Shop at Amazon

Wednesday, October 24, 2018

மாமிசம் மனித உணவா?






Read or otherwise Watch this Video

இயற்கை கோட்பாடுகளின் படி மனிதன் சைவமா?அசைவமா?
 
இயற்கையில் இரண்டு விதமான அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

1. சைவம் சாப்பிடும் ஜீவராசிகள்
2. அசைவம் சாப்பிடும் ஜீவராசிகள்


இவ்விரு ஜீவராசிகளையும் சற்றே ஆராய்ந்து பார்த்தால் மனிதன் சைவமா?அல்லது அசைவமா? என சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.
சைவ ஜீவராசிகளுக்கு உதாரணமாக மாடு, குதிரை, கழுதை, யானை, மான் போன்றவற்றை எடுத்துக் கொள்வோம்.

அசைவ ஜீவராசிகளுக்கு உதாரணமாக சிங்கம், புலி, நாய் போன்றவற்றை எடுத்துக் கொள்வோம்.

இனி ஆராய்ச்சி செய்வோம்:

1. இரு ஜீவராசிகளுக்கும் பற்களின் அமைப்பு.
சைவ ஜீவராசிகளுக்கு பற்கள் மனிதனை போல் தட்டையாக அமைந்துள்ளன.
அசைவ இனங்களுக்கு கூர்மையாக பற்கள் உள்ளன.

2. எவ்வாறு தண்ணீர் அருந்துகின்றன.
சைவ ஜீவராசிகள் அனைத்தும் மனிதனைப் போல் தண்ணீரை உறிஞ்சி தான் குடிக்கின்றன. அசைவ ஜீவராசிகள் தண்ணீரை நக்கிக் குடிக்கின்றன.

3. கால் விரல்கள்:-
சைவ ஜீவராசிகளுக்கு விரல்கள் மனிதனைப் போல் சிறியதாகவும், பாதம் தட்டையாகவும் இருக்கும்.
அசைவ ஜீவராசிகளுக்கு விரல்கள் நீளமாகவும், கூர்மையான நகங்களுடனும் இருக்கும்.

4. குடல் அமைப்பு:
சைவ ஜீவராசிகளுக்கு மனிதனைப் போன்றே 15 அடி வரை நீளமான குடலாக உள்ளது. காரணம், சைவ சாப்பாட்டில் நச்சுத்தன்மை குறைவாகவும், சத்துக்கள் அதிகமாகவும் இருப்பதால் உணவானது குடலில் சற்று அதிக நேரம் இருப்பதற்கான ஏற்பாடு எனவும், அசைவ ஜீவராசிகளுக்கு அசைவ உணவில் நச்சுதன்மை அதிகம் உள்ளதால் மிக குறைவான நேரத்தில் குடலை விட்டு வெளியேறுவதற்கு ஏற்றாற்போல் 5 அடிகள் மட்டுமே குடலின் நீளமாக உள்ளது.

5. சமநிலையான உடல் உஷ்ணம்:
சைவ ஜீவராசிகளுக்கு மனிதனைப் போன்றே உடலில் வெப்பம் அதிகமானால் தாகத்தை உண்டாக்கி அதிக தண்ணீர் பருக வைத்து வியர்வை என்ற செயலின் மூலமாக உடலை குளிர்விக்கிறது. அல்லது சமநிலையில் வைக்கிறது.
ஆனால் , அசைவ ஜீவராசிகளுக்கு இந்த ஏற்பாடு இல்லை. ஆதலால் தனது நாக்கினை தொங்க விட்டுக் கொண்டு அது தன்னை குளிர்விக்கிறது.

6. மலத்தின் தன்மை
சைவ ஜீவராசிகளுக்கு மனிதனைப் (சைவம் சாப்பிடும் மனிதன்) போன்றே மலம் கழிப்பதில் சிரமம் இருக்காது. மலம் துர்நாற்றம் வீசாது.
அசைவ ஜீவராசிகளுக்கு (அசைவம் சாப்பிடும் மனிதன் உட்பட) மலம் கழிப்பதில் சிரமமும், மலம் அதிக துர்நாற்றத்துடனும் இருக்கும்.
இதுவரை உடற்கூறு அளவில் ஆராய்ந்தோம்.

