1. 'செயல், விளைவு - நல்லதா? கெட்டதா?' என்று ஆராயாமல் உயர் அதிகாரிகளின் கட்டளைகளுக்கு அப்படியே கீழ்ப்படிபவர்கள்.
Shop at Amazon
Sunday, December 30, 2018
'சமூகம்' பெரிதும் பாதிக்கப்படுகிறது எப்படிப்பட்ட மனிதர்களால்?
1. 'செயல், விளைவு - நல்லதா? கெட்டதா?' என்று ஆராயாமல் உயர் அதிகாரிகளின் கட்டளைகளுக்கு அப்படியே கீழ்ப்படிபவர்கள்.
Sunday, December 16, 2018
திருமணமான பெண் தன் தாய்க்கு எழுதிய கடிதம் அனைவரும் கட்டாயம் படிங்க!
அன்புள்ள அம்மா,
எல்லா பெண்களைப் போலவே கல்யாண கனவில் களித்து மனதைக் கொள்ளையடித்தவரை உங்கள் சம்மதத்துடன் குதூகலமாக ஆடம்பரமாக திருமணம் புரிந்து கொண்டேன் .
பின்னர் தான் தெரிந்தது வாழ்க்கை சினிமாவில் போடும் சுபத்திற்கு பின்பு தான் தொடங்குகிறதென்று.
வாழ்க்கையில் விரும்புவது விரும்பப் படுவதென்பதையும் தாண்டி நிறைய இருக்கிற்து என்று தெரிய வருகிறது
எத்தனை பொறுப்புகள்?
எத்தனை சுமைகள்?
எத்தனை எதிர் பார்ப்புகள்?
எத்தனை தியாகங்கள்?
எத்தனை ஏமாற்றங்கள்?
நினைத்த நேரத்தில், நிம்மதியாக முழு தூக்கம் கலைந்த நேரத்தில் எழுந்திருக்க முடியவில்லை..
குடும்பத்தில் மற்றவர் விழிக்கும் முன் நான் விழித்து என் வேலைகளை ஆரம்பிக்க வேண்டி இருக்கு..
உன்னோடு இருந்த நாட்களில் எனக்கென்ற விருப்பமான உடைகளில் சிட்டாக பறந்து கொண்டிருந்தேன்..
இங்கே அவர்கள் விரும்பிய உடையில் வலம் வருவதையே விரும்புகின்றனர்..
இதோ என் தோழியை/தோழனைப் பார்த்து விட்டு வருகிறேன் என்று உன்னிடம் சொல்லிவிட்டு சென்றது போல் சொல்லிச் செல்ல இயலவில்லை.
என் தேவைகளை விட அடுத்தவர் தேவைகளை முன் வைத்தே நான் நடந்து கொள்ள வேண்டி இருக்கு..
நினைத்த நேரத்தில் தூங்க கூட முடிவதில்லை.
எனக்கு விருப்பமான டிவி நிகழ்ச்சியைக் கூட பார்க்க முடிவதில்லை..
சில நேரங்களில் எதற்கு இந்த திருமணம் என்று அலுப்பாக இருக்கிறது..
இந்த திருமணம் என் சுதந்திரதை அல்லவா பறித்து விட்டது..
என் சுயத்தை அல்லவா சூறையாடி விட்டது
உன்னிடம் இருந்த போதே மிக மகிழ்வாக இருந்தேனே!
உன்னிடம் திரும்ப வந்து விடலாமா என்று கூட தோன்றுகிறது.
உன் மடியில் படுத்து கொள்ளனும் போல இருக்கிறது அம்மா
வேண்டாம் வேண்டாம் என்று நான் சொல்ல சொல்ல ஒரே ஒரு இட்லி போட்டுக்கோ..
உனக்கு பிடிக்குமேன்னு பால் கோவா செஞ்சேன்னு நீ பின்னாலயே வந்து வந்து ஊட்டி விடுவதை கொஞ்சிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.
எந்த கவலையும் இல்லாமல் உன் அரவணைப்பில் உன் கொஞ்சலில் உன் பாதுகாப்பிலேயே இருந்திருக்க கூடாதா என்று தோன்றுகிறது..
ஆனால் அடுத்த கனமே நீயும் என் வயதில் என்னை மாதிரி தானே உணர்ந்திருப்பாய்.
