்வூக்கியாக பயன்படுத்தி வந்தனர். அத்திப்பழமானது புனிதமான பழமாகவும், காதல் மற்றும் கருவுறுதலுக்கு நெருங்கிய தொடர்புடையதாகவும் கருதப்பட்டு வந்தது. விஞ்ஞானரீதியாக, அத்திப்பழம் கருவுறுதவை அதிகரிக்கவும், பாலுணர்ச்சியைத் தூண்டவும் செய்கிறது. இதற்கு அத்திப்பழத்தில் உள்ள ஜிங்க், மாங்கனீசு மற்றும் மக்னீசியம், இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகரிப்பது தான் காரணம்.

Thursday, September 29, 2022

நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு - ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்

2 நிமிடங்களில் நீங்கள் வேக வேகமாய்ச் சமைத்துத் தரும், ஆசையாய் ஆசை ஆசையாய் நம் வீட்டுக் குழந்தைகள் அள்ளிச் சாப்பிடும் நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு என்றால் நம்புவீர்களா?

நம்புங்கள் என்கிறார்; 
அகமதாபாத்தைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்பு உணர்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமைப் பொது மேலாளர் ப்ரீத்தி. 'இன்சைட்’ என்கிற நுகர்வோர் விழிப்பு உணர்வு இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார். 

விளம்பரங்களால் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்து எண்ணற்ற வீடுகளில் காலை உணவாகிவிட்ட நூடுல்ஸ், உண்மையிலேயே சத்தான உணவுதானா என்று தெரிந்துகொள்ள விரும்பினார் ப்ரீத்தி. 
இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் 15 நிறுவனங்களின் நூடுல்ஸ்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

நூடுல்ஸில் இவ்வளவு சத்துக்கள் இருக்க வேண்டும் என்று இந்தியாவில் இதற்கான அளவு மதிப்பீடுகள் ஏதும் இதுவரை வரையறுக்கப்படாததால், இங்கிலாந்தின் உணவுத் தரக் கட்டுப்பாட்டு முகமையின் அளவுகளை வைத்து இந்தத் தரச்சோதனை நடந்தது. இதில் வெளியான முடிவுகள் மூலமாகத்தான் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் ப்ரீத்தி. 

ஆய்வு சொல்லும் முடிவுகள்? 
சோதனை செய்யப்பட்ட எந்த முன்னணி நிறுவனங்களின் நூடுல்ஸும் விளம்பரங்களில் காட்டப்படுவதுபோல ஏகப்பட்ட சத்துக்களை உள்ளடக்கியதாகவோ, குழந்தைகள் உடல் நலனுக்கு முற்றிலும் நன்மை பயப்பதாகவோ இல்லை.அனைத்து நூடுல்ஸ்களிலும் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் எக்கச்சக்க மடங்கு அதிகமாக உப்பு மற்றும் கொழுப்பு உள்ளன. 

100 கிராம் நூடுல்ஸில் 130 முதல் 600 மில்லி கிராம் வரை அனுமதிக்கப்பட்ட சோடியம் அளவாகும். ஆனால், இந்தியாவில் விற்கப்படும் வெவ்வேறு நூடுல்ஸ் நிறுவனங்களின் தயாரிப்புகளில் 821 மில்லி கிராம் முதல் 1943 மில்லி கிராம் வரை #சோடியம் இருந்திருக்கிறது. 

ஆனால் தேவையான மற்ற சத்துக்களோ சொல்வதைவிடக் குறைந்த அளவில்! மிகக் குறைந்த அளவுக்கே நார்ச்சத்து, புரதம், கால்சியம் ஆகியன உள்ளன. இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிதல், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் எனப் பல்வேறு ஆபத்துகளுக்கும் குழந்தைகள் ஆளாக நேரிடும்.