 இனி மனநிலையில் ஆராயலாம்:  
1. வாழும் முறை :
சைவ ஜீவராசிகள் ஒற்றுமையாக அதாவது கூட்டம் கூட்டமாக வாழும். மனிதனும் அவ்வாறே வாழ ஆசைப்படுகிறான்.
ஆனால் , அசைவ ஜீவராசிகள் தனித்தனியாக வாழும் இயல்புடையது. தன் எல்லைக்குள் தன் இனத்தைச் சார்ந்த இன்னொரு விலங்கினை அனுமதிக்காது.(இன்றைய மனிதனின் நிலையும் இதுதான்.)

2. இயல்பு :
சைவ ஜீவராசிகளின் இயல்பான குணம் சாந்தமாகவும், அமைதியாகவும் இருக்கும்.
அசைவ ஜீவராசிகள் வேகமாகவும், ஆக்ரோசமாகவும் இருக்கும்.

3. ஆக்கப்பூர்வமான வேலைகள் :
சைவ ஜீவராசிகளை ஆக்கபூர்வமான வேலைகளில் (உழுதல், வண்டி இழுத்தல்) ஈடுபடுத்த முடியும். அசைவ ஜீவராசிகளால் இவ்வாறான செயல்கள் எதுவும் செய்ய இயலாது.

மன இறுக்கம்:-
அசைவ உணவு சாப்பிடுபவர்கள் அதிக மன இறுக்கத்திற்கு உள்ளாவது ஏன்?
ஒவ்வாருவரின் உடலிலும் அபாயகரமான சமயங்களில் தப்பித்துக் கொள்வதற்காக (உடலிற்கு அதிக இயக்க சக்தியை தர ) சக்தி வாய்ந்த ஹார்மோன்கள் அட்ரீனல் சுரப்பியிலிருந்து சுரந்து இரத்தத்தில் கலக்கும்.

உதாரணமாக,
ஒரு நாய் நம்மை துரத்தினால் சாதாரண வேகத்தை விட பல மடங்கு வேகத்தில் நாம் ஒட உதவுவது இந்த அட்ரீனல் சுரப்பி சுரக்கும் நீராகும்.

இந்த நீரானது ஒவ்வொரு விலங்கும் வெட்டப்படும் போது அதிக அளவில் சுரந்து அதன் இரத்தத்திலும், சதைகளிலும் கலந்து இருக்கும்.
இவற்றை உட்கொள்ளும் மனிதன் தன் சாதாரண வேலைகளிலும் கூட ஏதோ அபாயத்தில் உள்ளது போன்ற உணர்வைப் பெறுகிறான்.
இதுவே மன இறுக்கமாக உருவெடுக்கிறது.
மனிதன் தன் ஆறாவது அறிவை சற்றும் பயன்படுத்தாது தனக்கு அதிக சக்தியும், பலமும் வேண்டியே தான் அசைவம் சாப்பிடுவதாக எண்ணுகிறான்.
ஆனால்,
ஆச்சரியம் என்னவென்றால், சைவத்தில் தான் அதிக சக்தியும், பலமும் உள்ளது. (சைவம் சாப்பிடும் யானைக்கு பலத்தில் என்ன குறை? )

உதாரணமாக,
சோயா பீன்ஸில் 40% சுத்தமான புரோட்டீன் உள்ளது. இது மாமிசத்தில் உள்ளதைவிட இருமடங்கும், முட்டையில் உள்ளதைவிட நான்கு மடங்கும் அதிகமாகும்
மேற்கண்ட இந்த ஆராய்ச்சியின் மூலம் நாம் அறிய வேண்டியது.
இயற்கையின் அமைப்பு படி மனிதன் உட்கொள்ள வேண்டியது சைவமே என அறிகிறோம்.
எனவே, மனிதன் ஆரோக்கியமாகவும், அமைதியாகவும், நிம்மதியாகவும், பொறுமையாகவும், பலசாலியாகவும், ஒற்றுமையுடனும்,
கோபம் இல்லாமலும்,
மன இறுக்கம் இல்லாமலும், மலச்சிக்கல் இல்லாமலும், நோய் இல்லாமலும் வாழ ஆசைப்படுவது எனில் சைவமே உட்கொள்வது காலச் சிறந்தது.


