Shop at Amazon

Tuesday, October 18, 2022

சுளுக்கினால் அவதியா? - இதோ எளிய வைத்தியம்

பொதுவாக அனைவக்கும் அடிக்கடி சந்திக்கும் பிரச்சினைகளின் ஒன்று தான் சுளுக்கு.

ஒடிக்கொண்டிருக்கும் போது கால் பிறளுவதாலோ, ஒடிக்கொண்டிருக்கும் பஸ்ஸைவிட்டு இறங்குவதாலோ சில சமயம் ஏற்படும் முழங்கால் கணுக்காலிலுள்ள எலும்புகளை இணைக்கும் சவ்வுகள் பாதிக்கப்பட்டு அவ்விடத்தில உள்ளே ரத்தக் கசிவும், நிண நீர்க்கசிவும் ஏற்பட்டு மிகுதியான வீக்கமும் வலியும் ஏற்படும் இதனையே சுளுக்கு என்பார்கள்.

அதனை விரட்ட நாம் வீட்டு வைத்தியங்களை கையாளுவோம்.

முறை 1:
ஜாதிக்காயை உடைத்து அதோடு சிறிது பால் சேர்த்து நான்கு அரைத்து பிறகு அதை கொதிக்க வைத்து சுளுக்கு உள்ள இடத்தில் தடவி பற்று போட வேண்டும். ஒரு நாள் கழித்து அதை வெந்நீரில் கைவிட்டு மீண்டும் இதே போல பற்று போட வேண்டும். இப்படி தொடர்ந்து மூன்று நாட்கள் பற்று போட்டால் சுளுக்கு நீங்கும்.

முறை 2:
பூண்டை உரித்து எடுத்துக்கொண்டு அதோடு சிறிது உப்பு சேர்த்து இரண்டையும் நன்கு இடித்து சுளுக்கு உள்ள இடத்தில் பற்று போட்டால் விரைவில் சுளுக்கு சரியாகும்.

முறை 3:
பிரண்டையை நன்கு பிழிந்து சாறு எடுத்துக்கொண்டு அதில் மஞ்சள் மற்றும் உப்பை சேர்த்து நன்கு காய்ச்ச வேண்டும். பிறகு அதை இதமான சூட்டில் சுளுக்கு உள்ள இடத்தில் தடவி வந்தால் சுளுக்கு நீங்கும்.

முறை 4:
முருங்கை பட்டையோடு பெருங்காயம், கடுகு மற்றும் சுக்கை சேர்த்து நன்கு அரைத்து சூடு செய்து, இதமான சூட்டில் சுளுக்கு உள்ள இடத்தில் தடவி பற்று போட்டால் சுளுக்கு நீங்கும்.

முறை 5:
கையில் சுளுக்குள்ளவர்கள், கற்ப்பூரத்தையும் மிளகு தூளையும் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, அதை ஒரு துணியில் நனைத்து கையில் எந்த இடத்தில் சுளுக்கு உள்ளதோ அங்கு போடலாம்.

Saturday, October 15, 2022

சுவாசக்குழாய் அடைப்பை தடுக்க உதவும் எளிமையான வைத்தியம்


தேவையான பொருட்கள்:
சுக்கு - 20 கிராம்,
மிளகு - 20 கிராம்,
திப்பிலி - 20 கிராம்,
தேன் - 20 சிறிதளவு.

செய்முறை:
முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.

சுக்கு, மிளகு மற்றும் திப்பிலி ஆகிய மூன்று பொருட்களையும் தனித்தனியே நன்கு பொன்னிறமாக வறுக்கவும்.

வறுத்த பொருட்களை தனித்தனியே அரைக்கவும்.

அரைத்த பொருட்களை ஒன்றாக சேர்த்து ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.

இரண்டு தேக்கரண்டி அரைத்த பொடியை எடுத்துக்கொண்டு சிறிதளவு தேன் சேர்த்து காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளில் சாப்பிட்டு வரவேண்டும்.

Friday, October 14, 2022

தொப்பையை குறைக்க இதை ட்ரை பண்ணுங்க

இன்றைய உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் முக்கியமான பிரச்னை தொப்பை. இந்த தொப்பையை குறைக்க பெரும்பாலானோர் அதிக அளவு பணத்தையும் நேரத்தையும் செலவிடுகின்றனர். தற்போது தொப்பையை குறைப்பது உலகத்தில் மிகப்பெரிய வியாபாரமாகிவிட்டது. என்ன செய்தாலும் தொப்பை குறையாமல் நிறைய பேர் கஷ்டப்படுகின்றனர்.

பல இடங்களில் இந்த தொப்பையால் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். தொப்பையை குறைக்க பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுவது உடற்பயிற்சியும் டயட்டும் தான். மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றாமலே வீட்டில் உள்ள சமையல் பொருட்களை வைத்தே தொப்பையை குறைக்கலாம்.

