வவ்வாலின் மூலம் நோய் பரவுகிறது என்ற கூற்று கார்பரேட்களின் கனவு திட்டம்
வவ்வாளை கொண்டு வெடிகுண்டு தயாரிக்கலாம்
(கீழே உள்ள பதிவு வவ்வாலின் பயன்களை அலசும் போது கிடைத்த ஒன்று)சமீபக் காலங்களில் மனிதர்கள் வவ்வால்களின் பயன்பாடுகளை வெகுவாக அறிந்து வருகின்றார்கள். பொதுவாக வவ்வால்கள் கதைகளிலும் மற்றும் தொலைக்காட்சிகளிலும் தீய சக்திக்கும் சாத்தானிய சக்திகளுக்கும் உதாரணமாகக் கூறப்படுகின்றது. ஆனால் இன்றைய விஞ்ஞானிகள் இவைகளின் அளவற்ற பயன்பாடுகளைப்பற்றி சிலாகித்து கூறுகின்றனர்.
இவை முக்கியமாக மனிதர்களுக்கு ஊறுவிளைவிக்கக்கூடிய பூச்சி, கொசு, வண்டு மற்றும் ஈக்களை தங்கள் முக்கிய உணவாக உட்கொள்கின்றன.
மெக்ஸிகோவில் வாழக்கூடிய மஸ்டிப்(mastiff) வவ்வால்கள் காலனியாக(கூட்டமாக) வாழக்கூடியது. இந்த வவ்வால்களின் ஒரு காலனி(கூட்டம்) ஒரு இரவில் 250 டன் (இரண்டு லச்சத்தி ஐம்பது ஆயிரம் கிலோ) எடையுடைய பூச்சி, வண்டு மற்றும் கொசுக்களை தங்கள் உணவாக உண்ணுகின்றன.
சிறிய பழுப்பு நிற வவ்வால்கள் (Little brown bat) ஒரு மணி நேரத்தில் 600 கொசுக்கள் வரைப் பிடித்து உண்ணக்கூடியவை. இதிலிருந்து இவை மனித குலத்திற்கு ஆற்றக்கூடிய அளவற்றத் தொண்டினை வார்த்தைகளினால் எங்ஙனம் விளக்க இயலும். பல நாடுகளில் இன்று மக்களுக்கு நோய்களையும் இன்னபிற தொல்லைகளையும் கொடுக்கும் கொசுக்களை அழிக்க பட்ஜட் போட்டுக்கொண்டிருப்பதை பார்க்கின்றோம். மேலும் இவைகள் தங்கள் உணவாக பழங்களான வாழை, மாம்பழம், கொய்யா பேரிச்சை, அத்தி ஆகியவற்றை உண்பதனால் வவ்வால்களின் மூலம் அயல் மகரந்தச்சேர்க்கை நடைப்பெற பெரிதும் துணைச்செய்கின்றன. இவைகளின் மூலம் 500 க்கும் மேற்ப்பட்ட தாவரங்களின் மகரந்தச் சேர்க்கை நடைப்பெற்று வருவதாக அரிய வந்துள்ளது. மேலும் இவற்றின் கழிவுகளில் மிக அதிக அளவிற்கு நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் உள்ளதால் மிகச்சிறந்க உரமாக பூமிக்கு அமைந்துவிடுகின்றன. பல நாடுகளில் இவை வசிக்கக்கூடிய இடங்களிலிருந்து இவற்றின் கழிவுகள் சேகரிக்கப்பட்டு விவசாயத்திற்கு தேவையான மிக உயர் தரமான உரம் தயாரிக்கப்படுகின்றது. இவையும் இவற்றின பயன்பாடுகளின் மிகமுக்கியமானதாகும்.
மனிதர்களுக்கு நேரடியான பயன்களும் இவற்றில் உள்ளன
வம்பைர்(vampire) வவ்வால்களின் வாயில் சுரக்கும் உமிழ் நீரிலிருந்து மனிதர்களுக்கு ஏற்படும் இதய சம்பந்தமான நோய்க்கு மருந்து தயாரிக்கப்படுகின்றது. மேலும் மூளைக்கு செல்லும் இரத்தம் தடைப்படுவதை தடுக்கவும் காயங்களிலிருந்து வெளியேரும் இரத்தத்தை விரைவில் உறைய வைக்கவும் இவை பயனாகின்றன. பிரிடெய்ல் வவ்வால்களின் இருப்பிடங்களில் சேர்ந்த இற்றின் கழிவுகளிலிருந்து கிடைக்கக்கூடிய சோடியம் நைட்ரேட்டைக் கொண்டு அமெரிக்காவில் நடந்த சிவில் போரில்(1861-1865) வெடிமருந்து தயார் செய்துள்ள வரலாறும் நமக்கு காணக்கிடைக்கின்றது.
கார்பரேட்
சரியாக வருமான காய் நகர்த்துகிறான் நிபா எதுவரை போகும் என்று தெரிய வில்லை ஆனால் வவ்வாலை இனிமேல் நாம் விலங்குகள் சரணாலயத்தில் தான் பார்க்க முடியும்.
தகவல் :- சித்த மரபினர் கூட்டமைப்பு
No comments:
Post a Comment