நீ உன் திருமணத்தில் செய்த தியாகங்கள் தானே எனக்கு இந்த அழகிய நினைவுகளைக் கொடுத்திருக்கிறது..
நீ அன்று நான் இன்று நினைப்பது போல் நினைத்திருந்தால் நான் இன்று இருப்பேனா?
நீ செய்த தியாகங்களையும் உழைப்பையும் பாசத்தையும் எதிர்பாரா அன்பையும் நான் திருப்பித் தர வேண்டாமா.. என்று நினைத்து கொள்கிறேன்..
அதுவும் உன்னிடம் இருந்து கற்றது தான்..
அப்படி நினைக்கும் போது வாழ்க்கையே எளிதாக தெரிகிறது.. தெளிவாக புரிகிறது
காலம் செல்ல செல்ல நீ உன் குடும்பத்தை நேசித்தது போல் நானும் என் குடும்பத்தை நேசிக்க ஆரம்பித்து விடுவேன்..
நீ செய்த தியாகங்களை நானும் செய்ய தயாராகி விடுவேன்..
உனக்கு நாங்கள் கொடுத்த மன உறுதியை திடத்தை என் குடும்பமும் எனக்கு தரும்.
ஆமாம் மா நீ எனக்கு கொடுத்ததை நானும் என் குடும்பத்திற்கு கொடுக்க தயாராகி விட்டேன்..
நன்றிம்மா…
என்றும் அன்புடன்…!!
உன் தேவதை
*பெண் அன்பில் ஒரு தாய்*
*பெண் அழகில் ஒரு தேவதை*
*பெண் அறிவில் ஒரு மந்திரி*
*பெண் வெறுப்பில் ஒரு நெருப்பு*
*பெண் வெற்றிக்கு ஒரு மாலை*
*பெண் நட்பில் ஒரு நேர்மை*
*பெண் கண்டிப்பில் ஒரு ஆசிரியர்*
*மொத்தத்தில் பெண் தியாகத்தின் மறு உருவம்*
Saturday, November 10, 2018
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க
16 - என்னவென்று பார்ப்போம்
1. புகழ்
புகழோடு வாழ வேண்டும்
2. கல்வி
கண்போன்ற கல்வியை கற்று வாழ்தல் வேண்டும்
3. வலிமை
வலிமையுடன் பொலிவுடன் வாழ வேண்டும்
4. வெற்றி
வெற்றி, வீரத்துடன் வாழ வேண்டும்
5. நன் மக்கள்
நன்மக்களை பெற்று வாழவேண்டும்
6. பொன்
பொன்னோடும், பொருளோடும் வாழ வேண்டும்
7. நெல்
உழவுசெய்து நெற்களஞ்சியத்துடன் வாழ வேண்டும்
8. நல் விதி
நல்ல ஊழ் நமக்குத் துணை நிற்கவேண்டும்
9. நுகர்ச்சி
பாடுபட்டு தேடிய பல னை அனுபவிக்க பாக்கியம் வேண்டும்
10. அறிவு
பிறர் துன்பம் போக்கிட பரந்த மனம் வேண்டும்
11. அழகு
பிறர் நம்மைக்கண்டு பழிக்காமல் வாழ்தல் வேண்டும்
12. பெருமை
ஆடம்பரமில்லா நற்பண்புடன் வாழ வேண்டும்
13. இனிமை
இனிமையோடு இல்லறத்தில் வாழ வேண்டும்
14. துணிபு
அடுத்தவர்களுக்கு அஞ்சாமல் வாழ வேண்டும்
15. ஆரோக்கியம்
ஆரோக்கியத்துடன் சுகமாக வாழ வேண்டும்
16. நீண்ட ஆயுள்
நீண்ட ஆயுளுடன் முதிர்ந்த வயதோடு வாழ வேண்டும்
Friday, October 5, 2018
வாழ்வியல் உண்மைகள் #1
தெரிந்து மிதித்தாலும்
தெரியாமல் மிதித்தாலும்..,
மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்...!!
நினைப்பது போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை..,
அழகாய் அமைந்த வாழ்க்கையைக் கூட சிலருக்கு வாழத் தெரிவதும் இல்லை..!
சந்தோஷமா வாழறேன்' னு காட்டிக்கொள்ள தான் பணம் தேவைப்படுகிறது..,
உண்மையில், சந்தோஷமா வாழ பணம் ஒரு பொருட்டே இல்லை
நோய் வரும் வரை உண்பவன்,
உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டி வரும்!
பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல...
ஆனால், செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல..!
பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா? செலவு செய்யுங்க.....!
உங்களின் மதிப்பு தெரியவேண்டுமா?.. கடன் கேளுங்க.!
பிச்சை போடுவது கூட சுயநலமே...,
புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால்...
அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை...,
ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது.
வாழ்க்கையை கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு...,
அதற்கு அவமானம் தெரியாது
விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்கும்..!!
வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்".
வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "குளம்"
திருமணம் -
ஒரு ஆண் நல்ல கடந்தகாலம் கொண்ட பெண்ணையும்...,
ஒரு பெண் நல்ல எதிர்காலம் கொண்ட ஆணையும் தேடுவது.!!
முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள்...,
பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள்.
அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும்.
மீண்டும் ஒரு முறை முகம் பார்த்து பேசவேண்டியிருக்கும்
என்ற ஒரு காரணத்திற்காகவே,
நம்முடைய பல கோபங்கள் தற்கொலை செய்துகொள்கின்றன...!
நேர்மையாக சம்பாதித்த பணம் பெரும்பாலும் கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை.
இவ்வுலகில் வாழ கற்றுக் கொண்டதை விட...,
வலிகளை மறைத்து சிரிக்க கற்றுக் கொண்டதே அதிகம்..............!
பகலில் தூக்கம் வந்தால்,
உடம்பு பலவீனமா இருக்குனு அர்த்தம்..!!
இரவு தூக்கம் வரலைனா மனசு பலவீனமா இருக்குனு அர்த்தம்...........!
துரோகிகளிடம் 'கோபம்' இருக்காது
கோபப்படுபவர்களிடம் 'துரோகம்' நிச்சயமாக இருக்காது..
தன்னை நல்லவராக காட்டிக் கொள்ள *அடுத்தவரை கெட்டவராகச் சித்தரிக்கும் எவரும் நீண்ட நாள் நல்லவர் வேடத்தில் சுற்ற முடியாது..*
Tuesday, September 25, 2018
சிந்தனையில் வைக்க வேண்டிய சில விடயங்கள்
பேசியே வளர்க்காதீர்கள்.
ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.
நடந்ததைக் கிளறாதீர்கள்.
பிடிவாதம் காட்டாதீர்கள்.
வீண்வார்த்தை சொல்லாதீர்கள்.
தர்க்கம் விரும்பாதீர்கள்.
விவகாரம் செய்யாதீர்கள்.
விரோதம் பெறாதீர்கள்.
சத்தியமே பேசுங்கள்.
சரியானதைச் செய்யுங்கள்.
என்னவென்று கேளுங்கள்.எவ்வளவு சீக்கிரம் தீர்வு வரும் பாருங்கள்.
விரைவாக முடியுங்கள்.
வேறு வேலை பாருங்கள்.
Wednesday, July 25, 2018
பெண்மையைப் போற்றும் ஆண்களுக்கு சமர்ப்பணம்
எங்காவது வெளியே சென்றிருக்கும் போது சிறுநீர் கழிப்பதற்காகக் கழிப்பிடம் இல்லாமல் வீடு செல்லும் வரை அடக்கிக் கொண்டிருக்க வேண்டிய அவஸ்தையை... (இதனால் தான் பல பெண்கள் பின்னர் பல சிறுநீர் நோய்க்கு உட்படுகிறார்கள்)
பயணத்திலோ, அலுவலகத்திலோ அல்லது நடந்து சென்று கொண்டிருக்கும் போதோ அவசரமாய் கைப்பையில் தேடி நாப்கினை எடுத்து அதை மாற்ற இடம் தேடி அலையும் கொடுமையை...
ஆள் நடமாற்றம் அதிகமற்ற ஒரு சாலையில் நான்கு ஆண்கள் கூட்டமாய் நிற்கையில் அவர்களை கடந்து செல்ல வேண்டிய ஒரு பெண்ணின் உளவியலை....
பயணத்திலோ கூட்ட நெரிசலிலோ பாலுக்கு அழும் குழந்தைக்குப் பால் கொடுக்க முடியாத வேதனையான நிலையை....