1. தேன்
தொப்பையை குறைப்பதில் தேன் மற்றும் எலுமிச்சையானது முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இளஞ்சுடான நீரில் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து குடிக்கவேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் 2 வாரத்தில் தொப்பையை குறைத்து விடலாம்.

2. புதினா
அடிவயிற்றில் உள்ள கொழுப்புக்களை வெளியேற்றி விட்டாலே தொப்பை தொடர்பான பிரச்சினைகள் பாதியளவு குறைந்து விடும். இந்த கொழுப்புகளை நீக்க புதினா உதவுகிறது. தினசரி உணவில் புதினாவை சேர்த்து சாப்பிட்டால் நமது பித்த பையில் உள்ள கொழுப்புகள் கரைந்துவிடும். மேலும் இது மிக குறைந்த அளவு கலோரி கொண்டதால் உடல் எடையையும் கணிசமாக குறைகிறது.

3. தக்காளி
தக்காளியில் உள்ள 9-oxo-ODA என்கிற முக்கிய மூல பொருளானது ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்க உதவுகிறது. ஒரு பெரிய அளவு தக்காளியில் 33 கலோரிகள் இருக்கும். உடை எடையை குறைப்பதில் தக்காளி முக்கிய பங்காற்றுகிறது. எனவே தக்காளியை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

4. தேன் + பூண்டு 
தென் மற்றும் பூண்டு இணையானது நமது உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரவல்லது. தினமும் காலையில் இதனை தவறாது சாப்பிட்டு வந்தாலே தொப்பையை விரைவில் குறைக்கலாம். பூண்டு 10 பல் எடுத்து அதன் தோலை உரித்து சிறிது சிறிதாக நறுக்கி கொள்ள வேண்டும். பின்பு இதனை ஒரு கண்ணாடி ஜாடியில் போட்டு அதனுடன் தேன் ஊற்றி ஊற வைக்க வேண்டும்.

ஒரு நாள் முழுவதும் நன்கு ஊறிய பின்னர் தினசரி காலையில் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறைந்து தொப்பை நீங்கி விடும்.

Monday, October 10, 2022

ஒரே ஒரு அதிசயம் பல நோய்களுக்கு தீர்வு!



நமது உடலில் ரத்தம் சுத்தமாக இருந்தாலே பாதி நோய்கள் நம்மை தீண்டாது. அசுத்த ரத்தத்தால் நமது உடல ரிப்பேர் செய்ய இயலாமல் திணறும். கழிவுகள் சேரும், கொழுப்புகள் கூட சேர்ந்து இதய நோய்கள், ரத்த அழுத்தம், பக்க வாதம் என பல அபாயமான நோய்களுக்கு அடித்தளமாக அமைந்து விடும்.

நாம் சரியான உணவு, உடற்பயிற்சி போன்ரவற்றை செய்கிறோமா என சோதித்துக் கொள்ள வேண்டும். நமது உடலில் தங்கும் அன்றாடக் கழிவுகளை உடலானது 90 சதவீதம்தான் வெளியேற்றுகிறது. மீதமுள்ள நச்சு, கழிவுகள், கொழுப்பு போன்றவை உடலிலேயே தங்கி கேடு விளைவிக்கிறது. அதனை வீட்டிலிருந்தபடியே ஒரே ஒரு மருந்தால் வெளியேற்ற முடியும். அது என்ன என்று பார்க்கலாமா?
 
தேவையானவை 

வெந்தயம் -    250gm
ஓமம் -            100gm
கருஞ்சீரகம் - 50gm
   
செய்முறை
மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

சாப்பிடும்_முறை
இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும். இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.

நன்மைகள்
தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது.
   
கொழுப்பு
தேவையான கொழும்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது. இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்படுகிறது.
   
சீரான_ரத்தம்
இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது. இருதயம் சீராக இயங்குகிறது. கண் பார்வை தெளிவடைகிறது.
   
அழகு
சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீக்கப்படுகிறது. உடலில் உறுதியும், தேக மினுமினுப்பும், சுறுசுறுப்பும் உண்டாகிறது. நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது.

பல்_எலும்புகள்
எலும்புகள் உறுதியடைந்து எலும்பு தேய்மானம் நீங்குகிறது. ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பற்கள் வலுவடைகிறது.

உடல்_பலம்
இந்த கலவையை 2-3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிடும் போது நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் குறைகிறது. நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள்.

சிறுநீரக பிரச்சனைகள் வராமலிருக்க தினமும் ஒரு செவ்வாழை பழம் - இயற்கை மருத்துவம்

வாழைப்பழங்களில் செவ்வாழையில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது.

குறிப்பாக இதில் பீட்டா-கரோட்டீன் மற்றும் வைட்டமின் சி வளமாக உள்ளது. பீட்டா-கரோட்டீன் தமனிகள் தடிமனாவதைத் தடுக்கும் மற்றும் உடலை இதய நோய், புற்றுநோயின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பளிக்கும்.

