Shop at Amazon

Monday, October 10, 2022

ஒரே மாதத்தில் 10 கிலோ வெயிட் குறைக்கலாம் - இதை செய்து குடிங்க

இதை ஒவ்வொரு நாளும் குடித்து வந்ததால் ஒரே மாதத்தில் 10 கிலோ வெயிட் குறைக்கலாம்

இது எந்த மாயமோ மந்திரமோ கிடையாது. உண்மையிலேயே நம்முடைய வீட்டு கிச்சனில் இருக்கும் சில இயற்கையான மருந்துப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த நீர் உடலில் தேங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புகளை மிக எளிமையாகக் கரைத்துவிடுகிறது.
அப்படிப்பட்ட இந்த இயற்கை பானத்தை தினமும் காலையில் குடித்து வந்தால், எந்த அதிகப்படியான டயட்டும் இல்லாமல் ஒரே மாதத்தில் 10 கிலோ வரையிலும் எடையைக் குறைக்க முடியும்.

தேவையான பொருட்கள்

சீரகப்பொடி – 1 ஸ்பூன்
பட்டைத்தூள் – கால் ஸ்பூன்
இஞ்சி பவுடர் – அரை ஸ்பூன்
எலுமிச்சை தோல் – 2 துண்டு
தேன் – சுவைக்கேற்ப

செய்முறை

அரை லிட்டர் அளவுக்கு தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அடுப்பை அணைத்துவிடுங்கள்.
நல்ல கொதிநிலையில் உள்ள தண்ணீரில் சீரகப்பொடி, இஞ்சிப்பொடி, பட்டைத்தூள்,எலுமிச்சை தோல் ஆகியவற்றைப் போட்டு ஊறவிடுங்கள்.
அந்தப் பொருட்களின் சாறு முழுவதும் தண்ணீரில் இறங்கிய பின்பு, வடிகட்டி, சற்று ஆறியவுடன் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம்.
இந்த பானத்தை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
கட்டாயமாக ஒரு மாதத்திற்குள் 10 கிலோ வரை எடையைக் குறைக்க முடியும்.

Saturday, October 8, 2022

நரம்பு சுருட்டல் எனும் வெரிகோஸ் நோயை குணப்படுத்த பாட்டி வைத்தியம்

வெரிகோஸ் நரம்பு என்பது நரம்பு சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சனையாகும். பொதுவாக சாதாரண நரம்பில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். ஆனால் வெரிகோஸ் நரம்பில் ரத்தம் பின்னோக்கியும் செல்லும். காரணம் நரம்புகள் ஒன்றோடொன்று பின்னப்பட்டும் திருகியும் காணப்படும். இதனால்தான் அங்கே சிலந்தி போல் நரம்புகள் காணப்படுகின்றன. பரம்பரையாக இது ஏற்படுவதுண்டு.

அம்மாவிற்கு இருந்தால் குழந்தைக்கும் வரும் வாய்ப்புகள் உள்ளன. இது தவிர நாள் முழுவதும் அதிக நேரம் நிற்பது, அதிகமாய் கால்களுக்கு சிரமம் தருவது ஆகியற்றால் வெரிகோஸ் நரம்பு வர காரணமாகிவிடும்.

மற்ற காரணங்கள் : வயது, ஜீன், ரத்த ஓட்டத்தில் பிரச்சனைகள் உடற்பயிற்சி போதிய அளவில் இல்லாமல் இருப்பது, ஹார்மோன் மாற்றங்கள் ஆகியவற்றால் இந்த வெரிகோஸ் பிரச்சனை உண்டாகும். இதனால் பெரும் பாதிப்பு இல்லையென்றாலும் அப்படியே விட்டால் பிரச்சனைகள் தரும்.

வெரிகோஸ் நரம்பை குணப்படுத்துவது எப்படி? 

மிகத் தீவிரமான வெரிகோஸ் நரம்பு இருந்தால் அதனால் தாங்க முடியாத வலி உண்டாகும். நடக்க முடியாமல் அவதிப்படுவார்கள். ரத்த ஓட்டம் பாதித்து, மரத்தும் போகும். இந்த மாதிரியான தீவிர நிலையில் சரிப்படுத்த அறுவை சிகிச்சை உண்டு.

மூலிகை சாறு: இதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்று இல்லை. இதனை வீட்டிலேயே மூலிகை சாற்றின் மூலம் குணப்படுத்தலாம். இதனால் பக்க விளைவுகள் ஏதும் இல்லை.

தேவையானவை :
ஆப்பிள் சைடர் வினிகர் – 2 ஸ்பூன்
கேரட் – அரை கப்
சோற்றுக் கற்றாழை – அரை கப்
தயாரிக்கும் முறை : கேரட்டை பொடிபொடியாக நறுக்கி அதனுடன் கற்றாழையை கலந்து மிக்ஸியில் அரையுங்கள். அதில் சிறிது சிறிதாக ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து மேலும் அரையுங்கள். க்ரீம் போன்ற பதம் வரும் வரைக்கும் நைஸாக அரைக்க வேண்டும். நீர் கலக்கக் கூடாது.

எப்படி உபயோகிப்பது : இந்த க்ரீம் போன்ற கலவையை வெரிகோஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேய்த்து, காலை மேலே தூக்கி ஏதாவது உயரமான பொருளின் மீது வைத்துக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் அப்படியே வைத்திருக்க வேண்டும். பின்னர் கழுவலாம். இதனை அந்த நரம்புகள் மறையும் வரை தினமும் உபயோகியுங்கள். நல்ல பலனைத் தரும்.

Friday, October 7, 2022

நீரழிவு, கொலஸ்டரோலை உடம்பிலிருந்து முற்றாக அகற்றும் பூசணி விதை!



ப்ரோஸ்டேட் வீக்கம், நீரிழவு மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற மூன்றுமே ஆண்களை பாதிக்கும் நோய்களாகும். இந்த மூன்று நோய்களியயும் குண்மாக்கும் சக்தி பூசணிக்காயில் உள்ளது.

பூசணிக்காய் ஒரு சுவையான காய் மற்றும் பல்வேறு நன்மைகளை கொண்டது.ஆனால் அதனுடைய விதை மிகவும் சக்தி வாய்ந்தவை.

பூசணிக்காய் விதையில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.அத்துடன் பல்வேறு சுகாதார நலன்களை உள்ளடக்கியது.இந்த விதையில் மிகவும் முக்கியமான குயூகர்பிட்டேசின் உள்ளது.இது புரோஸ்டேட் விரிவைக் குணப்படுத்துவதுடன் மற்ற பிரச்சனைகளையும் குணமாக்கும்.

