Shop at Amazon

Tuesday, September 25, 2018

சிந்தனையில் வைக்க வேண்டிய சில விடயங்கள்



✳பேசி தீருங்கள்.
பேசியே வளர்க்காதீர்கள்.

✳உரியவர்களிடம் சொல்லுங்கள்.
ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.

✳நடப்பதைப் பாருங்கள்.
நடந்ததைக் கிளறாதீர்கள்.

✳உறுதி காட்டுங்கள்.
பிடிவாதம் காட்டாதீர்கள்.

✳விவரங்கள் சொல்லுங்கள்.
வீண்வார்த்தை சொல்லாதீர்கள்.

✳தீர்வை விரும்புங்கள்.
தர்க்கம் விரும்பாதீர்கள்.

✳விவாதம் செய்யுங்கள்.
விவகாரம் செய்யாதீர்கள்.

✳விளக்கம் பெறுங்கள்.
விரோதம் பெறாதீர்கள்.

✳சங்கடமாய் இருந்தாலும்
சத்தியமே பேசுங்கள்.

✳செல்வாக்கு இருந்தாலும்
சரியானதைச் செய்யுங்கள்.

✳எதிர் தரப்பும் பேசட்டும்.
என்னவென்று கேளுங்கள்.எவ்வளவு சீக்கிரம் தீர்வு வரும் பாருங்கள்.

✳நேரம் வீணாகாமல்
விரைவாக முடியுங்கள்.

✳தானாய்த்தான் முடியுமென்றால்,
வேறு வேலை பாருங்கள்.

*யாரோடும் பகையில்லாமல் புன்னகித்து வாழுங்கள்....*
 
வாழ்க்கை குறுகியது, ஆனால் அழகானது...

நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல; விவசாய விஞ்ஞானிகள்!





ஒரு விவசாயி இடத்தை வாங்கும் முன், முதல் நாள் இரவு ஒரு சேவலோடு போய் தங்குவார்..

விடியற்காலையில் சேவல் வழக்கம்போல் கூவினால் மண்ணில் ‘உசுரு’ இருக்குண்ணு அர்த்தம். கூவாவிட்டால் மண்ணில் சத்து இல்லைன்னு அர்த்தம்..

சேவல் நன்றாக கூவினால் மட்டுமே அந்த இடத்தை வாங்குவர்..இதிலுள்ள முக்கியமான உண்மை என்னவென்றால் சேவல் மண்ணைக்கீர அதனுள் உள்ள புழுக்களை தின்று மறுநாள் தெம்பாகக்கூவும்.

தோண்டி புழு கிடைக்கவில்லை என்றால் அந்த கூவலின் ஆற்றலில் தெரிந்துவிடும். புழு அதிகம் இருக்கும் மண் விவசாயத்திற்கு ஏற்றது.

ஒரு விவசாய கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திற்க்குள் மேய விடவேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம்.

அப்படி அவை படுக்கும் இடங்களை 4, 5 நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத் தில் தொடர்ந்து படுக்குமாம். அந்த இடத் தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்.

அறிவியல் வளர்ந்து விட்டது எங்களால் எதையும் சாதிக்க முடியும்ன்னு சொல்லி மக்களை நோயாளியாக்கி அவன் உயிரை காப்பாற்ற அவனையே மிரட்டி காசு பறிப்பதுதான் உங்கள் உண்மையான அறிவியல் வளர்ச்சி.
ஆனால் இயற்கையை கடவுளாக பாவித்து வணங்கி இயற்கையோடு வாழும் மனிதன் உங்களுக்கு படிப்பறிவில்லாதவன்.

கற்றுக்கொள்ளுங்கள் இதுபோல் நம் பாட்டன்,பூட்டன் இன்னும் ஒளித்து வைத்துள்ளான் பல விடயங்களை.

நன்றி,
உழவர் பாசறை
நாம் தமிழர் கட்சி

மது உயிருக்கு கேடு - கல்லீரலை காப்பாற்றுங்க பாதுகாப்பாக வைத்திருங்க!


