Shop at Amazon

Friday, October 14, 2022

தொப்பையை குறைக்க இதை ட்ரை பண்ணுங்க

இன்றைய உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் முக்கியமான பிரச்னை தொப்பை. இந்த தொப்பையை குறைக்க பெரும்பாலானோர் அதிக அளவு பணத்தையும் நேரத்தையும் செலவிடுகின்றனர். தற்போது தொப்பையை குறைப்பது உலகத்தில் மிகப்பெரிய வியாபாரமாகிவிட்டது. என்ன செய்தாலும் தொப்பை குறையாமல் நிறைய பேர் கஷ்டப்படுகின்றனர்.

பல இடங்களில் இந்த தொப்பையால் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். தொப்பையை குறைக்க பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுவது உடற்பயிற்சியும் டயட்டும் தான். மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றாமலே வீட்டில் உள்ள சமையல் பொருட்களை வைத்தே தொப்பையை குறைக்கலாம்.

1. தேன்
தொப்பையை குறைப்பதில் தேன் மற்றும் எலுமிச்சையானது முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இளஞ்சுடான நீரில் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து குடிக்கவேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் 2 வாரத்தில் தொப்பையை குறைத்து விடலாம்.

2. புதினா
அடிவயிற்றில் உள்ள கொழுப்புக்களை வெளியேற்றி விட்டாலே தொப்பை தொடர்பான பிரச்சினைகள் பாதியளவு குறைந்து விடும். இந்த கொழுப்புகளை நீக்க புதினா உதவுகிறது. தினசரி உணவில் புதினாவை சேர்த்து சாப்பிட்டால் நமது பித்த பையில் உள்ள கொழுப்புகள் கரைந்துவிடும். மேலும் இது மிக குறைந்த அளவு கலோரி கொண்டதால் உடல் எடையையும் கணிசமாக குறைகிறது.

3. தக்காளி
தக்காளியில் உள்ள 9-oxo-ODA என்கிற முக்கிய மூல பொருளானது ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்க உதவுகிறது. ஒரு பெரிய அளவு தக்காளியில் 33 கலோரிகள் இருக்கும். உடை எடையை குறைப்பதில் தக்காளி முக்கிய பங்காற்றுகிறது. எனவே தக்காளியை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

4. தேன் + பூண்டு 
தென் மற்றும் பூண்டு இணையானது நமது உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரவல்லது. தினமும் காலையில் இதனை தவறாது சாப்பிட்டு வந்தாலே தொப்பையை விரைவில் குறைக்கலாம். பூண்டு 10 பல் எடுத்து அதன் தோலை உரித்து சிறிது சிறிதாக நறுக்கி கொள்ள வேண்டும். பின்பு இதனை ஒரு கண்ணாடி ஜாடியில் போட்டு அதனுடன் தேன் ஊற்றி ஊற வைக்க வேண்டும்.

ஒரு நாள் முழுவதும் நன்கு ஊறிய பின்னர் தினசரி காலையில் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறைந்து தொப்பை நீங்கி விடும்.

No comments:

Post a Comment