புரோஸ்டேட் விரிவு,சர்க்கரை நோய் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் இவற்றை குணமாக்க கூடிய ஒரு பானத்தை எவ்வாறு தயாரிக்க வேண்டும் என்று பார்க்கலாம்.பூசணிக்காய் விதை டீ இது மிகவும் எளிதான ஒன்று தயாரிப்பதற்கும்,உபயோகப்படுத்துவதற்கும்.இதற்குத் தேவையான பொருட்களை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

- ஒரு கப் தண்ணீர்.

- ஒரு கையளவு பூசணி விதை.

நன்மைகள் :
1. பூசணி விதை ஒரு சிறந்த சிறுநீர் பிரிப்பு(அதிகமான சிறுநீரை வெளியேற்றும்)ஆகும்.இவ்வாறு சிறுநீரை வெளியேற்றுவதால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.

2. வீக்கத்தை குணமாக்கக் கூடிய அலர்ஜி நீக்கியாகவும் செயல்படுகிறது.

பூசணி தேநீர் தயாரிக்கும் முறை :இந்த டீயைத் தயாரிக்க செய்ய வேண்டியது பூசணி விதையை பொடியாக்கி ஒரு பானை நீரில் கலக்க வேண்டும்.இந்தக் கலவையை 15 நிமிடங்கள்கொதிக்க விட வேண்டும்.

பூசணி தேநீர் தயாரிக்கும் முறை: பின்பு அதை வடிகட்டி விட வேண்டும்.இப்போது பூசணி விதை டீ ரெடி.இதை நீங்கள் பருகலாம்.இவ்வாறு செய்து தினமும் ஒரு கப் குடித்து வந்தால் உடலில் எந்த பிரச்னையும் வராது.

குழந்தைகளுக்கு உதவும் இயற்கை வீட்டு வைத்தியம்!

காலையில் குழந்தைகள் கண் விழித்தவுடன் ஒரு சொட்டு தேனை நாக்கில் தடவவும். தேன் உடல் வளர்ச்சிக்கு இயற்கை அளித்த ஓர் அற்புதமான வரப்பிரசாதம். பொதுவாகவே வசம்பு போடுவதால் குழந்தைக்கு நாக்கு தடித்து சீக்கிரம் பேச்சு வராமல் இருக்கும் என்பார்கள். ஆனால், தேன் தடவுவதால் நாக்கு புரண்டு விரைவில் பேச்சு வரும்.

சில குழந்தைகள் அடிக்கடி வாந்தி எடுக்கும். அதற்கு வேப்பார்க்குத்துளி, அரை மிளகு, ஒரு சீரகம், ஒரு ஸ்பூன் ஓமம், ஒரு பல் பூண்டு இவற்றை அம்மியில் தட்டி துளி வெந்நீர் விட்டுப் பிழிந்து வடிக்கட்டி ஊற்றினால் வாந்தி சட்டென்று நின்றுவிடும். நாட்டு மருந்துக் கடையில் மாசிக்காய் என்று கிடைக்கும். அதை வாங்கி சாதம் வேகும…்போது, அதோடு போட்டு எடுத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும். குழந்தையைக் குளிப்பாட்டும் போது, நாக்கில் தடவி வழித்தால் நாக்கில் உள்ள மாவு அகன்று குழந்தை ருசித்துப் பால் சாப்பிடும்.

தினமும் இரவில் விளகேற்றியவுடன் சுட்ட வசம்பைக் கல்லில் உரைத்து குழந்தைக்கு ஒரு சங்கு குடிக்கக் கொடுத்து, சிறிது தொப்புளைச் சுற்றி தடவுங்கள். பின் ஒரு வெற்றிலையில் எண்ணெய் தடவி அதை விளக்கில் காட்டி வாட்டி, பொறுக்கும் சூட்டில் அந்த இலையை குழந்தையின் தொப்புள் மேல் போட்டால் அசுத்த காற்றெல்லாம் வெளியேறி, வயிறு உப்புசம் இல்லாமல் இருக்கும்!
குழந்தை தினமும் இரண்டு, மூன்று முறை மலங்கழிக்க வேண்டும். இல்லாமல் கஷ்டப்பட்டால், முதலில் ஒரு பாலாடை வெந்நீர் புகட்டிப் பார்க்கவும். அப்படியும் போகவில்லை என்றால் ஐந்தாறு விதையில்லாத உலர்ந்த திராட்சைகளை வெந்நீரில் ஊறப்போட்டு கசக்கிப் புகட்டினால் ஒரு மணி நேரத்தில் போய்விடும். மலங்கட்டி அவஸ்தைப்பட்டால் விளக்கெண்ணையோ, வேறு மருந்துகளோ தர வேண்டாம். ஆசனவாயில் வெற்றிலைக் காம்போ சீவிய மெல்லிய சோப் துண்டோ வைத்தாலே போய்விடும்.

பிறந்த குழந்தைக்கு தலைக்கு ஊற்றியதும், கால் கஸ்தூரி மாத்திரையை தாய்ப்பாலில் கரைத்து ஊற்றினால் சளிப்பிடிக்காது. ஒவ்வொரு மாதமும் கால், கால் மாத்திரையாக அளவைக் கூட்டிக் கொள்ளலாம். ஒரு வயதுக்கு மேல் துளசி, கற்பூரவல்லி இலைகளை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டிக் கொடுத்தால் சளிப் பிடிக்காது, இருந்தாலும் அகன்று விடும். குழந்தைகளுக்கு பேதிக்குக் கொடுப்பது, எண்ணெய் தேய்த்து ஊற்றுவது, காதில் மூக்கில் எண்ணெய் விடுவது சுத்தமாக வைத்திருப்பது நலமாக இருக்க செய்யும்.

Monday, October 3, 2022

குழந்தை பாக்கியம் தள்ளிப் போகிறதா? இதோ இயற்கை வைத்திய முறை!!!

மாதவிலக்கு கோளாறுதான் குழந்தை பேறு தள்ளி போக காரணம் என்றால் அந்தக் கோளாறு நீங்கி, கருத்தரிக்கறதுக்கு இயற்கை வைத்திய முறைகள் உள்ளது. அது குறித்து பார்க்கலாம்.