மாதவிலக்கு நாட்களில் கூட பல கிலோமீட்டர் நடந்தோ அல்லது நாள் பூராகவும் நின்றோ வேலை பார்க்க வேண்டிய துயரம் நிறைந்த நாட்களை...
அது ஒருபோதும் ஆண்களால் முடியாது.... இவ்வளவையும் வெகு சாதாரணமாய் அனுதினமும் கடந்து செல்லும் பெண்களின் வலிமையை ஆண்களால் ஒருபோதும் பெற முடியாது...
இந்த வலிமையைப் பெற பெண்கள் கொஞ்சம் லூசுத்தனமாய் இருந்து தான் ஆக வேண்டும் அல்லது அப்படி இருந்தால் தான் அதை எல்லாம் தாங்கிக் கொள்ள முடியும்...
உலகத்தின் அத்தனை கசப்புகளையும் மனதில் சுமந்துக் கொண்டு புன்னகையுடன் செல்லும் ஒரு பெண்ணை இனி சாலையில் சந்திக்க நேர்ந்தால் அவர்களுக்கு நீங்கள் எந்த மரியாதையையும் தர வேண்டாம்.. அவர்களை அவர்கள் பாதையில் அமைதியாக செல்ல வழி விடுங்கள்...
என் சகப் பெண்களை நல்ல தோழியர்களாகக் கொள்வோம்.
என் சக தோழியர்களைக் கண்ணியமாக நடத்துவோம்.
என் தாய்க்கும், சகோதரிக்கும் கொடுக்கும் அனைத்து மரியாதைகளையும் பெண்களுக்குக் கொடுப்போம்.
எந்தச் சூழலிலும் கண்ணியக் குறைவாக பெண்களிடம் நடந்து கொள்ள மாட்டோம்.
பெண்களுக்கு எதிரான எந்தவிதமான வன்முறையிலும் ஒருக்காலும் ஈடுபட மாட்டோம்.
பெண்களை நுகர்வுப் பொருளாக நடத்த மாட்டோம்.
பெண்களின் உணர்வுகளை மதிப்போம்.
பெண்மையைப் போற்றுவோம்.
மானுடத்திற்கான சமத்துவத்தைக் கடைப்பிடிப்போம்.
பெண்மையை போற்றுவோம்..
- ந. சண்முக சூரியன்
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.
Sunday, July 15, 2018
திருப்பூரில் நடந்த 100% ‘இயற்கை’ திருமண விழா!
குடிநீராக மழை நீர், குழந்தைகளுக்கு பனை வண்டி, செம்பு டம்ப்ளரில் தண்ணீர், பாரம்பரிய உணவுவகைகள், என்று எல்லா விஷயத்திலும் இயற்கை மற்றும் பாரம்பரியத்தை கலந்து அசத்தினர் இந்த திருப்பூர் குடும்பத்தார்.
திருப்பூர் பின்னலாடை நிறுவன பின்புலமாகக் கொண்டிருந்தாலும், அடிப்படையில் விவசாய பின்னணி கொண்ட குடும்பம் லோகேஸ்வரன் மற்றும் கீதாஞ்சலி உடையது. மணமகள் கீதாஞ்சலியின் அப்பா ரவி ஒரு இயற்கை ஆர்வலர். பெருந்துறை அருகே சிறிய கிராமத்தில் விவசாயப் பின்னணியில் வளர்ந்தவர். தனது கிராமத்தில் சாயப்பட்டறை நீரால் ஏற்படும் பாதிப்புகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர். மண்வளத்தைக் கெடுக்கும் பிளாஸ்டிக் பைகளுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருபவர்.
உபதேசம் எல்லாம் ஊருக்கு மட்டுமல்ல என தன் மகள் திருமணத்தையும் ஒரு இயற்கைத் திருவிழாவாக பாரம்பரிய முறைப்படி நடத்த திட்டமிட்டார் ரவி. இதற்கு மணமகன் வீட்டிலும் சம்மதம் தெரிவிக்கவே, நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு திருமணத்திற்கான முன்னேற்பாடுகளை ஆரம்பித்தனர்.