ப்ரீத்தி சொல்கிறார்; ஆய்வு முடிவுகளைப் பார்த்தபோது அதிர்ந்துபோனேன். இது தொடர்பாக விளக்கம் கேட்டு 15 நிறுவனங்களுக்கும் ஆய்வு நிறுவனம் சார்பில் கடிதம் அனுப்பினோம்.
ஆனால், இதுவரை அந்தக் கடிதங்களுக்கு எந்த நிறுவனமும் பதில் அளிக்கவில்லை. 

கம்பு, வரகு, சாமை, தினை, கேழ்வரகு என்று எவ்வளவோ சத்து மிக்க சிறுதானியங்கள் விளையும் மண் இது. ஆனால், அவற்றை எல்லாம் இருட்டடிப்பு செய்துவிட்டு, விளம்பரங்கள் மூலம் சந்தையைப் பிடிக்கும் பெருநிறுவனங்கள் இந்திய மக்களை குழந்தைப் பருவத்தில் இருந்தே அடிமைப்படுத்துகின்றன. 

பெற்றோர்கள் இந்த விஷயத்தில் விழிப்பு உணர்வோடு இருக்க வேண்டும். குப்பை உணவின் மூலமாக ஏற்படும் வளர்ச்சி உண்மையானது அல்ல. நாளை நம் குழந்தைகள் நிரந்தர நோயாளிகளாக நாமே காரணம் ஆகிவிடக் கூடாது; என்றார் அக்கறையுடன்.

Wednesday, October 24, 2018

மாமிசம் மனித உணவா?






Read or otherwise Watch this Video

இயற்கை கோட்பாடுகளின் படி மனிதன் சைவமா?அசைவமா?
 
இயற்கையில் இரண்டு விதமான அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

1. சைவம் சாப்பிடும் ஜீவராசிகள்
2. அசைவம் சாப்பிடும் ஜீவராசிகள்


இவ்விரு ஜீவராசிகளையும் சற்றே ஆராய்ந்து பார்த்தால் மனிதன் சைவமா?அல்லது அசைவமா? என சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.
சைவ ஜீவராசிகளுக்கு உதாரணமாக மாடு, குதிரை, கழுதை, யானை, மான் போன்றவற்றை எடுத்துக் கொள்வோம்.

அசைவ ஜீவராசிகளுக்கு உதாரணமாக சிங்கம், புலி, நாய் போன்றவற்றை எடுத்துக் கொள்வோம்.

இனி ஆராய்ச்சி செய்வோம்:

1. இரு ஜீவராசிகளுக்கும் பற்களின் அமைப்பு.
சைவ ஜீவராசிகளுக்கு பற்கள் மனிதனை போல் தட்டையாக அமைந்துள்ளன.
அசைவ இனங்களுக்கு கூர்மையாக பற்கள் உள்ளன.

2. எவ்வாறு தண்ணீர் அருந்துகின்றன.
சைவ ஜீவராசிகள் அனைத்தும் மனிதனைப் போல் தண்ணீரை உறிஞ்சி தான் குடிக்கின்றன. அசைவ ஜீவராசிகள் தண்ணீரை நக்கிக் குடிக்கின்றன.

3. கால் விரல்கள்:-
சைவ ஜீவராசிகளுக்கு விரல்கள் மனிதனைப் போல் சிறியதாகவும், பாதம் தட்டையாகவும் இருக்கும்.
அசைவ ஜீவராசிகளுக்கு விரல்கள் நீளமாகவும், கூர்மையான நகங்களுடனும் இருக்கும்.

4. குடல் அமைப்பு:
சைவ ஜீவராசிகளுக்கு மனிதனைப் போன்றே 15 அடி வரை நீளமான குடலாக உள்ளது. காரணம், சைவ சாப்பாட்டில் நச்சுத்தன்மை குறைவாகவும், சத்துக்கள் அதிகமாகவும் இருப்பதால் உணவானது குடலில் சற்று அதிக நேரம் இருப்பதற்கான ஏற்பாடு எனவும், அசைவ ஜீவராசிகளுக்கு அசைவ உணவில் நச்சுதன்மை அதிகம் உள்ளதால் மிக குறைவான நேரத்தில் குடலை விட்டு வெளியேறுவதற்கு ஏற்றாற்போல் 5 அடிகள் மட்டுமே குடலின் நீளமாக உள்ளது.