மாதவிலக்கு கோளாறு காரணமாக குழந்தை பாக்கியம் தள்ளிப் போகிறதா?
இப்ப எல்லாம் குழந்தை இல்லைனு ஏக்கப்படற தம்பதிகளோட எண்ணிக்கை அதிகமாயிடுச்சு. குழந்தை பாக்கியம் கிடைக்காம போறதுக்கு உடல்நிலை, வாழ்க்கைமுறை, உணவுப் பழக்க வழக்கம்னு பல விஷயங்கள் காரணமா இருக்கு! மாதவிலக்குக் கோளாறுகள் இருந்தாலும்கூட கருத்தரிக்கறதுல சிக்கல் வரும். மாதவிலக்கு கோளாறுதான் காரணம் என்றால் அந்தக் கோளாறு நீங்கி, கருத்தரிக்கறதுக்கு இயற்கை வைத்தியமுறைகள் உள்ளது. அது குறித்து பார்க்கலாம்.

அரை லிட்டர் பசும்பால்ல, கால் கிலோ மலைப் பூண்டை உரிச்சுப் போட்டு வேக வையுங்க. கலவை நல்லா சுண்டி அல்வா பதத்துக்கு வந்ததும், தேவையான அளவு கற்கண்டு… இல்லேன்னா, பனங்கற்கண்டு போட்டு கிளறி இறக்குங்க. மாதவிலக்கான நாட்களிலிருந்து ஒரு வாரத்துக்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் இதைச் சாப்பிட்டு வந்தா, கண்டிப்பா பலன் கிடைக்கும்.

இன்னொரு வைத்தியமும் இருக்கு! பசும் மஞ்சளை அரைச்சு எடுத்த சாறு, மலை வேம்பு சாறு, நல்லெண்ணெய்… இது எல்லாத்தையும் சம அளவு எடுத்து கலந்து வெச்சுக்குங்க. இதை சூடு பண்ணத் தேவையில்லை. மாதவிலக்கான முதல் மூணு நாட்களில் காலை, சாயந்திரம்னு ரெண்டு வேளையும் தலா ரெண்டு டேபிள்ஸ்பூன் சாப்பிடணும். எனக்குத் தெரிஞ்சு நிறைய பெண்களுக்கு இந்த மருத்துவத்தை சிபாரிசு பண்ணி, பலன் கிடைச்சிருக்கு.

உடம்புல ஊளைச் சதை அதிகம் இருந்தாலும் கரு உண்டாவதில் பிரச்சனை வரும். தினம் அஞ்சுலருந்து பத்து எண்ணிக்கை வரை சின்ன வெங்காயத்தை எடுத்து பச்சையா சாப்பிட்டா, கொஞ்ச நாட்களிலேயே ஊளைச் சதை குறைஞ்சு ஆளும் ஸ்லிம்மாகிடுவாங்க. சீக்கிரமே வீட்டுல ‘குவா குவா’ சத்தமும் கேட்கும்.

தினம் ஒரு உலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

பலருக்கும் அத்திப்பழம் பற்றி தெரியாது. ஏன் பாத்திருக்கக்கூடமாட்டார்கள். அப்படியே பார்த்தாலும், இதை எப்படி சாப்பிடுவது என்று பலரும் கேட்பார்கள். ஏனெனில் அத்திப்பழம் பார்ப்பதற்கு அப்படி இருக்கும். மேலும் இந்த அத்திப்பழம் அவ்வளவு எளிதில் கிடைக்காது. ஆனால் இதன் மறுவடிவமான உலர்ந்த அத்திப்பழம் அனைத்து காலங்களிலும் கிடைக்கும்.

பலரும் கடைகளில் முந்திரி, உலர் திராட்சை, பிஸ்தா உள்ள இடங்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால் இதன் வடிவத்தைப் பார்த்து, இது எப்படி இருக்குமோ என்று நினைத்து வாங்கி சுவைத்திருக்கமாட்டீர்கள். இனிமேல் கடைக்கு சென்றால், தவறாமல் இந்த உலர்ந்த அத்திப்பழத்தை வாங்கி சாப்பிடுங்கள். ஏனெனில் மற்ற உலர் பழங்களை விட, இதில் அலாதியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. சரி, இப்போது அந்த உலர்ந்த அத்திப்பழத்தை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.

செரிமானத்தை அதிகரிக்கும்

உலர்ந்த அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. அதிலும் 3 துண்டு உலர்ந்த அத்திப்பழத்தில் ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய 5 கிராம் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் மலச்சிக்கல் மற்றும் இதர செரிமான பிரச்சனைகள் நீங்கி, குடலியக்கம் சீராக நடைபெறும்.
   
எடை குறைவு

உலர்ந்த அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளது. ஒரு துண்டு உலர்ந்த அத்திப்பழத்தில் 47 கலோரிகள் உள்ளது. இதனால் 0.2 கிராம் கொழுப்பைத் தான் இதில் இருந்து பெற முடியும். எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு, இது மிகவும் சிறப்பான ஸ்நாக்ஸ்.

உயர் இரத்த அழுத்தம்

உணவில் உப்பு அதிகம் சேர்த்து வந்தால், உடலில் சோடியத்தின் அளவு அதிகரிக்கும். அப்படி சோடியத்தின் அளவு அதிகரித்து, பொட்டாசியத்தின் அளவு குறைருந்தால், அதன் காரணமாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். ஆனால் உலர்ந்த அத்திப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாகவும், சோடியம் குறைவாக இருப்பதால், இதனை தினமும் உட்கொண்டு வந்தால், உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்கலாம்.
   
ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்தது

உலர்ந்த அத்திப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் வளமையாக நிறைந்துள்ளது. மேலும் மற்ற பழங்களை விட, அத்திப்பழத்தில் நிறைந்துள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மிகவும் தரமானது என்று ஆய்வு ஒன்று சொல்கிறது. குறிப்பாக உலர்ந்த அத்திப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஈ அதிகம் நிறைந்துள்ளது.
உறுதி செயப்பட்ட ஒரு உடல் எடை குறைப்பு டிப்ஸ்
உடல் எடை குறையக்கும் டிரெண்டிங் டிரிக்
அதிர்ச்சி: இந்த முறையில் அவர் சில நாட்களில் முடிவளர பெற்றார்.
   
இதய நோயைத் தடுக்கும்

ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், ப்ரீ-ராடிக்கல்களால் உடலின் இரத்த நாளங்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு, இதய நோயின் தாக்கம் தடுக்கப்படும். மேலும் முன்பு குறிப்பிட்டது போல், இது உயர் இரத்த அழுத்தத்தைத் தடுப்பதால், கரோனரி இதய நோயின் தாக்கமும் குறையும். மேலும் ஆய்வு ஒன்றில் உலர்ந்த அத்திப்பழம் ட்ரை-கிளிசரைடுகளின் அளவைக் குறைப்பதால், இதய நோய் வரும் வாய்ப்பு சீராக குறையும்.
   