சுயமாய் சிந்தித்தே தெளிவோம்..

Sunday, October 7, 2018

தமிழ்மொழி செம்மொழி..!!



நம்ம மொழி செம்மொழி..!!

"அம்மா".. மூன்றெழுத்து..!!

"அப்பா".. மூன்றெழுத்து..!!

"தம்பி"..  மூன்றெழுத்து..!!

"தங்கை".. மூன்றெழுத்து..!!

"மகன்".. மூன்றெழுத்து..!!

"மகள்".. மூன்றெழுத்து..!!

"காதலி".. மூன்றெழுத்து..!!

"மனைவி".. மூன்றெழுத்து..!!

"தாத்தா".. மூன்றெழுத்து..!!

"பாட்டி".. மூன்றெழுத்து..!!

"பேரன்"..மூன்றெழுத்து..!!

"பேத்தி".. மூன்றெழுத்து..!!

இவை அனைத்தும்.. அடங்கிய..

"உறவு".. மூன்றெழுத்து..!!

உறவில் மேம்படும்..
"பாசம்".. மூன்றெழுத்து..!!

பாசத்தில் விளையும்..
"அன்பு".. மூன்றெழுத்து..!!

அன்பில் வழியும்..
"காதல்".. மூன்றெழுத்து..!!

காதலில் வரும்..
"வெற்றி".. யும்
மூன்றெழுத்து..!!

"தோல்வி"..யும்
மூன்றெழுத்து..!!

"காதல்" தரும் வலியால் வரும்..
"வேதனை".. மூன்றெழுத்து..!!

வேதனையின் உச்சகட்டதால்
வரும்..
"சாதல்".. மூன்றெழுத்து..!!

சாதலில் பறிபோகும்..
"உயிர்"..மூன்றெழத்து..!!

இது நான் எழுதிய..
"கவிதை".. என்றால்..
அதுவும் மூன்றெழுத்து..!

இது
"அருமை".. என்றால்.. அதுவும்
மூன்றெழுத்து..!!

"மொக்கை".. என்றால்..
அதுவும் மூன்றெழுத்து..!!

விமர்சனம் எப்படி வருமோ..
என்ற "கவலை".. யும்
மூன்றெழுத்து..!

"நட்பு".. என்ற மூன்றெழுத்தில்
இணைந்து படித்த..
அனைவருக்கும்
"நன்றி".. என்பதும்
மூன்றெழுத்து..!!

"மூன்று"..உம்
மூன்றெழுத்தே..!!

இவை அனைத்தும் அடங்கிய..
"தமிழ்".. உம் மூன்றெழுத்தே..!!

"வெல்க, வாழ்க " "தமிழ்"...!! 

சிவபெருமான் கொடுத்த சுதந்திரம்.. மறைக்கப்பட்ட வரலாறு..



1947 ஆகஸ்டு 15 நாம் எப்படி சுதந்திரம் பெற்றோம்.

மௌன்ட்பேட்டன் நேருவை அழைத்து உங்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கபோகிறோம் அதை எப்படி கொடுப்பது என்று கேட்க,  நேருவுக்கும் குழப்பமாக இருந்தது.

 எதை அடையாளமாக வைத்து பெறுவது? உடனே மூதறிஞர் ராஜாஜியை அணுகி நான்நாத்திகன் எனக்கு இந்த நடைமுறைகள் தெரியாது அதனால் தாங்கள் தான் தீர்வுகூற வேண்டும்...

உடனே ராஜாஜி கவலை வேண்டாம் எங்கள் தமிழகத்தில் மன்னர்களிடம் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது ராஜகுருவாக இருப்பவர் செங்கோலை புதியமன்னருக்கு குடுத்து ஆட்சிமாற்றம் செய்வர்.