பீட்டா-கரோட்டீன் உடலுக்கு மிகவும் இன்றியமையாதது. பீட்டா-கரோட்டீன் உடலினுள் செல்லும் போது வைட்டமின் ஏ-வாக மாற்றப்பட்டு, கண்களின் ஆரோக்கியத்தையும், நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும், சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

செவ்வாழை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

செவ்வாழையில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. 

இது சிறுநீரக கற்கள் உருவாவது, இதய நோய் மற்றும் புற்றுநோய் தாக்குதலைத் தடுக்கும். மேலும் இது உடலில் கால்சியம் உறிஞ்சுவதை அதிகரித்து, எலும்புகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். எனவே உங்களுக்கு சிறுநீரக பிரச்சனைகள் ஏதும் வராமலிருக்க தினமும் ஒரு செவ்வாழையை உட்கொண்டு வாருங்கள்.

செவ்வாழையில் மற்ற வாழைப்பழங்களை விட கலோரிகள் மிகவும் குறைவு. 

எனவே எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் ஒரு செவ்வாழையை காலையில் உட்கொண்டு வந்தால், பசி நீண்ட நேரம் எடுக்காமல் இருக்கும்.

செவ்வாழையில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இரத்தணுக்களின் அளவை சீராகப் பராமரிக்கும்.

நீங்கள் எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்க விரும்பினால் தினம் ஒரு செவ்வாழையை சாப்பிடுங்கள். 

நெஞ்செரிச்சலால் கஷ்டப்படுபவர்கள் தினமும் செவ்வாழையை உட்கொண்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும். எப்படியெனில் இதில் இயற்கையாக ஆன்டாசிட் தன்மை உள்ளது. இதனால் இப்பழத்தை தினமும் உட்கொண்டு வர நெஞ்செரிச்சல் பிரச்சனை நீங்கும்.

ஒரே மாதத்தில் 10 கிலோ வெயிட் குறைக்கலாம் - இதை செய்து குடிங்க

இதை ஒவ்வொரு நாளும் குடித்து வந்ததால் ஒரே மாதத்தில் 10 கிலோ வெயிட் குறைக்கலாம்

இது எந்த மாயமோ மந்திரமோ கிடையாது. உண்மையிலேயே நம்முடைய வீட்டு கிச்சனில் இருக்கும் சில இயற்கையான மருந்துப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த நீர் உடலில் தேங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புகளை மிக எளிமையாகக் கரைத்துவிடுகிறது.
அப்படிப்பட்ட இந்த இயற்கை பானத்தை தினமும் காலையில் குடித்து வந்தால், எந்த அதிகப்படியான டயட்டும் இல்லாமல் ஒரே மாதத்தில் 10 கிலோ வரையிலும் எடையைக் குறைக்க முடியும்.

தேவையான பொருட்கள்

சீரகப்பொடி – 1 ஸ்பூன்
பட்டைத்தூள் – கால் ஸ்பூன்
இஞ்சி பவுடர் – அரை ஸ்பூன்
எலுமிச்சை தோல் – 2 துண்டு
தேன் – சுவைக்கேற்ப

செய்முறை

அரை லிட்டர் அளவுக்கு தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அடுப்பை அணைத்துவிடுங்கள்.
நல்ல கொதிநிலையில் உள்ள தண்ணீரில் சீரகப்பொடி, இஞ்சிப்பொடி, பட்டைத்தூள்,எலுமிச்சை தோல் ஆகியவற்றைப் போட்டு ஊறவிடுங்கள்.
அந்தப் பொருட்களின் சாறு முழுவதும் தண்ணீரில் இறங்கிய பின்பு, வடிகட்டி, சற்று ஆறியவுடன் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம்.
இந்த பானத்தை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
கட்டாயமாக ஒரு மாதத்திற்குள் 10 கிலோ வரை எடையைக் குறைக்க முடியும்.

Saturday, October 8, 2022

நரம்பு சுருட்டல் எனும் வெரிகோஸ் நோயை குணப்படுத்த பாட்டி வைத்தியம்

வெரிகோஸ் நரம்பு என்பது நரம்பு சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சனையாகும். பொதுவாக சாதாரண நரம்பில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். ஆனால் வெரிகோஸ் நரம்பில் ரத்தம் பின்னோக்கியும் செல்லும். காரணம் நரம்புகள் ஒன்றோடொன்று பின்னப்பட்டும் திருகியும் காணப்படும். இதனால்தான் அங்கே சிலந்தி போல் நரம்புகள் காணப்படுகின்றன. பரம்பரையாக இது ஏற்படுவதுண்டு.