முதல் வேலையாக தங்களுக்கு சொந்தமான நிலத்தில், செயற்கை உரங்களை தவிர்த்து இயற்கையான முறையில் திருமணத்திற்கு தேவையான காய்கறிகளை பயிரிட்டு வளர்க்கத் தொடங்கினர். அதில் விளைந்த காய்கறிகளை மட்டுமே வைத்து அவர்கள் திருமணத்திற்கு உணவு தயாரித்துள்ளனர். கூடுதலாக ஆர்கானிக் முறைப்படி எங்கெங்கு விவசாயம் செய்யப்படுகிறது என்பதை விசாரித்து திருமணத்திற்கு தேவையான பொருட்களை வாங்கியுள்ளனர்.
“திருமணத்தை எளிமையாக, அதே சமயத்தில் பாரம்பரிய முறைப்படி, பிளாஸ்டிக் இல்லாத இயற்கைத் திருவிழாவாக நடத்த வேண்டும் என்பது தான் எங்கள் ஆசை. இதற்கு சம்பந்தி வீட்டில் சம்மதம் தெரிவிக்கவே மகிழ்ச்சியோடு வேலைகளை ஆரம்பித்தோம்.”
நாங்கள் புள்ளி வைக்கத் தொடங்கியதுமே, எங்களைச் சுற்றி இருந்தவர்கள் அதை வைத்து கோலம் போட உதவினர். அதாவது, இன்னும் இதையெல்லாம் திருமண விழாவில் சேர்க்கலாமே என பலரும் பல ஐடியாக்கள் கொடுத்தனர்.
“அப்படியாக உறவினர் ஒருவர் கொடுத்த ஐடியா தான் மழை நீரில் விருந்து தயாரிப்பது. அதற்கு திருமணத்திற்கு வந்திருந்தவர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது,” என்கிறார் ரவி.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்ற பெயரில் சத்துக்கள் நீங்கிய குடிநீரைத் தர விரும்பாத திருமண வீட்டார், அதிலும் புதுமையான மாற்றத்தை செய்ய விரும்பினர். அதன்படி, மழை நீரை சேமித்து அதனையே சமையலுக்கும், திருமணத்திற்கு வந்தவர்களுக்கும் அருந்த கொடுத்தனர். நீர் அருந்துவதற்கான குவளைகளைக் கூட பிளாஸ்டிக் அல்லது பேப்பர் கப்களாக இவர்கள் பயன்படுத்த விரும்பவில்லை. செம்புக் குவளைகளிலேயே மழை நீரை திருமணத்திற்கு வந்தவர்களுக்கு அருந்தக் கொடுத்துள்ளனர். இதற்காக மழை நீர் சேமிப்பவர்களிடம் சென்று சுமார் ஒன்றரை லட்சம் லிட்டர் மழை நீரை விலை கொடுத்து வாங்கியுள்ளனர்.
அடுத்தது உணவு. திருமண விருந்திற்கு தேவையான அனைத்து காய்கறிகளும் ஆர்கானிக் முறையில் கிடைத்துவிட, மசாலாப் பொடிகளையும் இவர்களே வாங்கித் தயாரித்துள்ளனர். இதனால் கலப்படம் இல்லாத மசாலாப் பொடிகளைப் பயன்படுத்தி, ஆர்கானிக் காய்கறிகளைக் கொண்டு, மழை நீரில் சமைக்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மிகவும் மகிழ்ச்சி.
சாப்பாட்டில் பனைகருப்பட்டி பர்பி, பாசிப்பருப்பு மாவு உருண்டை, வாழைப்பழப்பூ வடை, குதிரைவாலி அரிசியில் செய்யப்பட்ட சாம்பார் சாதம், கருப்பட்டி இனிப்பு, முக்குளிகை டீ என யாரும் அதிகம் சாப்பிட்டிராத சிறுதானிய மற்றும் பாரம்பரிய உணவுகள் இடம் பிடித்திருந்தன. தலைவாழை இலையில் உணவும், பாக்குமட்டை தட்டில் இது போன்ற நொருக்குத்தீனி வகைகளும் தரப்பட்டது.
“ஆரம்பத்தில் இவை அனைத்தையும் செய்து முடிக்க முடியுமா, இது சாத்தியமாகுமா என்ற அச்சம் உள்ளூர இருந்தது. எனவே, ஜூலை முதல் தேதியில் திருமணத்தன்று முன்னோடியாக சிலவற்றைச் செய்து பார்த்தோம். நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் அனைவரும் மகிழ்ச்சி. அந்த உத்வேகத்திலேயே ஜூலை 4ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சியில் பாரம்பரிய உணவு, சந்தை என அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்ய முடிந்தது,” என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் ரவி.