5. சமநிலையான உடல் உஷ்ணம்:
சைவ ஜீவராசிகளுக்கு மனிதனைப் போன்றே உடலில் வெப்பம் அதிகமானால் தாகத்தை உண்டாக்கி அதிக தண்ணீர் பருக வைத்து வியர்வை என்ற செயலின் மூலமாக உடலை குளிர்விக்கிறது. அல்லது சமநிலையில் வைக்கிறது.
ஆனால் , அசைவ ஜீவராசிகளுக்கு இந்த ஏற்பாடு இல்லை. ஆதலால் தனது நாக்கினை தொங்க விட்டுக் கொண்டு அது தன்னை குளிர்விக்கிறது.

6. மலத்தின் தன்மை
சைவ ஜீவராசிகளுக்கு மனிதனைப் (சைவம் சாப்பிடும் மனிதன்) போன்றே மலம் கழிப்பதில் சிரமம் இருக்காது. மலம் துர்நாற்றம் வீசாது.
அசைவ ஜீவராசிகளுக்கு (அசைவம் சாப்பிடும் மனிதன் உட்பட) மலம் கழிப்பதில் சிரமமும், மலம் அதிக துர்நாற்றத்துடனும் இருக்கும்.
இதுவரை உடற்கூறு அளவில் ஆராய்ந்தோம்.

 இனி மனநிலையில் ஆராயலாம்:  
1. வாழும் முறை :
சைவ ஜீவராசிகள் ஒற்றுமையாக அதாவது கூட்டம் கூட்டமாக வாழும். மனிதனும் அவ்வாறே வாழ ஆசைப்படுகிறான்.
ஆனால் , அசைவ ஜீவராசிகள் தனித்தனியாக வாழும் இயல்புடையது. தன் எல்லைக்குள் தன் இனத்தைச் சார்ந்த இன்னொரு விலங்கினை அனுமதிக்காது.(இன்றைய மனிதனின் நிலையும் இதுதான்.)

2. இயல்பு :
சைவ ஜீவராசிகளின் இயல்பான குணம் சாந்தமாகவும், அமைதியாகவும் இருக்கும்.
அசைவ ஜீவராசிகள் வேகமாகவும், ஆக்ரோசமாகவும் இருக்கும்.

3. ஆக்கப்பூர்வமான வேலைகள் :
சைவ ஜீவராசிகளை ஆக்கபூர்வமான வேலைகளில் (உழுதல், வண்டி இழுத்தல்) ஈடுபடுத்த முடியும். அசைவ ஜீவராசிகளால் இவ்வாறான செயல்கள் எதுவும் செய்ய இயலாது.

மன இறுக்கம்:-
அசைவ உணவு சாப்பிடுபவர்கள் அதிக மன இறுக்கத்திற்கு உள்ளாவது ஏன்?
ஒவ்வாருவரின் உடலிலும் அபாயகரமான சமயங்களில் தப்பித்துக் கொள்வதற்காக (உடலிற்கு அதிக இயக்க சக்தியை தர ) சக்தி வாய்ந்த ஹார்மோன்கள் அட்ரீனல் சுரப்பியிலிருந்து சுரந்து இரத்தத்தில் கலக்கும்.

உதாரணமாக,
ஒரு நாய் நம்மை துரத்தினால் சாதாரண வேகத்தை விட பல மடங்கு வேகத்தில் நாம் ஒட உதவுவது இந்த அட்ரீனல் சுரப்பி சுரக்கும் நீராகும்.