நாமும் அன்னியனின் கையால் சுதந்திரம் பெறுவதை விட குருமகானின் கையால் செங்கோலை பெற்று ஆட்சி மாற்றம் அடையலாம் என்றார்.

 நேருவும் நேரம் குறைவாக உள்ளது உடனே ஏற்பாட்டை செய்யுங்கள் என்று உத்தறவிட்டார்.

ராஜாஜி உடனே திருவாவடுதுறை ஆதீனத்தை தொடர்பு கொண்டு  விசயத்தை சொல்ல அப்போது கடும் காய்ச்சலில் இருந்த ஆதீனம்அவர்கள் உடனே முறையாக செங்கோல் தயாரித்து தங்க முலாம் பூசி இளையஆதீனம் தம்பிரான்பண்டார சுவாமிகளிடம் பொறுப்பை ஒப்டைத்து கூடவே ஓதுவார் மூர்த்திகளையும் (தேவாரத்தில் இருந்து கோளறுபதிகம் பதினோரு பாடல்களை குறித்து கொடுத்து இந்த பாடல்களை பாடவேண்டும்.)உடன் அனுப்பிவைத்தார்.

 ராஜாஜி அனுப்பிய தனி விமானத்தில் டில்லி போய் சேர்ந்தனர். அப்போது ஆயிரம் ஆண்டு அடிமைத்தளையில் இருந்து  பாரதத்தின் விடுதலை பெறும் விழாவிற்காக எல்லோரும் காத்திருந்தனர் அந்த சுதந்திர வைபவ தினத்தில் மௌன்பேட்டனிடம் இருந்து செங்கோலை குருமகாசன்னிதானம் திருவாவடுதுறை ஆதீனம் தம்பிரான் பண்டார சுவாமிகள் பெற்று செங்கோலுக்கு புனிதநீர் தெளித்து ஓதுவார்மூர்த்திகள் வேயிறுதோளிபங்கன் என்று துவங்குகிற தேவாரதிருப்பதிகத்தை பாட பதினோராவது பாடலின் கடைசி வரி. " அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே."  இந்தவரி பாடி முடிக்கும் போதுதான் சுவாமிகள் செங்கோலை நேருவிடத்தில் கொடுத்தார்.

அந்த நிகழ்வை தான் நாம் சுதந்திர தினமாக கொணடாடுகிறோம்.

இந்த நிகழ்வு தமிழுக்கும் தமிழர்களுக்கும் தமிழகத்திற்கும் எவ்வளவு பெருமை இந்த விசயத்தை பாடப்புத்தகத்தில் வெளியிட்டு நாடறிய செய்யாமல் சதிசெய்தது. நண்பர்களே இவ்வளவு பெருமை வாய்ந்த செய்தியை நாடறிய செய்வோம்.

திருவாவடு துறை ஆதீனமடத்தில் செங்கோல் வைபவ கருப்பு வெள்ளை புகைப்படமாக உள்ளது .

சாப்பிட்டவுடன் படுக்காதே.. ஏன்?

‘சாப்பிட்டவுடன் படுக்காதே’ என வீட்டில் பெரியவர்கள் சொல்வதைக் கேட்டிருப்போம். ‘ஏன் படுக்கக் கூடாது?’ எனக் கேட்டால், ‘அது உடலுக்கு நல்லது அல்ல…’ என்று மட்டும் சொல்வார்கள். நாம் உட்கொள்ளும் உணவை செரிமானத்துக்கு உகந்ததாக மாற்ற, இரைப்பையில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரக்கிறது. சாப்பிட்டவுடன் படுக்கும்போது, இந்த அமிலம் உணவுக்குழாயில் பயணிக்க வாய்ப்பு அதிகம். அதாவது, மேல்நோக்கியும் பின்னோக்கியும் அமிலங்கள் போகும். இதனால், உணவுக்குழாய் பாதிக்கப்படும். இதற்காகத்தான் சாப்பிட்டவுடன் படுத்தால், உடலுக்கு நல்லது அல்ல என நம் பெரியவர்கள் சொன்னார்கள்.