முன்பெல்லாம் திருமணத்தின் போது பெண்களுக்கு பசு மாடுகளைச் சீராகத் தருவது தான் வழக்கமாம். ஆனால், இன்றோ பெரும்பாலான திருமண மண்டபங்களில் மணமகளுக்கு சீராக தரும் கார் ரிப்பன் கட்டப்பட்டு நிற்பதைப் பார்க்கலாம். எனவே, இதிலும் மாற்றாக சிந்தித்த ரவி,
காருக்குப் பதில் தனது மகளுக்கு இரண்டு காங்கேயம் பசுக்களை, கன்றுக்குட்டியோடு சீராக தந்துள்ளார். மண்டப வாசலிலேயே அந்த மாடுகள் கட்டிப் போடப் பட்டிருந்தன.
குழந்தைகளின் கால்களை மொபைல் போன்கள் கட்டிப் போட்டுவிட்டது என்றே கூறலாம். அந்தளவிற்கு எங்கு சென்றாலும் செல்போனில் விளையாடுவது தான் குழந்தைகளுக்கு முக்கியப் பொழுதுபோக்காக உள்ளது. ஆனால், தங்கள் வீட்டுத் திருமணத்தில் குழந்தைகள் ஆடிப்பாடி விளையாட வேண்டும் என திட்டமிட்ட ரவி, பனவண்டி செய்து குழந்தைகளுக்கு அன்பளிப்பாக வழங்கினார்.
இதனால் வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த குழந்தைகள் உற்சாகமாக மண்டபம் முழுவதும் பனை வண்டியை ஓட்டி விளையாடிய காட்சியைக் கண்டு பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதற்கென மண்டபத்தில் ஒரு பகுதியில் ஒருவர் அமர்ந்து, குழந்தைகள் கேட்க கேட்க புதுப்புது வண்டிகளை செய்து தந்துள்ளார்.
சாப்பிட்டு முடித்தவர்கள் வெளியே வரும் பாதையில், அவர்கள் கண்களைக் கவரும் வண்ணம் இயற்கை சந்தை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இதில் ஆர்கானிக் பொருட்கள், பாக்கு மட்டையில் தயாரிக்கப்பட்ட பொருட்கள், மண்பானைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவை இடம் பிடித்திருந்தன. இதனால் திருமண வீட்டிற்கு வந்திருந்தவர்களுக்கு சந்தையின் அனுபவமும் இலவசமாகக் கிடைத்தது. ஒரே இடத்தில் தரமான பல பொருட்கள் கிடைத்ததால், மகிழ்ச்சியுடன் தங்களுக்குத் தேவையானதை வாங்கிச் சென்றனர்.
சாப்பிட்டு முடித்தவுடன் கை துடைக்க டிஷ்யூ பேப்பர் தராமல், அதற்குப் பதில் சிறு கைக்குட்டை போன்ற காட்டன் துணிகளைத் தந்தனர். அதிலும் விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், திருமணத்திற்கு வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அனைத்தும் காட்டன் துணியில், கையால் வரையப்பட்டவையே ஆகும்.
“நாங்கள் வரவேற்புக்கு அழைப்பிதழ் கொடுத்து அழைத்தது என்னவோ 2,500 பேர் தான். ஆனால், பத்திரிகையில் இருந்த இயற்கைத் திருவிழா விபரத்தால் கவரப்பட்டு, நேரில் வந்து மணமக்களை ஆசிர்வதித்தவர்கள் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேல். சுருக்கமாகச் சொல்வதென்றால் இந்த திருமணத்தால் எங்களுக்கு கூடுதலாக 3 ஆயிரம் உறவினர்கள் கிடைத்துள்ளனர்,” என மகிழ்ச்சியுடன் கூறுகிறார் ரவி.
இப்படிப் பார்த்து பார்த்துச் செய்வதென்றால் செலவும் அதிகமாக இருக்குமே என்பவர்களுக்கு இல்லை என்பது தான் ரவியின் பதில். காய்கறிகள் உட்பட பல அவர்களது தோட்டத்தில் இருந்தே கிடைத்துள்ளது. வாண வேடிக்கை, பிளக்ஸ், பேனர், ருசிக்காக செயற்கை வண்ணங்கள் சேர்க்கப்பட்ட உணவு என மற்ற திருமணங்களுக்கு ஆகும் அதே செலவு தான் இந்த இயற்கைத் திருமணத்திற்கும் ஆனதாக ரவி கூறுகிறார்.