 மது அருந்தும் போது உடலுக்குள் இருக்கும் ஒரேயொரு உறுப்பு மட்டும் அவனைக் காப்பாற்றவும், அவனது ரத்தத்தில் கலந்த ஆல்கஹாலை பிரிக்கவும் ஒரு நொடிகூட ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் ! உழைப்பு என்று கூட சொல்ல முடியாது. அது ஒரு போராட்டம்.
அப்படி போராடும் உறுப்பின் பெயர் கல்லீரல் !



மனிதனுக்கு மிகப் பெரிய நண்பன் யாரென்று பார்த்தால் அது அவனது கல்லீரல்தான். 

இது கெட்டுவிட்டது என்றால் உயிர் வாழ வழியில்லை.
மற்ற எந்த உடல் உறுப்புகளும் செய்யாத வேலைகளை கல்லீரல் செய்கிறது உதாரணத்திற்கு மற்ற உறுப்புகள் ஒரே நேரத்தில் 400 வேலைகளை செய்கிறது என்றால் கல்லீரல் 800 வேலைகளை செய்து முடிக்கிறது.

இது ஆயிரத்திற்கும் மேலான என்சைம்களை உருவாக்குகிறது.
நமது உடலில் சிறிய காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறினால் கூட உடனே மூளை கல்லீரலுக்கு தான் தகவல் அனுப்பும். 

பதறிப்போன கல்லீரல் நொடிப் பொழுதில் ரத்தம் வெளியேறும் இடத்திற்கு 'ப்ரோத்ரோம்பின்' என்ற ரசாயனத்தை அனுப்பி வைக்கும். 

அந்த ரசாயனம் ரத்தம் வெளியேறிக் கொண்டிருக்கும் இடத்தில் ஒரு சிலந்தி வலைப் போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி ரத்தத்தை உறைய செய்துவிடும்.
இதனால் ரத்த வெளியேற்றம் தடுக்கப்படுகிறது. 

கல்லீரல் மட்டும் இந்த வேலையை செய்ய வில்லை என்றால் ஒரு சின்ன காயம் போதும் நம்மைக் கொல்வதற்கு.

இன்றைக்கு லேசான தலைவலி என்றாலும், உடல் மெலிவதற்கு என்றாலும், சத்துப் பற்றாக்குறை என்றாலும் மாத்திரைகளாக உள்ளே தள்ளுகிறோம்.
இந்த மாத்திரைகள் எல்லாவற்றிலும் நச்சுத் தன்மை நிறைந்திருக்கிறது.
அந்த நச்சுத்தன்மையை உடலில் சேராமல் தடுத்து நம் உடலை பாதுகாப்பது கல்லீரல்தான். 

மதுவிலும் ஏராளமான விஷத்தன்மை உள்ளது. அந்த விஷத்தன்மையை போக்குவதற்காக இரவு முழுவதும் கல்லீரல் போராடுகிறது. 

கல்லீரல் விஷத்திற்கு எதிராக போராடும் வரைதான் குடிகாரர்கள் எவ்வளவு குடித்தாலும் அசராமல் நிற்பேன் என்று வசனம் பேசமுடியும்.
கல்லீரல் கெட்டு விட்டது என்றால் அவரால் ஸ்டெடியாக மூச்சுக் கூட விடமுடியாது. அப்புறம் எங்கு வசனம் பேசுவது.

கல்லீரல் ஒருவருக்கு சரியாக இல்லையெனில், சாப்பிடும் எந்த உணவும் செரிக்காது. உணவுப்பொருட்களை மட்டுமல்ல... மருந்து, மாத்திரைகள், ஆல்கஹால், ஏன் சமயத்தில் விஷத்தைக்கூடச் செரிக்கக்கூடிய சக்தி படைத்தது இந்தக் கல்லீரல். 

அத்தகைய முக்கியமானதொரு ஜீரண உறுப்பு இது. அதற்காக ‘எவ்ளோ அடிச்சாலும் தாங்குதே; ரொம்ப நல்லது போல’ என்று தாறுமாறாக அதற்குக் கஷ்டம் கொடுக்கக் கூடாது. கண்மூடித்தனமாக அளவு கடந்து குடிக்கிறபோது கல்லீரல் வீக்கத்தைத் தடுக்க இயலாது.