புற்றுநோயைத் தடுக்கும்

ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்த அத்திப்பழம், ப்ரீ-ராடிக்கல்களால், செல்லுலார் டி.என்.ஏ பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு, அதனால் புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கும்.
   
எலும்புகளை வலிமையாக்கும்

ஒரு உலர்ந்த அத்திப்பழத்தில் 3% கால்சியம் நிறைந்துள்ளது. இது ஒரு நாளைக்கு ஒருவருக்கு வேண்டிய கால்சியத்தின் அளவாகும். எனவே தினமும் ஒரு உலர்ந்த அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால், எலும்புகளின் அடர்த்தி அதிகரித்து, எலும்புகள் வலிமையாகும்.
   
நீரிழிவிற்கு நல்லது

உலர்ந்த அத்திப்பழம் மிகவும் இனிப்பாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் இதை சாப்பிட யோசிப்பார்கள். ஆனால் இதில் உள்ள நார்ச்சத்து, நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் நல்லது என்பதால், இதனை உட்கொள்ளும் முன் மருத்துவரிடம் கலந்தாலோசித்து, எத்தனை எடுத்துக் கொள்வது என்று கேட்டு தெரிந்து பின் சாப்பிடுங்கள்.
   
இரத்த சோகையை தடுக்கும்

உலர்ந்த அத்திப்பழத்தில் இரும்புச்சத்தும் அதிகம் உள்ளது. அதிலும் ஒரு உலர்ந்த அத்திப்பழத்தில் 2% இரும்புச்சத்து நிறைந்துள்ளது. உடல் முழுவதும் ஹீமோகுளோபினை எடுத்துச் செல்ல இந்த கனிமச்சத்து மிகவும் இன்றியமையாதது. எனவே இதனை தினமும் ஒன்று உட்கொண்டு வந்தால், உடலின் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, இரத்த சோகை வருவதும் தடுக்கப்படும்.

இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியம்

பண்டைய இதிகாசங்களின் படி, கிரேக்கர்கள் அத்திப்பழத்தை ஒரு இயற்கை பாலுணர்வூக்கியாக பயன்படுத்தி வந்தனர். அத்திப்பழமானது புனிதமான பழமாகவும், காதல் மற்றும் கருவுறுதலுக்கு நெருங்கிய தொடர்புடையதாகவும் கருதப்பட்டு வந்தது. விஞ்ஞானரீதியாக, அத்திப்பழம் கருவுறுதவை அதிகரிக்கவும், பாலுணர்ச்சியைத் தூண்டவும் செய்கிறது. இதற்கு அத்திப்பழத்தில் உள்ள ஜிங்க், மாங்கனீசு மற்றும் மக்னீசியம், இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகரிப்பது தான் காரணம்.

Thursday, September 29, 2022

நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு - ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்

2 நிமிடங்களில் நீங்கள் வேக வேகமாய்ச் சமைத்துத் தரும், ஆசையாய் ஆசை ஆசையாய் நம் வீட்டுக் குழந்தைகள் அள்ளிச் சாப்பிடும் நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு என்றால் நம்புவீர்களா?

நம்புங்கள் என்கிறார்; 
அகமதாபாத்தைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்பு உணர்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமைப் பொது மேலாளர் ப்ரீத்தி. 'இன்சைட்’ என்கிற நுகர்வோர் விழிப்பு உணர்வு இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார். 

விளம்பரங்களால் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்து எண்ணற்ற வீடுகளில் காலை உணவாகிவிட்ட நூடுல்ஸ், உண்மையிலேயே சத்தான உணவுதானா என்று தெரிந்துகொள்ள விரும்பினார் ப்ரீத்தி. 
இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் 15 நிறுவனங்களின் நூடுல்ஸ்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

நூடுல்ஸில் இவ்வளவு சத்துக்கள் இருக்க வேண்டும் என்று இந்தியாவில் இதற்கான அளவு மதிப்பீடுகள் ஏதும் இதுவரை வரையறுக்கப்படாததால், இங்கிலாந்தின் உணவுத் தரக் கட்டுப்பாட்டு முகமையின் அளவுகளை வைத்து இந்தத் தரச்சோதனை நடந்தது. இதில் வெளியான முடிவுகள் மூலமாகத்தான் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் ப்ரீத்தி. 

ஆய்வு சொல்லும் முடிவுகள்? 
சோதனை செய்யப்பட்ட எந்த முன்னணி நிறுவனங்களின் நூடுல்ஸும் விளம்பரங்களில் காட்டப்படுவதுபோல ஏகப்பட்ட சத்துக்களை உள்ளடக்கியதாகவோ, குழந்தைகள் உடல் நலனுக்கு முற்றிலும் நன்மை பயப்பதாகவோ இல்லை.அனைத்து நூடுல்ஸ்களிலும் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் எக்கச்சக்க மடங்கு அதிகமாக உப்பு மற்றும் கொழுப்பு உள்ளன. 

100 கிராம் நூடுல்ஸில் 130 முதல் 600 மில்லி கிராம் வரை அனுமதிக்கப்பட்ட சோடியம் அளவாகும். ஆனால், இந்தியாவில் விற்கப்படும் வெவ்வேறு நூடுல்ஸ் நிறுவனங்களின் தயாரிப்புகளில் 821 மில்லி கிராம் முதல் 1943 மில்லி கிராம் வரை #சோடியம் இருந்திருக்கிறது. 

ஆனால் தேவையான மற்ற சத்துக்களோ சொல்வதைவிடக் குறைந்த அளவில்! மிகக் குறைந்த அளவுக்கே நார்ச்சத்து, புரதம், கால்சியம் ஆகியன உள்ளன. இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிதல், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் எனப் பல்வேறு ஆபத்துகளுக்கும் குழந்தைகள் ஆளாக நேரிடும்.

ப்ரீத்தி சொல்கிறார்; ஆய்வு முடிவுகளைப் பார்த்தபோது அதிர்ந்துபோனேன். இது தொடர்பாக விளக்கம் கேட்டு 15 நிறுவனங்களுக்கும் ஆய்வு நிறுவனம் சார்பில் கடிதம் அனுப்பினோம்.
ஆனால், இதுவரை அந்தக் கடிதங்களுக்கு எந்த நிறுவனமும் பதில் அளிக்கவில்லை. 

கம்பு, வரகு, சாமை, தினை, கேழ்வரகு என்று எவ்வளவோ சத்து மிக்க சிறுதானியங்கள் விளையும் மண் இது. ஆனால், அவற்றை எல்லாம் இருட்டடிப்பு செய்துவிட்டு, விளம்பரங்கள் மூலம் சந்தையைப் பிடிக்கும் பெருநிறுவனங்கள் இந்திய மக்களை குழந்தைப் பருவத்தில் இருந்தே அடிமைப்படுத்துகின்றன. 