இன்று, புற்றுநோயாளிகளில் 10 சதவிகிதம் பேர், உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு உணவுப் பழக்கம், வாழ்வியல் மாற்றம், மது, புகை போன்ற பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. மிருதுவான சவ்வினால் ஆன, குழல் போன்ற ஒரு பகுதி ஈசோபேகஸ். வாயில் மென்ற உணவை, வயிற்றுக்குக் கொண்டுசெல்லும் குழாய் இது. சாப்பிட்டவுடன் படுப்பதால், உணவுக்குழாயில் புண் (Esophagus reflux) ஏற்படுகிறது.

ஏன் உணவுக்குழாய் பாதிக்கப்படுகிறது?
வாயில் உணவை மெல்லும்போதே, 25 சதவிகிதம் செரிமானச் செயல்பாடு நடக்கத் தொடங்கிவிடும். உணவுக்குழாயில் எந்தவித அமிலச் சுரப்பிகளும் கிடையாது. இரைப்பையைத் தவிர, எங்கு ஹைட்ரோகுளோரிக் அமிலம் பட்டாலும், அது உணவுக்குழாயை அரிக்கத் தொடங்கும். இதனால், நெஞ்சு எரிச்சல் ஏற்படும்.
புகை, மது, சூடாகச் சாப்பிடுதல், சாப்பிடாமலேயே இருத்தல், தண்ணீர் குடிக்காமல் இருத்தல், புளிப்பு, உப்பு, காரம் அதிகமாகச் சாப்பிடுதல், குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம், சூடான காபி, டீ குடித்தல் போன்ற காரணங்களால் உணவுக்குழாய் பாதிக்கும்.
மாத்திரைகளால் ஏற்படும் விளைவுகள்
நெஞ்சு எரிச்சல் பிரச்னைக்கு, நவீன மருத்துவத்தில் ஜெல் மருந்து, ஆன்ட்டாசிட் போன்ற மாத்திரைகளைத் தருகின்றனர். இந்த மருந்துகள் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே வேலை செய்யும். தொடர்ந்து எடுத்துவந்தால், ஒரு கட்டத்தில் அமிலத்தை சுரக்காமலேயே (HCL Secretion) செய்துவிடுவதுதான் இந்த மருந்துகளின் மிகப் பெரிய பக்கவிளைவு. மேலும், பசியின்மை, மஞ்சள் காமாலை, செரிமானப் பிரச்னை போன்றவையும் ஏற்படலாம்.

ஆஸ்பிரின், முஸ்லின் போன்ற மாத்திரைகள் உணவுக்குழாயை அரிக்கத் தொடங்கிவிடும். அப்போது, ரத்த வாந்தி வர வாய்ப்புகள் அதிகம்.
உணவுக்குழாயைக் காக்க…
காலை எழுந்ததும் தண்ணீர் குடிக்கும் பழக்கம் ஆரோக்கியத்தின் ஆரம்பம். இது, நம் உடலில் வாதம், பித்தம், கபத்தை சமன்படுத்த உதவும். காலை எழுந்தவுடன் திடமான உணவைச் சாப்பிடுவதுகூட உணவுக் குழாயைப் பாதிக்கலாம்.

மணத்தக்காளிக் கீரை, மாதுளை, வாழை,  பால், தண்ணீர்விட்டான் கிழங்கு, பரங்கிக்காய், பூசணி, வெண்பூசணி லேகியம், பிடிகருணை, சீரகத் தண்ணீர், வெந்தயம் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து காய்கறிகள், கனிகள், கீரைகள், சுத்தமான தண்ணீர் ஆகியவை உணவுக்குழாய் பிரச்னையைச் சரிசெய்யும்.

உணவுக்குழாயைக் காக்க 5 வழிகள்!
உணவை எப்போதும் மென்று தின்னும் பழக்கம் அவசியம்.

காலை எழுந்ததும் ஒரு குவளை நீர் அருந்த வேண்டும்.
சீரக நீர் பருகுவதால், உணவுக்குழாய் தொடர்பான பிரச்னை வராது.
நீர், நார்ச்சத்து உணவுகளைப் பிரதானமாக சாப்பிடுவது நல்லது.
சாப்பிட்டவுடன் படுக்கக் கூடாது. குறைந்தது ஒன்றரை மணி நேரமாவது இடைவெளி வேண்டும்.