கல்லீரலை கழுதையோடு ஒப்பிடுவார்கள். கழுதை எவ்வளவு பாரத்தை அதன் மீது தொடர்ந்து ஏற்றிக் கொண்டே இருந்தாலும் அசராமல் சுமக்கும். அதே கழுதை படுத்துவிட்டால் திரும்பவும் எழுந்திருக்கவே எழுந்திருக்காது.
கல்லீரலும் அப்படிதான் தொடர்ந்து குடிக்க குடிக்க மது என்னும் விஷத்தோடு ஓயாமல் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கும்!

இத்தகைய கல்லீரலை காப்பாற்ற
~மதுவையும் புகையும் தவிர்க்க வேண்டும்.~

~பால் கலந்த டீ, காப்பி மற்றும் செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.~ 

அதற்கு பதிலாக கருப்பட்டி காப்பி, சுக்கு காப்பி, பால் கலக்காத இஞ்சு டீ மற்றும் எலுமிச்சை டீ, இயற்கையான பழச்சாறுகள், கரும்புச்சாறு, பதநீர், மோர் போன்றவற்றை பருகலாம். 

உணவை நிதானமாக மென்று விழுங்க வேண்டும். 

நமக்கு அசதியாக இருக்கும்போது ஓய்வுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
~முடிந்தவரை தொட்டதிற்கெல்லாம் ஆங்கில மருந்துக்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.~ 

கல்லீரல் காத்து நலமாய் வாழ்வோம்!

Monday, September 24, 2018

மக்கள் இப்படியும் பேசுவார்கள், அப்படியும் பேசுவார்கள்!




அறுவடை முடிந்த ஒரு வயல் வரப்பில் பட்டினத்தார் தலை வைத்து படுத்திருந்தார். உடம்பு முழுவதும் நெற்பயிரின் அடித்தாள் குத்தியது. துறவியான அவர் அதனைப் பொருட்படுத்தவில்லை.
-
அப்போது இரு பெண்கள் தண்ணீர் எடுக்க அந்த வழியாக சென்றனர். பட்டினத்தாரைக் கண்டதும் ஒருத்தி, “காவி கட்டிய துறவி என்றாலும் இப்படி அறுவடை செய்த வயலில் படுத்திருக்கிறாரே.. பாவம். உடம்பெல்லாம் வலிக்குமே! ” என்றாள். அதற்கு மற்றொருத்தி, “துறவி என்றாலும் தலையணை தேவைப்படுகிறதே.... வரப்பின் மீது தானே தலை வைத்து தானே தூங்குகிறார். இப்போதெல்லாம் துறவிகளுக்கு கூட சுகம் தேவைப்படுகிறது, என்று கேலி பேசினாள். பட்டினத்தார் காதில் இது விழுந்தது.
-
உடனே வரப்பில் இருந்து விலகி தரையில் படுத்துக் கொண்டார். தண்ணீர் எடுத்த பெண்கள் மீண்டும் அந்த வழியாக வந்தனர். பட்டினத்தாரைக் கண்டதும்,
பார்த்தாயா இவர் உடல் சுகத்தை விரும்பவில்லை,அதனால்தான் வரப்பிலிருந்து தலையை எடுத்துவிட்டார் என்றாள் ஒருத்தி
“இந்த துறவிக்கு இன்னும் பக்குவம் வரவில்லை போலும். அதனால் தான் மற்றவர்கள் தன்னைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்று ஒட்டுக் கேட்டிருக்கிறார். இவரே இப்படி இருந்தால் சாதாரண மக்களின்நிலையை கேட்கவா வேண்டும்! என்றாள் இன்னொருத்தி
-
இதைக் கேட்ட பட்டினத்தார், உலகம் இப்படித்தான் ஆயிரம் நாக்குடன் பேசும். இனி என் மனதிற்கு எது நியாயம் எனத் தோன்றுகிறதோ, அதையே செய்வேன்,” என முடிவெடுத்தார்.





Friday, September 21, 2018

விடுதலைப்புலிகள் - மாபெரும் புரட்சியாளர்கள்!

  Eelam flag, eelam, flag, ltte, tamilan, HD phone wallpaper | Peakpx
 உலகின் எல்லா நாடுகளின் இராணுவத்திலும் மது உண்டு. 