பெற்றோர்கள் இந்த விஷயத்தில் விழிப்பு உணர்வோடு இருக்க வேண்டும். குப்பை உணவின் மூலமாக ஏற்படும் வளர்ச்சி உண்மையானது அல்ல. நாளை நம் குழந்தைகள் நிரந்தர நோயாளிகளாக நாமே காரணம் ஆகிவிடக் கூடாது; என்றார் அக்கறையுடன்.

Saturday, April 25, 2020

ஏன் கோவில்களில், ஏனில்லை பள்ளிகளில் மருத்துவமனைகளில்!

 
JFW பெண்களுக்கான விருது வழங்கும் விழாவில் 2019 ஆம் ஆண்டு வெளியான ராட்சசி திரைப்படதிற்காக சிறந்த நடிகையாக தேர்வுசெய்யப்பட்டார் ஜோதிகா. அவர் வேறு படத்திற்காக தஞ்சையில் நடந்த படப்பிடிப்பின்போது ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டார்
அந்த விழாவில். தொலைக்காட்சியில் அந்த நிகழ்ச்சி
ஒளிபரப்பான பின்பு அவர் பேசியது பலரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. மக்களிடத்தில் பல்வேறு கருத்துக்கள் வந்த வண்ணம் உள்ளன.
 
அந்த விழாவில் ஜோதிகா பேசியது:
"தஞ்சைப் பெரிய கோயில் மிகவும் புகழ்பெற்றது அழகாக இருக்கும், அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். நானும் பார்த்திருக்கிறேன். மிகவும் அழகாக இருந்தது. அதை அருமையாகப் பராமரித்து வருகிறார்கள். மறுநாள் என்னுடைய படப்பிடிப்பு மருத்துவமனையில் நடந்தது. அது சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தது. நான் கண்டதை வாயால் கூற முடியாது, அவ்வளவு மோசமாக இருந்தது. எல்லோருக்கும் ஒரு கோரிக்கை. கோயிலுக்காக அதிக காசு கொடுக்கிறீர்கள் வண்ணம் பூசிப் பராமரிக்கிறீர்கள். தயவு செய்து அதே தொகையைப் பள்ளிகளுக்கும் கொடுங்கள். மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள். இது மிகவும் முக்கியம். மருத்துவமனையில் நான் அந்தக் காட்சியைக் கண்டதும் எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. மருத்துவமனைகளும் பள்ளிகளும் மிக முக்கியம். தயவுசெய்து அவற்றுக்கு நிதியுதவி கொடுங்கள்"

அந்த விருது வழங்கும் விழாவில் நடிகை ஜோதிகா சொல்வதில் எந்த தவறும் இல்லையே.

கோவில்களுக்கு பணத்தை அதிகப்படியாக செலவுசெய்து பராமரிப்பு பணிகளை செய்வதுபோல், பள்ளிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் கூடுதல் கவனம் முக்கியத்துவம் அளித்து பராமரிப்பு பணியை செய்யலாமே, சுத்தமாக வைத்திருக்கலாமே என்றுதானே கூறுகிறார்.

கோவிலை போன்று மருத்துவமனையும், பள்ளியும் பொது மக்கள் கூடும் சமூக இடம்தானே. அந்த மருத்துவமனையை பார்த்துவிட்டு கோவிலுக்கு செல்ல விருப்பமில்லை என்று கூறியது அவர்களது தனிப்பட்ட விருப்பம்.

இதன் மூலம் அவர் கூறவரும் விடயத்தை குறைசொல்வதற்கு பதிலாக அவர் சொன்ன சுத்தம், சுகாதாரத்தை மருத்துவமனைகள், பள்ளிகள் என அனைத்து இடங்களிலும் நடைமுறை வாழ்க்கையில் செயல்பட வழிவகுப்பதே, செயல்படுத்துவதே அறியுடையோரின் செயல்!

ஏன் கோவில்களில், ஏனில்லை பள்ளிகளில் மருத்துவமனைகளில்!
Why Temple; Why not School, Hospital !

Monday, April 13, 2020

ஐயப்பன் வழிபாடு தமிழர் வழிபாடே!

iyappan bhajan songs tamil lyrics 

ஐயப்பன் வழிபாடு தமிழர் வழிபாடே!

அதை கொச்சைப் படுத்தும் நோக்கத்தில் ஒரு கட்டுரை சமூகவலைதளங்களில் பரவிவருகிறது. அந்த கட்டுரை பின்வருமாறு இணைக்கப்படுகிறது. அதைப் படித்துவிட்டு அதற்கு மறுப்பையும் படித்துவிடுங்கள்.

இஸ்லாமிய கிறிஸ்துவ மதத்தை பின்பற்றும் தமிழர்கள், தமிழர்களே!
ஆனால் நீங்கள் தயவு செய்து தமிழர் சமயம் சார்ந்த விஷயங்களில் தலையிடாமல் இருப்பது அனைவருக்கும் நன்மை பயக்கும்.
நீங்கள் எப்படியும் தமிழர் சமயங்களை பின்பற்றுவது கிடையாது ஆகவே அதைப்பற்றிய புரிதல் இல்லாமல் இவ்வாறான கால்புணர்ச்சி பதிவுகளை தவிர்த்தால் தமிழ் தேசிய அரசியலுக்கு அது வலுசேர்க்கும். இந்தக் கட்டுரையை எழுதிய அதே நபர்கள் முருகன் சிவன் விஷ்ணு ஆகியவர்களையும் இவ்வாறே கொச்சைப்படுத்தி எழுதியுள்ளார்கள். குறிப்பாக முருகனே வட்டிக்கடை வைத்து நடத்திய சேட்டு என கேவலப்படுத்தியவர்கள்.

இதையெல்லாம் அறியாத சில தமிழ் தேசியவாதிகள் ஐயப்பனை மலையாள கடவுள் என எண்ணிக்கொண்டு அங்கே அவர்களின் பக்குவமற்ற புரிதலை வைத்து குழம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

சரி இப்பொழுது அந்த தவறான கட்டுரையை படிப்போம்!

"இனப் பெருக்கத்தை கட்டுபடுத்த தான் ஐயப்பன் வழிபாடு...
தமிழர்களிடம் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஐயப்பன் என்றால் யார் என்றே தெரியாது.

தமிழர்களிடம் குலதெய்வ வழிபாட்டை தவிர வேறு அனைத்து வழிபாடுகளும் திணிக்கப்பட்டதே. இது அனைவருக்கும் தெரியும்.