“காலையில் இஞ்சி… நண்பகல் சுக்கு… மாலை கடுக்காய்… ஒரு மண்டலம் உண்ண வயோதிகனும் வாலிபன் ஆவானே” என்ற சித்தரின் வாக்குப்படி, காலையிலே உண்ணும் உணவுதான், உணவுக்குழாய்க்கு நாம் கொடுக்கும் முதல் உணவு.

கற்றாழை: 
காலையில் முதல் உணவாகப் பருகும்போது, இதில் உள்ள கொலஜன் மற்றும் ஃபைபர், புண்களைக் குணமாக்கிவிடும். எரிச்சல் உணர்வை நீக்கும். ஆன்டிகேன்சர் மற்றும் ஆன்டி டியூமராக கற்றாழை செயல்படுகிறது.

வெள்ளரி: 
வெள்ளரியில் உள்ள நீர்ச்சத்து, நார்ச்சத்து, உடலில் உள்ள நச்சுக்களை அகற்றும். உணவுக்குழாய் தொடர்பானப் பிரச்னையைச் சரிசெய்யும்.

இஞ்சி: 
இதில் உள்ள ஃபினாலிக் காம்பவுண்ட்ஸ், உணவுக்குழாய் மற்றும் வயிறு தொடர்பான புற்றுநோய்களை வரவிடாமல் செய்யும். உமிழ்நீர் சுரக்க உதவும். செரிமான செயல்பாடு எளிதாகும்.

உணவுகுழாய் புண்களை சரிசெய்யும் ஜூஸ்!
தேவையானவை: வெள்ளரிக்காய் – 1, இஞ்சி – சிறிதளவு, கற்றாழை – 3-4 துண்டுகள், இந்துப்பு – தேவையான அளவு.

செய்முறை
வெள்ளரி, இஞ்சி, கற்றாழை ஆகியவற்றைத் தோல் நீக்கிக்கொள்ள வேண்டும். கற்றாழையை 10 முறைகளாவது, குழாய் நீரில் நன்கு கழுவ வேண்டும். இதனால், அதன் கசப்புச் சுவை நீங்கும். மூன்றையும் துண்டு துண்டாக நறுக்கி, மிக்ஸியில் அரைத்து, வடிகட்ட வேண்டும். இதில், சிறிதளவு இந்துப்பு சேர்த்துப் பருகலாம்.

பலன்கள்
வெறும் வயிற்றில் இந்த ஜூஸைப் பருகிவர, உணவுக்குழாய் புண், அல்சர், நெஞ்சு எரிச்சல் ஆகியவை குணமாகும். காலையில் இஞ்சி சேர்ப்பதால், வயோதிகம் தொடர்பான பிரச்னைகள் அனைத்தும் மறைந்துவிடும். மூப்படைதலைத் தாமதப்படுத்தும். செரிமான சக்தி மேம்படும். சாதாரண உப்பு, புண்களை மேலும் தீவிரப்படுத்தலாம். ஆகையால், இந்துப்பு எனும் ‘ஹிமாலயன் சால்ட்’ சேர்ப்பது, புண்கள் குணமாக உதவும். இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் என, செரிமான மண்டலத்தில் வாய் முதல் ஆசனவாய் பகுதி வரை உள்ள பிரச்னைகளைச் சரிசெய்யும் திறன் இதற்கு உள்ளது.

Friday, October 5, 2018

வாழ்வியல் உண்மைகள் #1

தெரிந்து மிதித்தாலும்
தெரியாமல் மிதித்தாலும்..,
மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்...!!

நினைப்பது போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை..,
அழகாய் அமைந்த வாழ்க்கையைக் கூட சிலருக்கு வாழத் தெரிவதும் இல்லை..!

சந்தோஷமா வாழறேன்' னு காட்டிக்கொள்ள தான் பணம் தேவைப்படுகிறது..,
உண்மையில், சந்தோஷமா வாழ பணம் ஒரு பொருட்டே இல்லை

நோய் வரும் வரை உண்பவன்,
உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டி வரும்!

பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல...
ஆனால், செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல..!

பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா?  செலவு செய்யுங்க.....!
உங்களின் மதிப்பு தெரியவேண்டுமா?.. கடன் கேளுங்க.!

பிச்சை போடுவது கூட சுயநலமே...,
புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால்...

அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை...,
ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது.

வாழ்க்கையை கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு...,
அதற்கு அவமானம் தெரியாது
விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்கும்..!!

வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்".
வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "குளம்"

திருமணம் -
ஒரு ஆண் நல்ல கடந்தகாலம் கொண்ட பெண்ணையும்...,
ஒரு பெண் நல்ல எதிர்காலம் கொண்ட ஆணையும் தேடுவது.!!

முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள்...,
பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள்.
அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும்.

மீண்டும் ஒரு முறை முகம் பார்த்து பேசவேண்டியிருக்கும்
என்ற ஒரு காரணத்திற்காகவே,
நம்முடைய பல கோபங்கள் தற்கொலை செய்துகொள்கின்றன...!

நேர்மையாக சம்பாதித்த பணம் பெரும்பாலும் கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை.

இவ்வுலகில் வாழ கற்றுக் கொண்டதை விட...,
வலிகளை மறைத்து சிரிக்க கற்றுக் கொண்டதே அதிகம்..............!

பகலில் தூக்கம் வந்தால்,
உடம்பு பலவீனமா இருக்குனு அர்த்தம்..!!
இரவு தூக்கம் வரலைனா மனசு பலவீனமா இருக்குனு அர்த்தம்...........!

துரோகிகளிடம் 'கோபம்' இருக்காது
கோபப்படுபவர்களிடம் 'துரோகம்' நிச்சயமாக இருக்காது..  

தன்னை நல்லவராக காட்டிக் கொள்ள *அடுத்தவரை கெட்டவராகச் சித்தரிக்கும் எவரும் நீண்ட நாள் நல்லவர் வேடத்தில் சுற்ற முடியாது..*

யார் அவர்? - சிந்திக்க வைக்கும் பதிவு

*"நான் குழந்தையாக* இருந்தபோது என்வீட்டுக்கு ஒருவரை புதிதாக அழைத்து வந்தார் என் *அப்பா."*

அவரை என் *அம்மாவுக்கும்* பிடித்திருந்தது. இருவரும் என்னை விட அவரை அதிகம் கவனித்தனர்.

அதனால் ஆரம்பத்தில் எனக்கு அவரை பிடிக்கவில்லை. சீக்கிரமே அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவராகிப் போனார்.

நாட்கள் செல்லச் செல்ல எனக்கும் அவரை மிகவும் பிடித்து விட்டது.

என் அப்பாவும் அம்மாவும் எனக்கு அறிவுரை சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.

அவரோ அறிவுரை எதுவும் கூறுவது இல்லை அவர் கூறுவது அனைத்தும் சுவாரசியமாகவே இருந்தது.

அவர் ஒரு அற்புதமான
கதை சொல்லி,
அவர் தன்னுடைய பேச்சுத் திறமையால் மணிக்கணக்கில் கட்டிப் போட்டுவிடுவார்.

காதல் கதைகளை உள்ளம் உருக சொல்லுவார். நகைச்சுவைகள் பல நலம் பட உரைப்பார். வீரக் கதைகளை உணர்ச்சிபொங்கக் கூறுவார்.

அறிவியல்,அரசியல் வரலாறு இன்னும் பலவற்றையும் கரைத்துக் குடித்தவர். கற்றுத்தருபவர்.

விந்தைகள்பல செய்து வியக்க வைத்தார்.
அவர் என்னை சிரிக்கவும் வைப்பார்..
சிந்திக்கவும் வைப்பார்.

அழவைத்து வேடிக்கையும் பார்ப்பார். அச்சுறுத்தியும் மகிழ்வார்.
ஆனந்தத்தில் மிதக்க வைப்பார்.அவஸ்தையிலும் மூழ்க அடிப்பார்.