சில நாடுகளின் இராணுவத்தில் சிகரெட்டு பிடிக்க அனுமதி உண்டு. 


சில நாடுகளின் இராணுவங்களில் பாலியல் உறவுகளுக்கு கூட அனுமதி உண்டு.


சில நாட்டு இராணுவத்தில் போரில் கைப்பற்றுகிற எதிரி நாட்டின் பெண்களை சீரழிக்கலாம். 

இந்தியா போன்ற சில நாடுகளின் இராணுவத்தில் சொந்த நாட்டு பெண்களிடமே அத்துமீறலாம். 


உலகின் எல்லா நாட்டு இராணுவங்களிலுமே பணிபுரிகிற வீரர்களுக்கு நல்ல சம்பளம் உண்டு.
பணி ஓய்வுக்கு பின்பு சலுகைகள் உண்டு. 

ஆனால் உலகில் ஒரே ஒரு நாட்டின் இராணுவத்தில் மட்டும் தான்.
புகை பிடிக்க அனுமதி கிடையாது. 

மது அறவே கிடையாது.
சம்பளமே வாங்காமல் பணிபுரிகிற வீரர்கள் உண்டு.
இந்த நாள், இந்த நேரம் தான் மரணம் என்று தெரிந்து சமராடுகிற தனிப்படை உண்டு.
சாவை சயனைடு குப்பியில் ஏந்தித்திரிகிற தைரியம் உண்டு. 
தன் நாட்டுப்பெண்களல்ல, எதிரி நாட்டு பெண்களின் தாவணியை கூட தொட்டிராத சுய ஒழுக்கம் உண்டு. 

அந்த இராணுவத்திற்கு இன்னொரு பெயரும் உண்டு... 


விடுதலைப்புலிகள்!

உணவு உடலுக்கு கேடு!

நம் உடலில் கேன்சர் வர காரணமாக நாம் உண்ணும் தினசரி உணவுகள்.
கீழ்வரும் உணவுகளை உண்ணும் குடும்பம்; குடும்பத்தோடு விஷம் உண்ணுவது போல்.




1. மரபணு மாற்றப்பட்ட உணவு:
DNA MODIFIED FOODS/HYBRID:
அணைத்து வகை ஹைப்ரிட் காய் கறிகள், சோள உணவுகள் (ஸ்வீட் சோளம்).

2. மைக்ரோவேவில் தயாரிக்கப்பட்ட பாப்கார்ன் (ACT-II)
MICROWAVED POPCORN.

3. கேன் செய்யப்பட்ட உணவு:
(CANNED, PACKAGED DRINKS):

REAL, TROPICANA போன்ற குளிர்பானங்கள் PACK செய்ய பயன்படும் TETRAPACKINGல் bisphenol-A (BPA) என்ற மூலக்கூறு உள்ளது. உண்ணும் பானத்துடன் இந்த மூலக்கூறு நம் மூளை செல்களை பாதிக்கும்.

4.எரிக்கப்பட்ட இறைச்சி:
GRILLED MEATS:

அதிகமாக நேரம் அதிக வெப்பத்தில் கிரில் செய்யப்பட்ட இறைச்சியில் கேன்சர் செல்களை உண்டுசெய்யும் Heterocyclic Aromatic Amines உருவாகிறது. இந்த இறைச்சியை உண்ணும்பொழுது நம் உடலில் நல்ல செல்கள் Heterocyclic Aromatic Aminesவால் சிதைக்கப்பட்டு வளர்ச்சிதை மாற்றங்கள் உருவாகிறது.

5.வெள்ளை சக்கரை:
REFINED SUGAR: 

கரும்பில் இருந்து எடுக்கும் சக்கரையை சுத்திகரிப்பு செய்து வெண்ணிறமாக்க சேர்க்கப்படும் ரசாயனங்கள் சக்கரையை 'மந்த விஷமாக' மாக மாறுகிறது. வெள்ளை சக்கரைக்கு பதில் நாட்டு சக்கரை, பனைவெல்லம், தேன் போன்றவைகளை தேர்ந்தெடுங்கள்.