அம்மாவிற்கு இருந்தால் குழந்தைக்கும் வரும் வாய்ப்புகள் உள்ளன. இது தவிர நாள் முழுவதும் அதிக நேரம் நிற்பது, அதிகமாய் கால்களுக்கு சிரமம் தருவது ஆகியற்றால் வெரிகோஸ் நரம்பு வர காரணமாகிவிடும்.

மற்ற காரணங்கள் : வயது, ஜீன், ரத்த ஓட்டத்தில் பிரச்சனைகள் உடற்பயிற்சி போதிய அளவில் இல்லாமல் இருப்பது, ஹார்மோன் மாற்றங்கள் ஆகியவற்றால் இந்த வெரிகோஸ் பிரச்சனை உண்டாகும். இதனால் பெரும் பாதிப்பு இல்லையென்றாலும் அப்படியே விட்டால் பிரச்சனைகள் தரும்.

வெரிகோஸ் நரம்பை குணப்படுத்துவது எப்படி? 

மிகத் தீவிரமான வெரிகோஸ் நரம்பு இருந்தால் அதனால் தாங்க முடியாத வலி உண்டாகும். நடக்க முடியாமல் அவதிப்படுவார்கள். ரத்த ஓட்டம் பாதித்து, மரத்தும் போகும். இந்த மாதிரியான தீவிர நிலையில் சரிப்படுத்த அறுவை சிகிச்சை உண்டு.

மூலிகை சாறு: இதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்று இல்லை. இதனை வீட்டிலேயே மூலிகை சாற்றின் மூலம் குணப்படுத்தலாம். இதனால் பக்க விளைவுகள் ஏதும் இல்லை.

தேவையானவை :
ஆப்பிள் சைடர் வினிகர் – 2 ஸ்பூன்
கேரட் – அரை கப்
சோற்றுக் கற்றாழை – அரை கப்
தயாரிக்கும் முறை : கேரட்டை பொடிபொடியாக நறுக்கி அதனுடன் கற்றாழையை கலந்து மிக்ஸியில் அரையுங்கள். அதில் சிறிது சிறிதாக ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து மேலும் அரையுங்கள். க்ரீம் போன்ற பதம் வரும் வரைக்கும் நைஸாக அரைக்க வேண்டும். நீர் கலக்கக் கூடாது.

எப்படி உபயோகிப்பது : இந்த க்ரீம் போன்ற கலவையை வெரிகோஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேய்த்து, காலை மேலே தூக்கி ஏதாவது உயரமான பொருளின் மீது வைத்துக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் அப்படியே வைத்திருக்க வேண்டும். பின்னர் கழுவலாம். இதனை அந்த நரம்புகள் மறையும் வரை தினமும் உபயோகியுங்கள். நல்ல பலனைத் தரும்.

Friday, October 7, 2022

நீரழிவு, கொலஸ்டரோலை உடம்பிலிருந்து முற்றாக அகற்றும் பூசணி விதை!



ப்ரோஸ்டேட் வீக்கம், நீரிழவு மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற மூன்றுமே ஆண்களை பாதிக்கும் நோய்களாகும். இந்த மூன்று நோய்களியயும் குண்மாக்கும் சக்தி பூசணிக்காயில் உள்ளது.

பூசணிக்காய் ஒரு சுவையான காய் மற்றும் பல்வேறு நன்மைகளை கொண்டது.ஆனால் அதனுடைய விதை மிகவும் சக்தி வாய்ந்தவை.

பூசணிக்காய் விதையில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.அத்துடன் பல்வேறு சுகாதார நலன்களை உள்ளடக்கியது.இந்த விதையில் மிகவும் முக்கியமான குயூகர்பிட்டேசின் உள்ளது.இது புரோஸ்டேட் விரிவைக் குணப்படுத்துவதுடன் மற்ற பிரச்சனைகளையும் குணமாக்கும்.

புரோஸ்டேட் விரிவு,சர்க்கரை நோய் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் இவற்றை குணமாக்க கூடிய ஒரு பானத்தை எவ்வாறு தயாரிக்க வேண்டும் என்று பார்க்கலாம்.பூசணிக்காய் விதை டீ இது மிகவும் எளிதான ஒன்று தயாரிப்பதற்கும்,உபயோகப்படுத்துவதற்கும்.இதற்குத் தேவையான பொருட்களை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

- ஒரு கப் தண்ணீர்.

- ஒரு கையளவு பூசணி விதை.

நன்மைகள் :
1. பூசணி விதை ஒரு சிறந்த சிறுநீர் பிரிப்பு(அதிகமான சிறுநீரை வெளியேற்றும்)ஆகும்.இவ்வாறு சிறுநீரை வெளியேற்றுவதால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.

2. வீக்கத்தை குணமாக்கக் கூடிய அலர்ஜி நீக்கியாகவும் செயல்படுகிறது.