ரவியின் இந்த முயற்சிக்கு பெரும் உறுதுணையாக இருந்தவர் ராஜ்குமார். ரவியின் பின்னலாடை நிறுவன ஊழியரான ராஜ்குமாரின் கீழ் பத்து பேர் கொண்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொறுப்புகள் வழங்கப்பட, அவர்கள் அனைவரையும் மேற்பார்வையிடுவது ராஜ்குமாரின் வேலை. அவர்கள் அனைவரும் தங்களுக்கு அளிக்கப்பட்ட கடமையை கண்ணும் கருத்துமாக செய்திருந்தனர். இதற்கு விழாவுக்கு வந்திருந்தவர்கள் முகத்தில் இருந்த மகிழ்ச்சியே சான்று.
“இந்த ஒரு திருமணத்தை இயற்கை முறையில் செய்து முடித்தது மட்டும் எங்கள் வெற்றியல்ல. எங்களைப் பார்த்துப் பலரும் இது போன்ற முயற்சிகளை எடுக்க வேண்டும். பிளாஸ்டிக் இல்லாத இயற்கைத் திருவிழாக்களாக பாரம்பரிய முறையில் நம் வீட்டு சுபகாரியங்கள் நடைபெற வேண்டும். இப்படியெல்லாம் செய்ய முடியுமா என்ற பலரின் சந்தேகத்திற்கு பதிலாகத் தான் எங்கள் வீட்டு திருமணத்தை கருதுகிறோம். இதைப் பார்த்து இன்னும் பலர் இதே போன்று திருமணங்கள் நடத்த வேண்டும். ஒன்று பத்தாகி, பத்து நூறாகி, நூறு ஆயிரமாக வேண்டும் என்பது தான் எங்கள் ஆசை. பலருக்கும் ஒரு முன்மாதிரி திருமணமாகத் தான் இதை நாங்கள் செய்து காட்டியுள்ளோம்,” என்கிறார் ரவி.
இந்தத் திருமணம் வித்தியாசமானது மட்டுமல்லாது, அனைவரும் இயற்கையை நேசிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும் அளவிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது பாராட்டுதலுக்குரியது.
Friday, June 8, 2018
திருமணம் முடிந்த பின் ஏன் பாலும், பழமும் கொடுக்கறாங்க தெரியுமா? - பிரம்மிப்பூட்டும் இரகசியம்!
மணமகளுக்கு ஏன் தருகிறார்கள் என்றால்,
பெண்ணானவள் தான் பிறந்து வளர்ந்த குடும்பத்தை விட்டு புதிய சூழலில் வாழ வருவதால் எல்லாமே புதிதாக இருக்கும்.அந்த நேரங்களில் பெண்ணே ஒரு பசு மாடு எப்படி விஷத்தையே உண்டாலும் அது தரும் பாலில் துளிகூட விஷம் இராதோ, அது போல கணவன் வீட்டார் உனக்கு தீமையே செய்தாலும் விஷம் போன்ற வார்த்தைகளை கொட்டி விடாதே என குறிக்க பாலும்.
வாழைபழம் எப்படி விதையே இல்லாவிட்டாலும் மூலமரத்தை சார்ந்து கன்றை தருகிறதோ அது போல் கணவனை சார்ந்து வம்சவிருத்தியை நீ தரவேணும் என குறிக்க பழமும் தருவர்.
மணமகனுக்கு ஏன் தருகிறார்கள் என்றால்,
ஏ ! மணமகனே பாலில் எப்படி தயிரும் நெய்யும் உள்ளதோ அதுபோல் இந்த பெண்ணிடமும் அறிவும் ஆற்றலும் உள்ளது பக்குவமாக உறையிட்டு பக்குவமாக கடைந்து வெண்ணையை நெய்யை எடுப்பாயாக பாலை கெட வைத்துவிடாதே என குறிக்க பாலும்.வாழைமரத்தை எப்படி அதன் தாய் மரத்தில் இருந்து பக்குவமாக பிரித்து நடுவரோ அது போல் இந்த பெண்ணை உங்கள் குடும்ப தோட்டத்தில் நட்டுள்ளோம் அதை பட்டுபோக விடாமல் அதை பக்குவமாக கவனித்து அதிலிருந்து உங்கள் சந்ததிகளை வாழையடி வாழையாக விருத்தி செய்து கொள்ளுங்கள் என உணர்த்தவே பழமும் கொடுக்கிறார்கள்.