ஒரு வேலை மாட்டுவண்டி காலத்தில் கூட கேரள எல்லைக்குள் மலைகளை கடந்து சென்றனர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
அப்படி இருக்கையில் ஏன் இந்த ஐயப்பன் வழிபாடு வழிந்து திணிக்கப்பட்டது?
அந்த காலத்தில் எந்த வித கருத்தடை சாதனங்களும் இல்லை இருந்திருந்தால் இந்த ஐயப்பன் வழிபாடு வந்தே இருக்காது.
ஐயப்பன் என்பது இரு ஆண் கடவுளுக்கு பிறந்த குழந்தை என சொல்லும் போதே தமிழர்கள் மனத்தில் ஒரின சேர்க்கை சரி தான் போலும் என்ற சிந்தனை தோன்றும்.
மேலும் கார்த்திகை மார்கழி மாதங்கள் தான் இயற்கை இனப் பெருக்கம் செய்வதற்காக மனிதனுக்கு கொடுத்த மாதங்கள்.
இந்த நேரத்தில் ஆண் பெண் இருவரின் உடல் வெப்பமும் சீராக காணப்படும். கர்ப்பப்பை குளிர்ச்சியாக காணப்படும்.
குழந்தையின்மைக்கு காரணம் ஒன்றே ஒன்று தான் அது தான் அதிக வெப்பம் ஆணின் உடலில் வெப்பம் அதிகம் என்றால் விதையாகிய விந்து இறந்து விடும். ஆகையால் குழந்தை பிறக்காது...
பெண்ணின் உடலில் அதிக வெப்பம் என்றால் நிலமாகிய கருப்பை சூடாகி விதையை ஏற்றுக் கொள்ளாமல் கழித்து விடும். நிலம் குளிர்ந்தால் தான் விதை முளைக்கும்.
எனவே வெப்பம் சீராக இருக்கும் நேரம் கார்த்திகை மார்கழி மாதங்கள் அந்த நேரம் ஒரின சேர்க்கை கடவுளாகவும், பெண்களை ஒதுக்கும் கடவுளாகவும் ஐயப்பனை உருவாக்கி அவனை வழிபட இந்த நாட்களில் மனைவியுடன் கூடாமல் விரதம் இருந்து வரவேண்டும் என்பது எவ்வளவு இயற்கைக்கு எதிரான செயல்.
இந்த செயலை அவர்கள் நம்மை செய்ய சொல்லி 30 வருடங்களுக்கு முன் நிறைய படங்களின் மூலம் எவ்வளவு விளம்பங்களை கொடுத்தனர் என்பதை நினைவுப்படுத்தி பாருங்கள்.
மேலும் பெண்களுக்கு உடல் தாகம் வரும் இந்த குளிர்நேரத்தில் விலகி இருப்பதால் அவர்கள் வழிதவறி போவதற்கும் அதுவே வாய்ப்பாக அமையும்.
இயற்கை நம்மை கூடி மகிழவே விதித்துள்ளது அதை தடுப்பவன் எவனும் இயற்கைக்கு எதிரியே...
பகிர்வு...."

மறுப்பு பின்வருமாறு!
தமிழர்களுக்கு ஐயப்பன் என்றால் 50 ஆண்டுகளுக்கு முன்பு தெரியாது என்கிறார்கள் இதுவே ஒரு அப்பட்டமான புளுகு காரணம் பாரம்பரியமாக ஐயப்பன் கோயிலுக்கு சென்றவர்கள் ஏராளமாக தமிழகத்தில் இருக்கிறார்கள். அவர்கள் தாத்தன் பூட்டன் காலத்தில் இருந்தே ஐயப்பன் கோயிலுக்கு போவதை வழக்கமாக செய்து வருபவர்கள்.கடந்த 50 ஆண்டுகளில் ஐயப்பன் வழிபாடு வணிக மயமாக்கப்பட்டது என்பது உண்மை அதற்கு பின்னால் பிராமணர்களின் அரசியலும் மத அரசியலும் உள்ளது என்பது உண்மை. ஆகவே எப்படி மேரி மாதா கோயிலுக்கு சென்றால் நன்மை நடக்கும் எனக் கருதி கன்னியாகுமரிக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக செல்கிறார்களோ எப்படி முருகன் கோயிலுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக செல்கிறார்களோ எப்படி திருப்பதிக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக செல்கிறார்களோ அதேபோலத்தான் ஐயப்பன் கோயிலுக்கும் மக்கள் செல்லத் தொடங்கினார்கள். ஆனால் அதற்கு முன்பாக மக்கள் செல்லவே இல்லை என்பது முற்றுமுழுதான பொய். பல தமிழர்கள் ஐயப்பனை பாரம்பரியமாக வழிபடுபவர்கள் உண்டு.
குலதெய்வ வழிபாடு தவிர வேறு எந்த வழிபாடும் திணிக்கப்பட்டது என சொல்கிறார்கள். இந்தப் பதிவைப் படிக்கும் பலருக்கு குல தெய்வம் ஐயனாராக உள்ளது அந்த ஐயனாரை இவர்கள் குல தெய்வமாக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.ஏன் என்று கேட்டால் குதிரையை வாகனமாக வைத்துள்ளார். குதிரை தமிழகத்தில் ஆதிகாலத்தில் இல்லை ஆகவே ஐயனார் ஒரு வந்தேறி கடவுள் என்பதுதான் இவர்களுடைய ஆய்வு. உண்மையில் இந்த ஐயனார் வழிபாடு தான் கேரளத்தில் ஐயப்பன் வழிபாடாக மருவியுள்ளது. ஐயனாரை சாத்தன் என அனைவரும் அழைப்பர் சாத்தனார் எனவும் ஐயனாருக்கு பெயர் உண்டு. இதற்கு காரணம் வணிகத்தை தொழிலாகக் கொண்ட தமிழ் சமூகத்தை சேர்ந்தவர்தான் நாம் இன்று வழிபடும் ஐயனார். சாத்து வணிகன் என்பதே சாத்தன் என்று வழங்கப்படுகிறது. நகரத்தார் சமூகத்தை சேர்ந்த நபர் சித்த மரபில் உயர்ந்ததால் அவர் கடவுளாக வழிபடப் பட்டார். பலருக்கு அவர் குல தெய்வமானார். இவ்வாறு வந்ததே அய்யனார் எனும் சாத்தன் வழிபாடு. இந்த சாத்தன் தான் செய்த தர்மத்தின் பயனாக தர்ம சாத்தானாக தமிழர்களால் வழிபடப்பட்டு பின்நாட்களில் தர்மசாஸ்தாவாக மாறினார்.