பூசணி தேநீர் தயாரிக்கும் முறை :இந்த டீயைத் தயாரிக்க செய்ய வேண்டியது பூசணி விதையை பொடியாக்கி ஒரு பானை நீரில் கலக்க வேண்டும்.இந்தக் கலவையை 15 நிமிடங்கள்கொதிக்க விட வேண்டும்.

பூசணி தேநீர் தயாரிக்கும் முறை: பின்பு அதை வடிகட்டி விட வேண்டும்.இப்போது பூசணி விதை டீ ரெடி.இதை நீங்கள் பருகலாம்.இவ்வாறு செய்து தினமும் ஒரு கப் குடித்து வந்தால் உடலில் எந்த பிரச்னையும் வராது.

குழந்தைகளுக்கு உதவும் இயற்கை வீட்டு வைத்தியம்!

காலையில் குழந்தைகள் கண் விழித்தவுடன் ஒரு சொட்டு தேனை நாக்கில் தடவவும். தேன் உடல் வளர்ச்சிக்கு இயற்கை அளித்த ஓர் அற்புதமான வரப்பிரசாதம். பொதுவாகவே வசம்பு போடுவதால் குழந்தைக்கு நாக்கு தடித்து சீக்கிரம் பேச்சு வராமல் இருக்கும் என்பார்கள். ஆனால், தேன் தடவுவதால் நாக்கு புரண்டு விரைவில் பேச்சு வரும்.

சில குழந்தைகள் அடிக்கடி வாந்தி எடுக்கும். அதற்கு வேப்பார்க்குத்துளி, அரை மிளகு, ஒரு சீரகம், ஒரு ஸ்பூன் ஓமம், ஒரு பல் பூண்டு இவற்றை அம்மியில் தட்டி துளி வெந்நீர் விட்டுப் பிழிந்து வடிக்கட்டி ஊற்றினால் வாந்தி சட்டென்று நின்றுவிடும். நாட்டு மருந்துக் கடையில் மாசிக்காய் என்று கிடைக்கும். அதை வாங்கி சாதம் வேகும…்போது, அதோடு போட்டு எடுத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும். குழந்தையைக் குளிப்பாட்டும் போது, நாக்கில் தடவி வழித்தால் நாக்கில் உள்ள மாவு அகன்று குழந்தை ருசித்துப் பால் சாப்பிடும்.

தினமும் இரவில் விளகேற்றியவுடன் சுட்ட வசம்பைக் கல்லில் உரைத்து குழந்தைக்கு ஒரு சங்கு குடிக்கக் கொடுத்து, சிறிது தொப்புளைச் சுற்றி தடவுங்கள். பின் ஒரு வெற்றிலையில் எண்ணெய் தடவி அதை விளக்கில் காட்டி வாட்டி, பொறுக்கும் சூட்டில் அந்த இலையை குழந்தையின் தொப்புள் மேல் போட்டால் அசுத்த காற்றெல்லாம் வெளியேறி, வயிறு உப்புசம் இல்லாமல் இருக்கும்!
குழந்தை தினமும் இரண்டு, மூன்று முறை மலங்கழிக்க வேண்டும். இல்லாமல் கஷ்டப்பட்டால், முதலில் ஒரு பாலாடை வெந்நீர் புகட்டிப் பார்க்கவும். அப்படியும் போகவில்லை என்றால் ஐந்தாறு விதையில்லாத உலர்ந்த திராட்சைகளை வெந்நீரில் ஊறப்போட்டு கசக்கிப் புகட்டினால் ஒரு மணி நேரத்தில் போய்விடும். மலங்கட்டி அவஸ்தைப்பட்டால் விளக்கெண்ணையோ, வேறு மருந்துகளோ தர வேண்டாம். ஆசனவாயில் வெற்றிலைக் காம்போ சீவிய மெல்லிய சோப் துண்டோ வைத்தாலே போய்விடும்.

பிறந்த குழந்தைக்கு தலைக்கு ஊற்றியதும், கால் கஸ்தூரி மாத்திரையை தாய்ப்பாலில் கரைத்து ஊற்றினால் சளிப்பிடிக்காது. ஒவ்வொரு மாதமும் கால், கால் மாத்திரையாக அளவைக் கூட்டிக் கொள்ளலாம். ஒரு வயதுக்கு மேல் துளசி, கற்பூரவல்லி இலைகளை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டிக் கொடுத்தால் சளிப் பிடிக்காது, இருந்தாலும் அகன்று விடும். குழந்தைகளுக்கு பேதிக்குக் கொடுப்பது, எண்ணெய் தேய்த்து ஊற்றுவது, காதில் மூக்கில் எண்ணெய் விடுவது சுத்தமாக வைத்திருப்பது நலமாக இருக்க செய்யும்.

Monday, October 3, 2022

குழந்தை பாக்கியம் தள்ளிப் போகிறதா? இதோ இயற்கை வைத்திய முறை!!!