திருமணத்தில் பால் பழம் கொடுப்பது சும்மா ஒரு வேடிக்கையான செயல் அல்ல.
_ஒவ்வொரு செயலிலும் ஓர் அர்த்தம் உள்ளது._
Thursday, June 7, 2018
மனைவி ஒரு மாணிக்கம்
பள்ளியறையில் மட்டுமல்ல
சமையலறையிலும்
அவளுக்குத் துணை கொடு.
மாதத்தில் மூன்று நாட்கள்
மனைவிக்கு தாயாகு
மற்றைய நாளெல்லாம் சேயாகு.
அவள் ஆடைகளை
சலவை செய்வது
அவமானம் அல்ல.
நீ வழங்கும் சம தானம்.
இரவிலே தாமதித்து
இல்லம் செல்வதை
இயன்றவரை குறைத்திடு.
இயலாத நிலையிலே அவள்
இருந்திடக் கண்டாலே
உறவுதனைத் தவிர்த்திடு.
உப்பு காய்கறிக்கு கூடினாலும்
தப்பு சொல்லி ஏசாதே.
உதட்டு சுழிப்பை தவிர்த்துநீயும்
அதையும் ருசிக்க தவறாதே.
சின்னச் சின்ன சண்டைகள்
தினம்தோறும் போட்டுக்கொள்
சினம்கூடி பெரும்சண்டை
வந்திடாமல் பார்த்துக்கொள்.
அடிக்கடி உறவு வைத்தால்
அலுத்துமே போய்விடும்
அவ்வப்போது உறவுகொண்டால்
ஆனந்தம் பெருகிடும்.
அவள் கர்ப்பம் சுமக்கையில்
நீ அவளை சுமந்திடு.
அவள் வேலையில் அரைவாசி
உன் கையில் எடுத்திடு.
சிலநாளில் காலைவரை
அவள் அழகாய் தூங்கட்டும்
அவள் படுக்கை அறை சென்று
உன்கை தேநீர் வழங்கட்டும்
உறவது முடிந்த பின்னே
உன்பாட்டில் தூங்காதே
உன்னவள் உன் மார்பில்தூங்க
ஓரிடம் கொடுக்க தவறாதே.
தாமதித்து வீடு வந்தால்
தகுந்த காரணம் சொல்.
தப்பு உன்னில் இருந்தாலே
மன்னிப்பு கேட்டுக்கொள்.
வேலைக்குச் செல்லும்போதும்
வேலைவிட்டு வந்தபோதும்
புன்னகை சேர்ந்தமுத்தத்தை
பூவையவளுக்கு போட்டுவிடு.
சிறப்பான நிகழ்ச்சி எதற்கும்
தேடி அவளை கூட்டிச்செல்
எடுப்பான பெண்ணைக் கண்டால்
எட்டி நீயும் நின்றுகொள்.
நோயிலே அவள் வீழ்ந்தால்
பாயாகி விடு.
நோவொன்று அவள் கண்டால்
தாயாகி விடு.
உன்னாலே அவள்
வடிக்கின்ற கண்ணீர்
ஆனந்தக் கண்ணீராய் இருக்கட்டும்.
ஆத்திரம் கூடினால்
அழுது தொலைத்துவிடு.
அவளை அடிக்கும் பழக்கமதை
அறவே வெறுத்துவிடு.
வேளை வரும் போதெல்லாம்
வெளியே அழைத்துச்செல்.
வேதனை அவள் கொள்ளாமல்
விருப்பங்களினை ஏந்திக்கொள்.
அவளொரு குற்றம் செய்தால்
அணைத்து புரியவை.
அன்னையாக நீ மாறி
அவளை திருந்தவை.
அவளின் நட்புகளை
அவள் தொடர அனுமதி.
அவளுக்கும் மனசிருப்பதை
உன் மனம்புரிந்தால் பெறுமதி.
தலை நரைக்கும் காலத்திலும்
சேர்ந்தே உறங்கிவிடு.
சாகப்போகும் நேரத்திலும்
அவள் கை பிடித்துவிடு...