இன்று இலுமினாட்டிகள் என்று கருதப்படும் யூதர்கள் வணிகத்தை தொழிலாக கொண்ட குடிகள் தான் ஆனால் தமிழ் இனத்தைச் சார்ந்த சாத்தன்களோடு வணிகத்தில் போட்டிபோட முடியாமல் யூதர்கள் அந்த காலகட்டத்தில் பெருத்த தோல்வி அடைந்தனர்.

சாத்தன்களாக இருந்த நகரத்தார் சமூகம் சித்தர்களின் வழிகாட்டலின் படியே நேர்மையான வியாபாரத்தையும் விதிகள் கூடிய வணிகத்தையும் நம்பகத்தன்மையும் உலகம் முழுக்க பெற்றிருந்ததாலூம், சித்தர்களின் மருத்துவம் அறிவியல் விஞ்ஞானம் ஆகியவற்றை பயன்படுத்தி கப்பல் கட்டுதல் சண்டை செய்தல் பாதுகாத்துக் கொள்ளுதல் காலமறிதல் ஆகியவற்றின் மூலம் வணிகத்தில் கொடிகட்டிப் பறந்தனர்.

வணிகத்தில் நகரத்தார்களான சாத்தன்களை வெற்றி கொள்ளமுடியாத யூதர்கள் அவர்களை வெறுத்தார்கள்.
தம் மக்களிடையே சாத்தன்களை தீயவர்களாக காட்டினார்கள், அவர்கள் பொருட்களை வாங்காதீர்கள் என்றும் சாத்தன் புதுப்புது பொருட்களைக் கொண்டுவந்து உங்களை ஏமாற்றும் என்றும் அவற்றை வாங்க கூடாது என்றும்.. கலை இசை நடனம் ஆகியவை அனைத்தும் சாத்தன்களுக்கு சுலபமானது என்றும் ஆகவே அவற்றையெல்லாம் பார்க்கச் செல்லாதீர்கள் என்றும் சொல்லத் தொடங்கினர் யூதர்கள். இதுவே பிற்காலங்களில் கிறிஸ்துவ இஸ்லாமிய மதங்களில் சாத்தன் என்பது தீய சக்திகளை குறிக்கும் சாத்தானாக மருவியது...

இந்த பெயருக்கு களங்கம் ஏற்பட்டதால் நகரத்தார்கள் சாத்தன் என்று தங்களை அழைத்துக் கொள்வதை படிப்படியாக நிறுத்திக் கொண்டார்கள். இன்று வரை அவர்கள் நகரத்தார்கள் மற்றும் செட்டியார்கள் என்று தான் அழைக்கப்படுகிறார்கள்.

ஐயப்பன் இந்த நகரத்தார் குடியில் தோன்றிய ஒரு மனிதர் தான் மக்களுக்கு நன்மை செய்தது "தர்ம சாத்தன்" என்ற நிலையை அடைந்து தெய்வமாகக் கருதப்படுகிறார். இது அய்யனார் வழிபாடே. அய்யனார்கள் சித்தர் வழியில் வந்ததால் உயிர் கொல்லாமை கோட்பாட்டை பின்பற்றுபவர்கள் ஆகவே அவர்களுக்கு பலியிடுதல் புடிக்காது.

அய்யனாருக்கு உயிர்பலி எங்கும் இல்லை. சைவ படையல் தான் வைப்பார்கள். கேரளத்து ஐயப்பனுக்கும் அதுவே. குலதெய்வங்கள் பல குலங்களுக்கு பொதுமை ஆக்கப்படும் பொழுது அவை இன தெய்வங்களாக மாறி பொதுவான தெய்வங்களாக உருவாகிறார்கள்.

முருகன் சிவன் விஷ்ணு என்று அழைக்கப்படும் இவர்களும் வாழ்ந்த மனிதர்களே. மக்களுக்கு பெருவாரியான நன்மைகள் செய்ததினால் இவர்கள் பெரு தெய்வங்களாக இன்றளவும் வகைப் படுத்தப் படுகிறார்கள். அனைத்து குடிகளும் இவர்களை வணங்குவதால் இவர்கள் பொது தெய்வங்கள். ஒரு குறிப்பிட்ட குலமும் குடியும் மட்டும் வணங்கினால் அவைகள் குலதெய்வங்கள். ஆகவே குலதெய்வம் மட்டும்தான் தமிழர் வழிபாடு என்பது சுத்தமான பொய்.

பண்டைய காலங்களில் கேரளாவிற்கு மக்கள் அதிகம் செல்லவில்லை என்று சொல்கிறார்கள் காரணம் அது காடும் மேடும் கொண்ட பகுதிகள் மட்டும்தான் என்கிறார்கள். உண்மையில் கேரளா என்பது பண்டைய சேர நாடு என்பதை மறந்து விட்டார்கள் போல. சேரநாடு வணிகத்தில் உலகளாவிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்ட நாடு. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாகவே பல்வேறுவிதமான வணிகத்தில் கொடிகட்டிப் பறந்தவர்கள் சேர நாட்டவர்.பாண்டிய நாட்டுடன் சோழ நாட்டுடன் வணிகத் தொடர்புகள் சேர நாட்டிற்கு ஏராளமாக உள்ளது. சிலப்பதிகாரத்தை கொஞ்சம் புரட்டிப் பாருங்கள்.ஆகவே மக்கள் அங்கே செல்லவே இல்லை என்பது முற்றிலும் தவறான ஒரு கருத்து.

அந்த காலத்தில் கருத்தடை சாதனங்கள் எதுவும் இல்லை என்பது அடுத்தகட்ட பொய் சித்த மருத்துவம் படித்த யாரை வேண்டுமானாலும் கேட்டுக்கொள்ளலாம் ஆயுர்வேதம் படித்தவர் யாரை வேண்டுமானாலும் கேட்டுக் கொள்ளலாம்.