மாதவிலக்கு கோளாறுதான் குழந்தை பேறு தள்ளி போக காரணம் என்றால் அந்தக் கோளாறு நீங்கி, கருத்தரிக்கறதுக்கு இயற்கை வைத்திய முறைகள் உள்ளது. அது குறித்து பார்க்கலாம்.

மாதவிலக்கு கோளாறு காரணமாக குழந்தை பாக்கியம் தள்ளிப் போகிறதா?
இப்ப எல்லாம் குழந்தை இல்லைனு ஏக்கப்படற தம்பதிகளோட எண்ணிக்கை அதிகமாயிடுச்சு. குழந்தை பாக்கியம் கிடைக்காம போறதுக்கு உடல்நிலை, வாழ்க்கைமுறை, உணவுப் பழக்க வழக்கம்னு பல விஷயங்கள் காரணமா இருக்கு! மாதவிலக்குக் கோளாறுகள் இருந்தாலும்கூட கருத்தரிக்கறதுல சிக்கல் வரும். மாதவிலக்கு கோளாறுதான் காரணம் என்றால் அந்தக் கோளாறு நீங்கி, கருத்தரிக்கறதுக்கு இயற்கை வைத்தியமுறைகள் உள்ளது. அது குறித்து பார்க்கலாம்.

அரை லிட்டர் பசும்பால்ல, கால் கிலோ மலைப் பூண்டை உரிச்சுப் போட்டு வேக வையுங்க. கலவை நல்லா சுண்டி அல்வா பதத்துக்கு வந்ததும், தேவையான அளவு கற்கண்டு… இல்லேன்னா, பனங்கற்கண்டு போட்டு கிளறி இறக்குங்க. மாதவிலக்கான நாட்களிலிருந்து ஒரு வாரத்துக்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் இதைச் சாப்பிட்டு வந்தா, கண்டிப்பா பலன் கிடைக்கும்.

இன்னொரு வைத்தியமும் இருக்கு! பசும் மஞ்சளை அரைச்சு எடுத்த சாறு, மலை வேம்பு சாறு, நல்லெண்ணெய்… இது எல்லாத்தையும் சம அளவு எடுத்து கலந்து வெச்சுக்குங்க. இதை சூடு பண்ணத் தேவையில்லை. மாதவிலக்கான முதல் மூணு நாட்களில் காலை, சாயந்திரம்னு ரெண்டு வேளையும் தலா ரெண்டு டேபிள்ஸ்பூன் சாப்பிடணும். எனக்குத் தெரிஞ்சு நிறைய பெண்களுக்கு இந்த மருத்துவத்தை சிபாரிசு பண்ணி, பலன் கிடைச்சிருக்கு.

உடம்புல ஊளைச் சதை அதிகம் இருந்தாலும் கரு உண்டாவதில் பிரச்சனை வரும். தினம் அஞ்சுலருந்து பத்து எண்ணிக்கை வரை சின்ன வெங்காயத்தை எடுத்து பச்சையா சாப்பிட்டா, கொஞ்ச நாட்களிலேயே ஊளைச் சதை குறைஞ்சு ஆளும் ஸ்லிம்மாகிடுவாங்க. சீக்கிரமே வீட்டுல ‘குவா குவா’ சத்தமும் கேட்கும்.

தினம் ஒரு உலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

பலருக்கும் அத்திப்பழம் பற்றி தெரியாது. ஏன் பாத்திருக்கக்கூடமாட்டார்கள். அப்படியே பார்த்தாலும், இதை எப்படி சாப்பிடுவது என்று பலரும் கேட்பார்கள். ஏனெனில் அத்திப்பழம் பார்ப்பதற்கு அப்படி இருக்கும். மேலும் இந்த அத்திப்பழம் அவ்வளவு எளிதில் கிடைக்காது. ஆனால் இதன் மறுவடிவமான உலர்ந்த அத்திப்பழம் அனைத்து காலங்களிலும் கிடைக்கும்.

பலரும் கடைகளில் முந்திரி, உலர் திராட்சை, பிஸ்தா உள்ள இடங்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால் இதன் வடிவத்தைப் பார்த்து, இது எப்படி இருக்குமோ என்று நினைத்து வாங்கி சுவைத்திருக்கமாட்டீர்கள். இனிமேல் கடைக்கு சென்றால், தவறாமல் இந்த உலர்ந்த அத்திப்பழத்தை வாங்கி சாப்பிடுங்கள். ஏனெனில் மற்ற உலர் பழங்களை விட, இதில் அலாதியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. சரி, இப்போது அந்த உலர்ந்த அத்திப்பழத்தை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.

செரிமானத்தை அதிகரிக்கும்

உலர்ந்த அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. அதிலும் 3 துண்டு உலர்ந்த அத்திப்பழத்தில் ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய 5 கிராம் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் மலச்சிக்கல் மற்றும் இதர செரிமான பிரச்சனைகள் நீங்கி, குடலியக்கம் சீராக நடைபெறும்.
   