இந்த நீரானது ஒவ்வொரு விலங்கும் வெட்டப்படும் போது அதிக அளவில் சுரந்து அதன் இரத்தத்திலும், சதைகளிலும் கலந்து இருக்கும்.
இவற்றை உட்கொள்ளும் மனிதன் தன் சாதாரண வேலைகளிலும் கூட ஏதோ அபாயத்தில் உள்ளது போன்ற உணர்வைப் பெறுகிறான்.
இதுவே மன இறுக்கமாக உருவெடுக்கிறது.
மனிதன் தன் ஆறாவது அறிவை சற்றும் பயன்படுத்தாது தனக்கு அதிக சக்தியும், பலமும் வேண்டியே தான் அசைவம் சாப்பிடுவதாக எண்ணுகிறான்.
ஆனால்,
ஆச்சரியம் என்னவென்றால், சைவத்தில் தான் அதிக சக்தியும், பலமும் உள்ளது. (சைவம் சாப்பிடும் யானைக்கு பலத்தில் என்ன குறை? )

உதாரணமாக,
சோயா பீன்ஸில் 40% சுத்தமான புரோட்டீன் உள்ளது. இது மாமிசத்தில் உள்ளதைவிட இருமடங்கும், முட்டையில் உள்ளதைவிட நான்கு மடங்கும் அதிகமாகும்
மேற்கண்ட இந்த ஆராய்ச்சியின் மூலம் நாம் அறிய வேண்டியது.
இயற்கையின் அமைப்பு படி மனிதன் உட்கொள்ள வேண்டியது சைவமே என அறிகிறோம்.
எனவே, மனிதன் ஆரோக்கியமாகவும், அமைதியாகவும், நிம்மதியாகவும், பொறுமையாகவும், பலசாலியாகவும், ஒற்றுமையுடனும்,
கோபம் இல்லாமலும்,
மன இறுக்கம் இல்லாமலும், மலச்சிக்கல் இல்லாமலும், நோய் இல்லாமலும் வாழ ஆசைப்படுவது எனில் சைவமே உட்கொள்வது காலச் சிறந்தது.


சுயமாய் சிந்தித்தே தெளிவோம்..

Tuesday, June 12, 2018

தினமும் நெல்லிக்காய் சாறு அருந்துவதால் என்ன பயன் தெரியுமா?







ஒரு மனிதனுக்கு தினசரி 50 மி.கி அளவுக்கு வைட்டமின் ‘சி’ தேவைப்படுகிறது. இந்தத் தேவையை நெல்லிக்கனி உண்பதன் மூலமாக எளிதில் பெற்றுவிட முடியும். 

நெல்லிக்காயில் நிறைந்திருக்கும் வைட்டமின் ‘சி’ ரத்தக்குழாய்களில் படிந்திருக்கும் கொலஸ்ட்ராலை சுலபமாகக் கரைத்திடும். எனவே, மாரடைப்பைத் தவிர்க்கலாம். 

தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாற்றைக் குடித்தால், உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புகளை நீக்கி, உடல் எடையைக் குறைக்க முடியும்.

நெல்லிக்காய் சாறு மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சம அளவு எடுத்துக்கொண்டு, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்த கலவையை இரவில் கூந்தலில் தேய்த்து, காலையில் கழுவிவிடலாம். விரைவில் கூந்தல் கறுப்பாக மாறும்.

நெல்லிக்கனியை தேனில் ஊறவைத்து தினமும் சாப்பிட, ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு உயரும். அழகான சருமத்தையும் பெறமுடியும். முடி கொட்டும் பிரச்சனையை முடிவு கட்டும். புதிதாக முடிகள் வளரும்.
நெல்லிக்காய் சாறு தயாரித்து, அதைப் பருகுவதன் மூலம் ரத்தசோகை, குடல் புண், சர்க்கரைநோய், கண் நோய்களிலிருந்து விடுபடலாம். கண் பார்வை கூர்மையாகும்.. மாலைக்கண் வியாதி நீங்கும்.

தேனுடன் சேர்த்து அருந்தி வந்தால், சக்கரை வியாதியிலிருந்து விடுதலை கிடைக்கும். மேலும் மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனைகளை தீர்க்கும்.

