Shop at Amazon

Showing posts with label ஆன்மிகம். Show all posts
Showing posts with label ஆன்மிகம். Show all posts

Sunday, December 30, 2018

ஓம் மந்திரத்தில் இத்தனையும் உள்ளது

இதை படிக்கும் முன் ஒரு முறையாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டு படிங்க..

1. உலகளாவிய ஒலியான ஓம் என்னும் மந்திரம் ' ஆ ' , 'ஓ ' ,'ம்' ஆகிய மூன்று அசைகளால் உருவானது .
நாம் 'ஆ' என்று ஓசை எழுப்பும்போது  உடம்பின் கீழ் பகுதி முதல் வயிற்றுப் பகுதிவரை இயக்கம் பெறுகிறது. 'ஓ' என்று உச்சரிக்கும்போது மார்புப் பகுதிகள்  இயக்கம் பெறுகின்றன. 'ம்' என்று ஒலி முகத்தசைகள் மற்றும் மூளைப் பகுதியைத்
தூண்டும்.

2. 'ஓம்' எனும் மந்திரம் நம்மை தியான நிலைக்குக் கொண்டு செல்கிறது. உடலையும் மனதையும் தளர்த்தி, ஆற்றலை சேமிக்கச் செய்கிறது.

3.எண்ண ஓட்டங்களையும், கவனச்சிதறல்களையும் சரிப்படுத்தி மனதை
ஒருமுகபடுத்துகிறது.

4. ஓம் என்னும் மந்திரத்தை,  11 முதல் 18 முறை உச்சரித்துவிட்டுச் தூங்கசென்றால், ஆழமான உறக்கம் கிடைக்கும். ஆழ்ந்த உறக்கத்தில்தான் மூளைக்கு அவசியமான 'மெலடோனின்' என்ற ஹார்மோன் சுரக்கிறது.

5. இது உங்களை எதிர்மறை எண்ணங்களில் இருந்து வெளிகொண்டுவந்து நேர்மறை எண்ணங்களைப் பெருக்குகிறது.

6. இந்த மந்திரத்தை உச்சரிப்பதால் உடலுக்கு அதிகப்படியான ஆக்சிஜன் கிடைப்பதோடு,  ரத்த ஓட்டமும் சீராகிறது. இதயமும் செரிமான மண்டலமும் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது.

7. கவலைகள் மற்றும் பதற்றத்தால் பல நேரங்களில் கோபம், வருத்தம், விரக்தி, ஏமாற்றம்  ஆகியவற்றை நாம் வெளிப்படுத்துகிறோம். பின்பு, அதன் விளைவுகளை எண்ணி வருந்துகிறோம். 'ஓம்' என்று உச்சரித்துவர நாளடைவில் நம் எண்ணங்களின் மீது சுயக்கட்டுப்பாடு அதிகரிக்கிறது. இதனால், தேவையற்ற சிந்தனைகள், எண்ணங்கள், உணர்வுகள் உருவாவது தடுக்கப்படுகிறது.

8. சோர்வாகவும், களைப்பாகவும், பணியில் சரியான கவனம் செலுத்த முடியாமலும்  இருப்பவர்கள், தினமும் காலை எழுந்தவுடன் 20 நிமிடங்கள் 'ஓம்' என்ற மந்திரத்தைச் சொல்லிவர மூளையில் 'எண்டார்பின்'  என்னும் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது. இதனால், நாள் முழுதும் உற்சாகமான, மகிழ்ச்சியான மனநிலை கிடைக்கும்.

9. 'ஓம்' மந்திரத்தை தொடர்ந்து சொல்லிவர, ஹார்மோன் குறைபாடுகள் சரியாகும். மாதவிடாய் காலங்களில் மற்றும் மெனோபாஸ் காலங்களில் மன ஊசலாட்டம் (மூட் ஸ்விங்ஸ்) கட்டுப்படும்.

10. 'ஓம்' என்று தொடர்ந்து உச்சரித்துக்கொண்டிருந்தால், உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைத்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாவதுடன், இன்சுலின் சுரப்பும் சீராக உள்ளது என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிந்துள்ளது

Monday, September 24, 2018

மக்கள் இப்படியும் பேசுவார்கள், அப்படியும் பேசுவார்கள்!




அறுவடை முடிந்த ஒரு வயல் வரப்பில் பட்டினத்தார் தலை வைத்து படுத்திருந்தார். உடம்பு முழுவதும் நெற்பயிரின் அடித்தாள் குத்தியது. துறவியான அவர் அதனைப் பொருட்படுத்தவில்லை.
-
அப்போது இரு பெண்கள் தண்ணீர் எடுக்க அந்த வழியாக சென்றனர். பட்டினத்தாரைக் கண்டதும் ஒருத்தி, “காவி கட்டிய துறவி என்றாலும் இப்படி அறுவடை செய்த வயலில் படுத்திருக்கிறாரே.. பாவம். உடம்பெல்லாம் வலிக்குமே! ” என்றாள். அதற்கு மற்றொருத்தி, “துறவி என்றாலும் தலையணை தேவைப்படுகிறதே.... வரப்பின் மீது தானே தலை வைத்து தானே தூங்குகிறார். இப்போதெல்லாம் துறவிகளுக்கு கூட சுகம் தேவைப்படுகிறது, என்று கேலி பேசினாள். பட்டினத்தார் காதில் இது விழுந்தது.
-
உடனே வரப்பில் இருந்து விலகி தரையில் படுத்துக் கொண்டார். தண்ணீர் எடுத்த பெண்கள் மீண்டும் அந்த வழியாக வந்தனர். பட்டினத்தாரைக் கண்டதும்,
பார்த்தாயா இவர் உடல் சுகத்தை விரும்பவில்லை,அதனால்தான் வரப்பிலிருந்து தலையை எடுத்துவிட்டார் என்றாள் ஒருத்தி
“இந்த துறவிக்கு இன்னும் பக்குவம் வரவில்லை போலும். அதனால் தான் மற்றவர்கள் தன்னைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்று ஒட்டுக் கேட்டிருக்கிறார். இவரே இப்படி இருந்தால் சாதாரண மக்களின்நிலையை கேட்கவா வேண்டும்! என்றாள் இன்னொருத்தி
-
இதைக் கேட்ட பட்டினத்தார், உலகம் இப்படித்தான் ஆயிரம் நாக்குடன் பேசும். இனி என் மனதிற்கு எது நியாயம் எனத் தோன்றுகிறதோ, அதையே செய்வேன்,” என முடிவெடுத்தார்.