நாட்கள் விரைந்தது .

நாளுக்கு நாள் அவரது பேச்சு அதிகரித்ததே தவிர குறையவில்லை. *அம்மாவுக்கு* இப்போதெல்லாம் அவரைப் பிடிப்பதில்லை.

அவரை வெளியே அனுப்பிவிட விரும்பினாள். ஆனால் அது முடியவில்லை.
*அப்பா* அவரைப் பற்றி அவ்வளவாக அலட்டிக் கொள்ளவில்லை.

தற்போதெல்லாம் எங்கள் வீட்டுக்கு உறவினர்கள் வருவதில்லை. உறவினர்களை சரியாக கவனிக்க முடியாமல் அவர் தடுத்தார்.

நெடுநாளைய நண்பர்களும் எங்களிடமிருந்து விலகிப் போனதற்கு அவர் காரணமானார்.

எனது தந்தை மது அருந்துவதை விரும்பமாட்டார்.
அவரோ மது அருந்துவதை உற்சாகத்துடன் ஊக்குவித்தார்.

சிகரெட் பிடிப்பது புகையிலை பயன்படுத்துவது இவற்றை ஒளிவு மறைவின்றி யார் இருந்தாலும் தயக்கம் இல்லாமல் தவறில்லை என்பது போல் தினந்தோறும் கூறி வந்தார்.

எங்கள் அன்றாட வாழ்க்கையில் உறவுமுறை முதல் உணவு முறை வரை அவரால் மாற்றங்கள் ஏற்பட்டது .

நாங்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது கூட குறைந்து போனது.

எனது *தாய் தந்தையர்* பின்பற்றச் சொல்லும் நல்ல விஷயங்களுக்கு எதிராகவே கருத்து கூறி வருவதை வழக்கமாகக் கொண்டார்.

நல்ல கருத்துக்களை அவர் காது கொடுத்துக் கேட்பதில்லை .

நாங்கள் எங்கு இடம் மாறினாலும் கூடவே வந்த அவரை தடுக்க முடிய வில்லை.

இப்போது நீங்கள் எங்கள் வீட்டுக்கு வந்தாலும் அவரைப் பார்க்கலாம்.

இன்னமும் ஹாலில் உட்கார்ந்துகொண்டு உங்களுடன் பேசக் காத்துக் கொண்டிருக்கிறார்.

நாங்கள் பேசுகிறோமோ இல்லையோ அவர் உங்களிடம் நிச்சயம் பேசுவார்.

அப்படி யார் அவர்?அவர் பெயர் என்ன? அவருக்கும் உங்களுக்கும் உள்ள பந்தம் என்ன? என்றுதானே கேட்கிறீர்கள்?

அவருடைய பெயரை சொன்னால் நீங்கள் இப்படிப் கேட்க மாட்டீர்கள்.

கொஞ்சம் இருங்கள் அவரைப் பற்றி இடைவிடாமல் சொன்னதில் தாகம் எடுத்துவிட்டது.

இதோ தண்ணீர் குடித்துவிட்டு வந்து அவர் யாரென்று கூறுகிறேன்.

சொல்கிறேன் கேளுங்கள்.

அவரை நாங்கள் *"டிவி"* என்றழைப்போம். அவருக்கு திருமணம் ஆகி விட்டது.

அவருடைய மனைவியும் எங்கள் வீட்டில் நிரந்தர இடம் பிடித்துவிட்டார்.
அவருடைய மனைவியின் பெயர் *கம்ப்யூட்டர்.*

இவர்களுக்கு ஒரு குழந்தையும் உண்டு. அவனும் எங்களோடு விடாப்பிடியாக ஒட்டிகொண்டான். அவன் பெயர் *கைபேசி*
இவர்களை குடும்பத்துடன் வெளியே அனுப்பும் காலத்தை இறைவன் விரைவிலேயே தந்தருவானாக!

நல்லதை மட்டுமே எடுத்துக்கொள்வோம்..

இயற்கை  வாழ்வியல் முறையைப் போற்றி, பின்பற்றி வாழ்வோம்..