எடை குறைவு

உலர்ந்த அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளது. ஒரு துண்டு உலர்ந்த அத்திப்பழத்தில் 47 கலோரிகள் உள்ளது. இதனால் 0.2 கிராம் கொழுப்பைத் தான் இதில் இருந்து பெற முடியும். எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு, இது மிகவும் சிறப்பான ஸ்நாக்ஸ்.

உயர் இரத்த அழுத்தம்

உணவில் உப்பு அதிகம் சேர்த்து வந்தால், உடலில் சோடியத்தின் அளவு அதிகரிக்கும். அப்படி சோடியத்தின் அளவு அதிகரித்து, பொட்டாசியத்தின் அளவு குறைருந்தால், அதன் காரணமாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். ஆனால் உலர்ந்த அத்திப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாகவும், சோடியம் குறைவாக இருப்பதால், இதனை தினமும் உட்கொண்டு வந்தால், உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்கலாம்.
   
ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்தது

உலர்ந்த அத்திப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் வளமையாக நிறைந்துள்ளது. மேலும் மற்ற பழங்களை விட, அத்திப்பழத்தில் நிறைந்துள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மிகவும் தரமானது என்று ஆய்வு ஒன்று சொல்கிறது. குறிப்பாக உலர்ந்த அத்திப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஈ அதிகம் நிறைந்துள்ளது.
உறுதி செயப்பட்ட ஒரு உடல் எடை குறைப்பு டிப்ஸ்
உடல் எடை குறையக்கும் டிரெண்டிங் டிரிக்
அதிர்ச்சி: இந்த முறையில் அவர் சில நாட்களில் முடிவளர பெற்றார்.
   
இதய நோயைத் தடுக்கும்

ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், ப்ரீ-ராடிக்கல்களால் உடலின் இரத்த நாளங்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு, இதய நோயின் தாக்கம் தடுக்கப்படும். மேலும் முன்பு குறிப்பிட்டது போல், இது உயர் இரத்த அழுத்தத்தைத் தடுப்பதால், கரோனரி இதய நோயின் தாக்கமும் குறையும். மேலும் ஆய்வு ஒன்றில் உலர்ந்த அத்திப்பழம் ட்ரை-கிளிசரைடுகளின் அளவைக் குறைப்பதால், இதய நோய் வரும் வாய்ப்பு சீராக குறையும்.
   
புற்றுநோயைத் தடுக்கும்

ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்த அத்திப்பழம், ப்ரீ-ராடிக்கல்களால், செல்லுலார் டி.என்.ஏ பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு, அதனால் புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கும்.
   
எலும்புகளை வலிமையாக்கும்

ஒரு உலர்ந்த அத்திப்பழத்தில் 3% கால்சியம் நிறைந்துள்ளது. இது ஒரு நாளைக்கு ஒருவருக்கு வேண்டிய கால்சியத்தின் அளவாகும். எனவே தினமும் ஒரு உலர்ந்த அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால், எலும்புகளின் அடர்த்தி அதிகரித்து, எலும்புகள் வலிமையாகும்.
   
நீரிழிவிற்கு நல்லது

உலர்ந்த அத்திப்பழம் மிகவும் இனிப்பாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் இதை சாப்பிட யோசிப்பார்கள். ஆனால் இதில் உள்ள நார்ச்சத்து, நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் நல்லது என்பதால், இதனை உட்கொள்ளும் முன் மருத்துவரிடம் கலந்தாலோசித்து, எத்தனை எடுத்துக் கொள்வது என்று கேட்டு தெரிந்து பின் சாப்பிடுங்கள்.
   
இரத்த சோகையை தடுக்கும்

உலர்ந்த அத்திப்பழத்தில் இரும்புச்சத்தும் அதிகம் உள்ளது. அதிலும் ஒரு உலர்ந்த அத்திப்பழத்தில் 2% இரும்புச்சத்து நிறைந்துள்ளது. உடல் முழுவதும் ஹீமோகுளோபினை எடுத்துச் செல்ல இந்த கனிமச்சத்து மிகவும் இன்றியமையாதது. எனவே இதனை தினமும் ஒன்று உட்கொண்டு வந்தால், உடலின் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, இரத்த சோகை வருவதும் தடுக்கப்படும்.

இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியம்

பண்டைய இதிகாசங்களின் படி, கிரேக்கர்கள் அத்திப்பழத்தை ஒரு இயற்கை பாலுணர்வூக்கியாக பயன்படுத்தி வந்தனர். அத்திப்பழமானது புனிதமான பழமாகவும், காதல் மற்றும் கருவுறுதலுக்கு நெருங்கிய தொடர்புடையதாகவும் கருதப்பட்டு வந்தது. விஞ்ஞானரீதியாக, அத்திப்பழம் கருவுறுதவை அதிகரிக்கவும், பாலுணர்ச்சியைத் தூண்டவும் செய்கிறது. இதற்கு அத்திப்பழத்தில் உள்ள ஜிங்க், மாங்கனீசு மற்றும் மக்னீசியம், இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகரிப்பது தான் காரணம்.