Saturday, June 2, 2018

சுண்டைக்காயின் மருத்துவ குணங்கள்!





சுண்டைக்காய் சற்று கசப்பாக இருந்தாலும், அதிக மருத்துவ குணங்களை கொண்டது. இவ் சுண்டைக்காய், பொதுவாக இருவகைப்படும். அவையாவன, மலைச் சுண்டை, ஆனைச் சுண்டை



மருத்துவக் குணங்கள்
பால் சுண்டைக் காயைச் சமைத்து உண்ணக் கபக்கட்டு, ஈளை, காசம், இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, திமிர்ப்பூச்சி வெளியேறும்.

சுண்டைக் காயை உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து காயவைத்து எண்ணெயில் வறுத்து உணவில் இரவில் பயன்படுத்தி வர மார்புச் சளி, இரைப்பிருமல் (ஆஸ்துமா), காச நோய் குணமாகும். வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.

சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளை ஓடு, மாம் பருப்பு, கறிவேம்பு, சீரகம் சம அளவாக எடுத்து வறுத்து இடித்துப் பொடியாக்கி 2 வேளை ஒரு சிட்டிகையளவு 1 கப் மோரில் கலந்து குடித்து வர பேதி, மூலம், பசியின்மை, மார்புச் சளி குணமாகும்.

சுண்டை வற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம், சம அளவாக எடுத்து பொன்னிறமாக வறுத்து சிறிது உப்பு சேர்த்து ஒரு சிட்டிகையளவு உணவுடன் 3 வேளை சாப்பிட பசி மந்தம், சுவையின்மை, மலக்குடல் கிருமிகள். மூலம் குணமாகும்.

சுண்டைக்காயைக் காயவைத்து போதுமான அளவு நன்றாகப் புளித்த மோரும், உப்பும் கலந்து காயவைத்து உலர்த்தி எடுத்து உணவுடன் உண்டு வர நீரிழிவு நோய் தணியும்.

சுண்டை வற்றல், கறிவேப்பிலை, மா விதை பருப்பு, ஓமம், நெல்லி வற்றல், மாதுளை ஓடு, வெந்தயம் சம அளவாக எடுத்து தனித்தனியே இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து 5 கிராம் பொடியை 2 வேளை 1 கப் மோருடன் கலந்து சாப்பிட தீக்குற்றத்தால் உண்ட சுவையின்மை, வயிற்றுப் புழு, நிலைக் கழிச்சல், சீதக் கட்டு நீங்கும். இதையே மார்பு சளி செரியாக் கழிச்சல், மூலம், நீரிழிவு இவற்றிற்கும் சாப்பிட கட்டுப்படும்.

சுண்டைக் காயை சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு வறுத்து, உப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை பொடித்துப் போட்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர மூலம், மந்தம், செரியாமை குணமாகும்.

சுண்டைக்காய் வேர்ப் பட்டையை பொடி செய்து தேங்காய்க் குடுக்கையில் வைக்க வேண்டும்.

இதனை ஒரு சிட்டிகை மூக்கிழுக்க, தலை நோய், நீரேற்றம், மண்டைக் குடைச்சல், ஒற்றைத் தலைவலி, மூக்கில் நீர்ப்பாய்தல் நீங்கும்.

சுண்டை வேர், தும்பை வேர், இலுப்பை பிண்ணாக்கு சம அளவாக எடுத்து இடித்துப் பொடி செய்து முகர இழுப்பு நோய் தணியும்.

சுண்டை வேர் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வலிகாய்ச்சல் குணமாகும்.

Thursday, May 31, 2018

வெங்காயத்தை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் பலன்கள்





வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம். அதில் உள்ள 'அலைல் புரோப்பைல் டை சல்பைடு' என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன.

