JFW பெண்களுக்கான விருது வழங்கும் விழாவில் 2019 ஆம் ஆண்டு வெளியான ராட்சசி திரைப்படதிற்காக சிறந்த நடிகையாக தேர்வுசெய்யப்பட்டார் ஜோதிகா. அவர் வேறு படத்திற்காக தஞ்சையில் நடந்த படப்பிடிப்பின்போது ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டார்
அந்த விழாவில். தொலைக்காட்சியில் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான பின்பு அவர் பேசியது பலரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. மக்களிடத்தில் பல்வேறு கருத்துக்கள் வந்த வண்ணம் உள்ளன.
அந்த விழாவில் ஜோதிகா பேசியது:
"தஞ்சைப் பெரிய கோயில் மிகவும் புகழ்பெற்றது அழகாக இருக்கும், அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். நானும் பார்த்திருக்கிறேன். மிகவும் அழகாக இருந்தது. அதை அருமையாகப் பராமரித்து வருகிறார்கள். மறுநாள் என்னுடைய படப்பிடிப்பு மருத்துவமனையில் நடந்தது. அது சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தது. நான் கண்டதை வாயால் கூற முடியாது, அவ்வளவு மோசமாக இருந்தது. எல்லோருக்கும் ஒரு கோரிக்கை. கோயிலுக்காக அதிக காசு கொடுக்கிறீர்கள் வண்ணம் பூசிப் பராமரிக்கிறீர்கள். தயவு செய்து அதே தொகையைப் பள்ளிகளுக்கும் கொடுங்கள். மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள். இது மிகவும் முக்கியம். மருத்துவமனையில் நான் அந்தக் காட்சியைக் கண்டதும் எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. மருத்துவமனைகளும் பள்ளிகளும் மிக முக்கியம். தயவுசெய்து அவற்றுக்கு நிதியுதவி கொடுங்கள்"
அந்த விருது வழங்கும் விழாவில் நடிகை ஜோதிகா சொல்வதில் எந்த தவறும் இல்லையே.
கோவில்களுக்கு பணத்தை அதிகப்படியாக செலவுசெய்து பராமரிப்பு பணிகளை செய்வதுபோல், பள்ளிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் கூடுதல் கவனம் முக்கியத்துவம் அளித்து பராமரிப்பு பணியை செய்யலாமே, சுத்தமாக வைத்திருக்கலாமே என்றுதானே கூறுகிறார்.
கோவிலை போன்று மருத்துவமனையும், பள்ளியும் பொது மக்கள் கூடும் சமூக இடம்தானே. அந்த மருத்துவமனையை பார்த்துவிட்டு கோவிலுக்கு செல்ல விருப்பமில்லை என்று கூறியது அவர்களது தனிப்பட்ட விருப்பம்.
இதன் மூலம் அவர் கூறவரும் விடயத்தை குறைசொல்வதற்கு பதிலாக அவர் சொன்ன சுத்தம், சுகாதாரத்தை மருத்துவமனைகள், பள்ளிகள் என அனைத்து இடங்களிலும் நடைமுறை வாழ்க்கையில் செயல்பட வழிவகுப்பதே, செயல்படுத்துவதே அறியுடையோரின் செயல்!
ஏன் கோவில்களில், ஏனில்லை பள்ளிகளில் மருத்துவமனைகளில்!
Why Temple; Why not School, Hospital !
No comments:
Post a Comment