Thursday, September 29, 2022

நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு - ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்

2 நிமிடங்களில் நீங்கள் வேக வேகமாய்ச் சமைத்துத் தரும், ஆசையாய் ஆசை ஆசையாய் நம் வீட்டுக் குழந்தைகள் அள்ளிச் சாப்பிடும் நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு என்றால் நம்புவீர்களா?

நம்புங்கள் என்கிறார்; 
அகமதாபாத்தைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்பு உணர்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமைப் பொது மேலாளர் ப்ரீத்தி. 'இன்சைட்’ என்கிற நுகர்வோர் விழிப்பு உணர்வு இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார். 

விளம்பரங்களால் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்து எண்ணற்ற வீடுகளில் காலை உணவாகிவிட்ட நூடுல்ஸ், உண்மையிலேயே சத்தான உணவுதானா என்று தெரிந்துகொள்ள விரும்பினார் ப்ரீத்தி. 
இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் 15 நிறுவனங்களின் நூடுல்ஸ்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

நூடுல்ஸில் இவ்வளவு சத்துக்கள் இருக்க வேண்டும் என்று இந்தியாவில் இதற்கான அளவு மதிப்பீடுகள் ஏதும் இதுவரை வரையறுக்கப்படாததால், இங்கிலாந்தின் உணவுத் தரக் கட்டுப்பாட்டு முகமையின் அளவுகளை வைத்து இந்தத் தரச்சோதனை நடந்தது. இதில் வெளியான முடிவுகள் மூலமாகத்தான் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் ப்ரீத்தி. 

ஆய்வு சொல்லும் முடிவுகள்? 
சோதனை செய்யப்பட்ட எந்த முன்னணி நிறுவனங்களின் நூடுல்ஸும் விளம்பரங்களில் காட்டப்படுவதுபோல ஏகப்பட்ட சத்துக்களை உள்ளடக்கியதாகவோ, குழந்தைகள் உடல் நலனுக்கு முற்றிலும் நன்மை பயப்பதாகவோ இல்லை.அனைத்து நூடுல்ஸ்களிலும் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் எக்கச்சக்க மடங்கு அதிகமாக உப்பு மற்றும் கொழுப்பு உள்ளன. 

100 கிராம் நூடுல்ஸில் 130 முதல் 600 மில்லி கிராம் வரை அனுமதிக்கப்பட்ட சோடியம் அளவாகும். ஆனால், இந்தியாவில் விற்கப்படும் வெவ்வேறு நூடுல்ஸ் நிறுவனங்களின் தயாரிப்புகளில் 821 மில்லி கிராம் முதல் 1943 மில்லி கிராம் வரை #சோடியம் இருந்திருக்கிறது. 

ஆனால் தேவையான மற்ற சத்துக்களோ சொல்வதைவிடக் குறைந்த அளவில்! மிகக் குறைந்த அளவுக்கே நார்ச்சத்து, புரதம், கால்சியம் ஆகியன உள்ளன. இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிதல், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் எனப் பல்வேறு ஆபத்துகளுக்கும் குழந்தைகள் ஆளாக நேரிடும்.

ப்ரீத்தி சொல்கிறார்; ஆய்வு முடிவுகளைப் பார்த்தபோது அதிர்ந்துபோனேன். இது தொடர்பாக விளக்கம் கேட்டு 15 நிறுவனங்களுக்கும் ஆய்வு நிறுவனம் சார்பில் கடிதம் அனுப்பினோம்.
ஆனால், இதுவரை அந்தக் கடிதங்களுக்கு எந்த நிறுவனமும் பதில் அளிக்கவில்லை. 

கம்பு, வரகு, சாமை, தினை, கேழ்வரகு என்று எவ்வளவோ சத்து மிக்க சிறுதானியங்கள் விளையும் மண் இது. ஆனால், அவற்றை எல்லாம் இருட்டடிப்பு செய்துவிட்டு, விளம்பரங்கள் மூலம் சந்தையைப் பிடிக்கும் பெருநிறுவனங்கள் இந்திய மக்களை குழந்தைப் பருவத்தில் இருந்தே அடிமைப்படுத்துகின்றன. 

பெற்றோர்கள் இந்த விஷயத்தில் விழிப்பு உணர்வோடு இருக்க வேண்டும். குப்பை உணவின் மூலமாக ஏற்படும் வளர்ச்சி உண்மையானது அல்ல. நாளை நம் குழந்தைகள் நிரந்தர நோயாளிகளாக நாமே காரணம் ஆகிவிடக் கூடாது; என்றார் அக்கறையுடன்.