* வெங்காயம் ஒரு சிறந்த உணவு. இதை அன்றாடம் நமது உணவில் சேர்த்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு மண்டலம் பல மடங்கு அதிகரிக்கும். உணவில் சேர்த்துக் கொண்டால் மட்டும் போதாது, தட்டில் இருந்து ஒதுக்காமல், அதை நன்கு மென்று சாப்பிட வேண்டும்.

* உணவில் வெக்காயம், பூண்டு சேர்த்து சாப்பிட டான்ஸில், ரத்த அழுத்தம், இருமல், ஆஸ்துமா, காய்ச்சல், காமாலை முதலியன குணமாகும். மேலும் கொலஸ்ட்ரால் குறையும்.

* ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுத்தும் கொழுப்பைக் கரைக்கும் ஆற்றல் வெங்காயத்துக்கு உண்டு. எனவே, மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய் உள்ளவர்கள் சின்ன வெங்காயத்தை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.

* தயிர், மோர், நெய் போன்ற மற்ற உணவுப் பொருட்களோடு சேர்த்துச் சாப்பிடும்போது, உடல் குளிர்ச்சியை ஏற்படுத்தும் குணம்கொண்டது வெங்காயம். வெங்காயத்தில் கார்போஹைட்ரேட், புரதம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் நீர்ச் சத்துக்கள் அதிக அளவில் உள்ளன.

* யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.

* முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும்.

* சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும்.

* புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.

* வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும். வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.

* வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

* பாதத்தில் தேங்காய் எண்ணெய் தேய்க்கவும். பிறகு உங்கள் அடி பாதத்தின் வளைவு பகுதியில் வெங்காயத்தை வைத்து அதன் மேல் சாக்ஸ் அணிந்துக் கொள்ளுங்கள். ஓர் இரவு முழுக்க இதை விட்டுவிடுங்கள். இது நச்சுக்கள் குறைய பெருமளவு உதவும்.

Saturday, May 26, 2018

ஏலக்காயின் நன்மைகள்


ஏலக்காயின் நன்மைகள்


ஏலக்காய் பலவகைகளில் இயற்கை மருந்தாகப் பயன்படுகிறது. ஏலக்காய் விதையில் புரதச்சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, சோடியம், வைட்டமின்கள் ஏ, பி, சி அடங்கியுள்ளன.

மேலும் இவை பித்தம் அகற்றி, நரம்புத் தளர்ச்சியை நீக்கி, வலுப்படுத்தும் தன்மையது. ஏலப்பொடியுடன், மிளகுப்பொடி சேர்த்து, சிறிது துளசிச்சாறில் சேர்த்துக் குடித்தால், கடும் கபம் இளகி வெளிப்பட்டு, நலம் உண்டாகும். பக்க விளைவு இல்லாத இயற்கை மருந்து இது.

ஏலக்காய் தூள், டீ தூள் இரண்டையும் சேர்த்து டீ தயாரித்து அத்துடன் தேன் சேர்த்து, தினம் இருவேளை பருகி வர, நரம்புகள் வலுப்படும். தேனுடன், ஏலக்காய்தூள் கலந்து, சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி நீங்கும். நரம்புகள் நன்கு இயங்கும். வலிமை அடையும்.

அன்னாசிப்பழச்சாறுடன், ஏலக்காய்தூள் சேர்த்து பருகிவர, மூத்திரக் கோளாறுகள் குணமாகும். நீர்கடுப்பு நீங்கும். சிறுநீர் பிரியாமல் அவதிப்படுபவர்களுக்கு, சிறுநீர் தாராளமாகப் பிரியும்.

சுக்கு, ஏலக்காய், கிராம்பு இவைகளுடன் சிறிது நீர் தெளித்து மைய்ய அரைத்து, சூடாக்கி கை, கால் மூட்டுகளின் மீது பூசி வர, மூட்டுவலி குணமாகும். ஆரம்பநிலை வாதம் நீங்கும்.