மற்றும் மனித இனத்திற்கு குறிப்பிட்ட காலம் சார்ந்த இனப்பெருக்க நேரம் என்பது இல்லை. வெப்பம் அதிகம் இருக்கும்பொழுது இனப்பெருக்கம் என்பது வாய்ப்பு குறைவு. மறுப்பதற்கில்லை. ஆனால் பண்டைய காலங்களில் நமது நிலப்பரப்பில் காலையில் வெப்பம் இருந்தாலும் இரவு நேரங்கள் குளிர்ந்தே இருந்திருக்கும். பெருநகரங்கள் இப்போது இருப்பது போல அப்போது இல்லை. காடும் காடு சார்ந்த இடங்களும் அளவுக்கு அதிகமாகவே இருந்தது. இன்றளவும் கிராமப்புறங்களில் இரவு நேரம் குளிர்ந்தே உள்ளது. இரவு நேரத்தில் புணர்தல் இயல்பாக நடந்து கொண்டே உள்ளது. யாரும் பட்டை பகலில், மட்ட மத்தியானத்தில் உச்சிவெயிலில் அன்று புணர்ந்திருக்க வாய்ப்புகள் குறைவு தான். பனங்கிடுக்கு ஓலைக்குடிசையில் எல்லா காலங்களிலும் குளிர்ச்சியே இருந்தது. எல்லா காலங்களிலும் குழந்தைகள் பிறந்து கொண்டுதான் இருந்தது. இப்பொழுதும் அவ்வாறே நடந்து கொண்டுள்ளது. ஐயப்பன் கோயிலுக்கு வருடம் வருடம் செல்லும் யாருக்கும் குழந்தை இல்லாமல் இல்லை. அல்லது அதில் சிரமமும் ஏற்படுவதில்லை. சிரமங்கள் ஏற்பட்டிருந்தால் பாரம்பரியமாக சென்றிருக்க வாய்ப்புகள் குறைவு.
கடைசியாக ஒரு கொச்சைத் தனமான ஒரு பதிவையும் செய்துள்ளார்கள் பெண்கள் தனிமையில் இருந்தால் தவறான வழியில் செல்வதற்கு வாய்ப்புகள் இருந்ததாம்.

தம்பிகளா அவர்கள் தமிழச்சிகள் திராவிடத்தை ஏற்றுக்கொண்ட ஈவேரா பேத்திகள் அல்ல...
வாய்ப்பு கிடைக்கும்போது வழிதவறி செல்ல..
ஐயப்பன் ஓரினச்சேர்க்கைக்கு பிறந்தான் என்பது பிராமணர்களின் பொய்ப்பிரச்சாரம் தான். அது பிராமண யூதர்கள் செய்த சதி மாற்றுக் கருத்து இல்லை. அது உண்மையும் இல்லை.தமிழ் கடவுள்கள் மீது இயல்பான கால் புணர்ச்சி கொண்ட பிராமணர்கள் இவ்வாறு தமிழர்களை கொச்சைப்படுத்தும் விதமாக தான் கதைகளை எழுதுவார்கள்.

இயற்கை கூடி மகிழவே நம்மை படைத்துள்ளது மாற்றுக் கருத்து இல்லை..
ஆனால் ஒழுக்கத்தை ஒருவன் கடைபிடிப்பது ஆன்மிகத்தில் மிக முக்கியமான ஒரு படிநிலை. சிற்றின்பத்தை தனது கட்டுக்குள் வைத்திருப்பது ஆன்மீக நிலை.

மனதில் எண்ணியபடி எல்லாம் வாழ்வது வாழ்க்கை அல்ல...
ஆதி காலங்களில் ஒரு தனிமனித ஒழுக்கம் சமூக கட்டமைப்பிற்கு மிக முக்கியமானது.காம உணர்ச்சி கொண்ட கயவர்கள் பெண்களை கற்பழித்து ஆணாதிக்க வெறியாட்டத்தை ஆடி விடக்கூடாது என்பதற்காக ஆண்களுக்கு கட்டுப்பாட்டை சிறுவயதிலிருந்து போதிக்கும் ஒரு வழமையே ஐயப்பன் வழிபாடு.

முருகனுக்கு காவடி எடுத்தலும் கிட்டத்தட்ட அதுவே.
விரதம் என்பது விரை பை என்ற ஆணுறுப்பை அடக்கி வைக்கும் காலமே.
அது இனப்பெருக்கத்திற்கு தடையாக அல்ல! முறையான வாழ்வியலுக்கு வழி செய்ய.விரதங்கள் ஐயப்பனுக்கு மட்டுமானதும் அல்ல..

வாழ்க தமிழ் வெல்க தமிழர்!

நன்றி: பாரிசாலன் உடையார்

Tuesday, March 24, 2020

எதிர்ப்பு சக்தி மூலிகை கசாயம் - சித்த மருத்துவர் திருத்தணிகாசலம்

எதிர்ப்பு சக்தி மூலிகை கசாயம் - சித்த மருத்துவர் திருத்தணிகாசலம்

தேவையான பொருள்கள்
பெருகாஞ்சூரி,
திப்பிலி,
சித்திர மூல வேர்பட்டை,
சங்கன் வேர்பட்டை,
வெல்லருகு சமூலம்,
நிலவேம்பு சமூலம்,
கழர்ச்சி வேர்,
கண்டங்கத்திரி சமூலம்,
பேராமுட்டி,
சித்திரத்தை,
மாவிலங்க வேர்பட்டை,
பேரரத்தை,
சிருகாஞ்சூரி வேர்,
சதகுப்பை,
விஷ்னு கந்தி,
சிறுதேக்கு,
சுக்கு,
திப்பிலி,
செவ்வியம்,
கோஷ்டம்

செய்முறை
அனைத்தையும் சம அளவு எடுத்து கொண்டு சிறு சிறு துண்டுகளாக உடைத்துக்கொண்டு, அதில் ஒரு கை அளவு எடுத்து 1 லிட்டர் தண்ணீரல் போட்டு நல்லா கொதிக்கவிட்டு அந்த தண்ணீர் அரை லிட்டராக சுண்டும் வரை கொதிக்கவிட்டு பின் அதை வடிகட்டி குடிக்கவேண்டும்

குடிக்கும் அளவு
5 வயதுக்கு குறைவான குழந்தைகள் 2.5 மி.லி +2.5 மி.லி தேன் சேர்த்து குடிக்கவும்
5 வயதுக்கு மேலான குழந்தைகளுக்கு 5 மி.லி + 5 மி.லி தேன்
பெரியவர்களுக்கு 10 மி.லி
வயதானவர்களுக்கு 50 மி.லி அளவு குடிக்கலாம்.

உணவிற்கு முன்பாக குடிக்கலாம், அவ்வப்போது கொஞ்சகொஞ்சமாக அருந்தலாம். இம்மருந்தை குடிக்கும்போது மலம் இளகுவாக போகலாம் பயப்பட தேவையில்லை.

இது உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ..வருமுன் காப்போம்.. மேலும் அரசின் அறிவுறைப்படி வெளியில் செல்வதை தவிறுங்கள்.. குறந்தது 14 நாட்கள் தனிமைபடுத்திக்கொண்டு நோய் பரவுவதை தவிறுங்கள்..