Shop at Amazon

Saturday, May 19, 2018

தற்சார்பு : தமிழ் ஈழம் - விடுதலை புலிகளின் செயல்பாட்டின்போது



தற்சார்பு:


இந்தப்பதிவில் ஈழம் மற்றும் புலிகளைப்பற்றிய தற்சார்பு என்ற பார்வையில்...


புலிகள் ஆயுத போராட்டத்தை கையிலெடுத்தாலும் நாளடைவில் அதற்கான செலவினங்களில் உள்ள வணிகத்தை அறிந்தபிறகு அவர்களே தங்களுக்கு தேவையானதை தயாரித்தலும், உணவு உற்பத்தியில் தன்னிறைவடைந்ததும், பனை மரங்களின் பயண்பாட்டை உச்சத்தில் வைத்திருந்தது மட்டுமே இந்த வணிக உலகிற்கு உறுத்தியது… உலகில் நடக்கும் அத்துனை போராட்டங்களும் ஏதோ ஒரு வகையில் வணிகசம்பந்தமில்லாமல் நடப்பதில்லை… இதை உடைத்து வெளியே வந்ததுமில்லாமல் US டாலரில் பரிவர்ததனையில்லை என்பதுவே பிரச்னை… US டாலரில் பரிவர்ததனையில்லை என்று சொன்ன லிபிய அதிபரை புரட்சி என்கிற பெயரில் கொன்றார்கள்… ஆனால் ஈழத்தில் நிலமை வேறு அதையும் மீறி தற்சார்பாக வாழத்தொடங்கியிருந்தது அந்த அங்கீகரிக்கப்படாத நாடு… இந்த வணிக கட்டமைப்பிலிருந்து தற்சார்புக்கு திரும்பியதில் என்னென்ன காரணங்கள் என்பதை புலிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் தெரிந்திருக்கும்… ஆனால் அவர்களின் பாதை சரியானது அதனாலேயே இராணுவத்தை மட்டும் வெல்லாமல் பொது மக்களையும் சேர்த்தே இன அழிப்பு செய்தார்கள்! பொது மக்களின் அழிப்பை அவர்களின் தற்சார்பை சிதைத்தாகவே கருதுகிறேன்..

வணிக இயங்கியலை உடைத்து தற்சார்பை நோக்கி நகர்ந்த உண்ணதமான போராட்டம்… பிரித்தாளும் சாதி, மதம் , பெண்ணியம் என்ற எந்த ஒரு கருத்தியலும் பேசாமலேய நடைமுறையில் எந்த பிரச்னையுமில்லை! இதை இராணுவ ஆட்சியில் பயம் காரணமாக இப்படித்தான் மக்கள் இருப்பார்கள் என காரணம் சொல்லுபவர்களுமுண்டு… எதற்கும் மதிப்பேயில்லாத மக்களாட்சிக்கு சிறந்த தலைவனைக்கொண்ட இராணுவ ஆட்சி மேல்!

இதிலிருந்து அறிவது என்னவெனில் நீங்கள் தெரிந்தோ / தெரியாமலோ / வேண்டுமென்றோ தற்சார்பை கையிலெடுக்கும்போது வணிகம் தன் வேலையை இப்படி காட்டுமென்பது மிகப்பெரிய படிப்பினை… அப்ப வணிகம் எந்த அளவிற்கு பாதித்திருக்கும் என உங்கள் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்…

இவ்வளவு பெரிய சாதனையை புலிகள் கட்டியெழுப்ப எடுத்த நேரமும் போராட்டங்களும் கணக்கிலடங்காது…

இதை இப்படியே தமிழகத்தில் தற்சார்பை கொண்டுவர எவ்வளவு நேரமாகும் என்பதை பட்டியிலிடுகிறோம்…

*மதுவை ஒழிக்கவேண்டும்

*பனை மரங்களின் பயண்பாட்டை அதிகரிக்கவேண்டும்

*சாதி ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்கவேண்டும்

*இயற்கை வேளாண்மையை கையிலெடுக்கவேண்டும்

*கிரிக்கெட் / சினிமா மோகத்தை ஒழிக்கவேண்டும்

*மதங்களில்லாமல் வாழப்பழகவேண்டும்

*மாநில சுயாட்சி (தற்போது பெயரளவில் மட்டுமே)

*தன்னலிமில்லா செயலாற்றும் தலைமை வேண்டும்

*மாணவர்களும் பெண்களும் அரசியலில் இறங்க வேண்டும்

*மரபு அறிவை அடுத்த தலைமுறைக்கு கடத்துதல்

*தற்போதைய கல்விமுறையை ஒழித்து தமிழகத்திற்கேற்ப கல்வி முறை வேண்டும்..

*நிலம் சார்ந்த மருத்துவம்

*நிலம் சார்ந்த உணவு


இது ஒரு எகா பட்டியலே இதில் எத்தனையை உங்களால் அடையமுடியும் அதன்காலத்தையும் நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்கள்… 9 வருடங்களுக்கு முன்னர் ஈழத்தில் இவற்றில் எத்தனை சாத்தியப்பட்டது என தெரிந்துகொள்ளுங்கள்…

வணிக கட்டமைப்பை உடைத்து தற்சார்பை இந்த நூற்றாண்டில் செய்து காட்டியவர்கள் புலிகள் அவர்கள் எதில் வீழ்ந்தார்கள் என்பதை கவனித்து அதற்கேற்ப பயணித்தால் சாத்தியமென்பதற்கான பதிவு!

#தற்சார்பு_வாழ்வியல்

நன்றி. வெ.செ. இரமேசு பழஞ்சூர் மாகாளியர்

No comments:

Post a Comment