ஏலப்பொடி, சீரகப்பொடி, மல்லிப்பொடி இவைகளுடன், சிறிது கருப்பட்டி பொடித்திட்டு கலந்து, ஒரு நெல்லிக்காய் அளவு வீதம் காலை மாலை தின்றுவர, பித்த கிறுகிறுப்பு மாறும்.

செவ்வாழைப்பழத்துடன், சிறிது ஏலக்காய்தூள் சேர்த்துச் சாப்பிட்டால் மாதவிடாய்க் கோளாறுகள் ஒழுங்குபடும். வெல்லத்தைப் பொடித்து நீரில் கலந்து, அத்துடன், எலுமிச்சைச்சாறு, ஏலக்காய் தூள் சேர்த்து பானம் தயாரித்து பருகினால் கோடைத்தாகம் நீங்கும். உடல் குளிர்ச்சி அடையும். சோர்வு மாறி புத்துணர்ச்சி ஏற்படும்.

உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் கொள்ளு









'இளைத்தவன் எள்ளு விதைப்பான், 

கொழுத்தவன் கொள்ளு விதைப்பான்' 

என்பது பழமொழி.

உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் சக்தி கொள்ளுக்கு உள்ளதால் அவ்வாறு கூறப்பட்டுள்ளது.

கொள்ளுவில் அதிகளவு அயர்ன் மற்ற பருப்புகளை விட அதிகமாக உள்ளது.
இதனால் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது. இது கொஞ்சம் உடலுக்கு சூடு ஏற்படுத்தும் என்பது உண்மை.

கொள்ளு ஊற வைத்த தண்ணீரில் மிளகு, சீரகம் சேர்த்து ரசம் வைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளுவை சூப் வைத்து கொடுத்தால், சளி காணாமல் போய்விடும்.

சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும்.

கொள்ளு பருப்பை ஆட்டி பால் எடுத்து (தண்ணீர்க்கு பதிலாக) அதில் சூப் வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும்.

கொள்ளை அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டால் ரசம் வைக்கும்போது பயன்படுத்தலாம். நாம் எப்போதும் வைக்கும் ரசத்தில் ஒரு ஸ்பூன் கொள்ளு பொடியை போட்டால் அருமையாக இருக்கும். இ‌ப்படி செ‌ய்ய முடியாதவ‌ர்க‌ள் கொ‌ள்ளு ரச‌ம், கொ‌ள்ளு துவைய‌ல், கொ‌ள்ளு குழ‌ம்பு ஆ‌கியவை வை‌த்து அ‌வ்வ‌ப்போது உ‌ண்டு வ‌ந்தாலு‌ம் உட‌ல் எடை குறையு‌ம்.
 
புரதம் நிறைந்த ஒரு தானியம் கொள்ளு. நமது உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலை செய்யவும், பழுதடைந்த திசுக்களை சரி பார்க்கவும் புரதம் மிக அவசியம்.

தினம் காலையில் நொய்யரிசியும் கொள்ளும் சேர்த்துக் கஞ்சி செய்து குடித்தால், அடுத்தடுத்த வேளைகள் சாப்பிடப் போகிற உணவின் கொழுப்பினால் உடலுக்கு பாதிப்பு வருவது தவிர்க்கப்படும்

Friday, May 18, 2018

பப்பாளி (Papaya)




பப்பாளி:

யாருக்கு நல்லது: 
மூட்டுவலி உள்ளவர்களுக்கும், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும்.

யாருக்கு வேண்டாம்:
கர்ப்பிணிப் பெண்கள் முதல் எட்டு வாரங்களுக்கு தவிர்க்கவும்.

பலன்கள்: சருமத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கும். குடல் பூச்சிகளைச் அழித்துச் சுத்தம் செய்யும்.





பயன்கள்:

* பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

* பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.

* பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.
* நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

* பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.

* பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.
* பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.

* பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.

* பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.

* பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.

* பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.

* பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.