6. விற்பனைக்கு வரும் உப்பிட்ட உணவுகள், ஊறுகாய் வகைகள்:
(SALTED, PICKLED FOODS):

விற்பனைக்கு வரும் உப்பிட்டு பாடம் செய்யப்பட்ட உணவுகள், ஊறுகாய் வகைகளில் நிச்சயம் NITRATE செய்யப்பட்ட பதனசரக்கு சேர்க்கப்பட்டிருக்கும். இவைகளை நீண்ட நாள் உபயோகத்தில் பதனசரக்குகள் நமக்கு விஷத்தன்மை வாய்ந்த NITRATES ஐ உடலில் செலுத்தி வளர்ச்சிதை மாற்றங்களை உருவாகிறது.

7. சோடா மற்றும் கரியமிலம் ஊட்டப்பட்ட பானங்கள்:
கோக் முதல் போவோண்டோ அனைத்திலும் மேல சொன்ன வெள்ளை சக்கரை வகைதான் அதிகம். ஒரு சில பானங்களில் வெள்ளை சக்கரையை விட கொடூரமான சோளச்சக்கரை (CORN SYRUP) சேர்கிறார்கள். இது நம் உடலில் அதிகபடியானவளர்ச்சிதை மாற்றங்களை உருவாகிறது.

8. சுத்திகரிக்கப்பட்டு வெள்ளை ஆக்கப்பட்ட மாவு வகைகள்: REFINED WHITE FLOURS:
மைதா, ATTA, தோசா MIX போன்ற மாவு வகைகள் தான். கடையில் விற்கப்படும் 80% மாவு வகைகளில் சுத்திகரிக்க CAUSTIC SODA முதல் BROMIDE வரை கலப்பார்கள். அதனால் தான் சப்பாத்தி கூட பூரி போல உப்பும்.

9.பண்ணை மீன்கள்:
FARMED FISH:

பண்ணை மீன்கள் ஒரே தொட்டியோ குட்டையில் வளர்க்க படுவதால் தொற்றும் அதிகம், தொற்று வராமல், பரவாமல் இருக்க ஒவ்வொரு மீனுக்கும் ANTIBIOTIC ஊசி போடப்படும், அதைவிட PESTICIDE செய்யப்பட்ட நீரில் தான் வளர்கிறது. விலை மலிவில் கேன்சர் செல்கள் தூண்ட காரணமான ரசாயனங்களை மறைமுகமாக வாரம் ஒரு முறை நாம் எடுக்கிறோம். மீனில் இருந்து பெறவேண்டிய ஒமேகா-3 FATTY ACIDS வளர்ப்பு மீன்களில் 1% கூட இருக்காது. எப்பொழுதும் பிரெஷ் கடல் மீன் தான் சிறந்தது.

10.சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்:
Hydrogenated & Refined Oils: 

விதைகள், காய் கறிகளில் இருந்து எண்ணெய்களை எடுக்க கம்பெனிகள் கையாளும் முறையில் பல ரசாயனங்கள் உட்படுத்தப்படுகிறது. உடல் சற்றும் ஏற்றுக்கொள்ளாத வகையில் பல இரசாயன மாற்றங்கள் செய்யப்பட்ட எண்ணைகளில் தான் நாமும் நம் குடும்பநபர்களும் பல உணவுகளை சமைத்து உண்கிறோம். அருகில் கிடைக்கும் செக்கில் ஆட்டிய தேங்காய், கடலை எண்ணைகளை வாங்கி உபயோகிக்கவும்.

மேல் சொன்ன உணவுகள் தான் நாம் தினமும் உபயோகிப்போம். நல்ல தரமான பொருள் நம் அருகிலேயே கிடைக்கும். தேடிப்பிடித்துதான் வாங்க வேண்டும்.

முடிந்த வரை -
"SUGAR FREE", "DIET", "LITE", "FAT FREE" போன்று அச்சிடப்பட்ட பொருள்களை தவிர்த்தால் கேன்சர் வர காரணமான ரசாயனத்தையும் தவிர்க்கலாம்.

Dr.B.Santhosh Saravanan, M.D(A.M)., Ph.D(N.D).,
Naturopathic Physician

Thursday, September 20, 2018

பிளாட்டுகளை வாங்கி விவசாய நிலமாக மாற்றிய தேவயானி


உழவுக்கு மரியாதை செய்த நடிகைக்கு குவியும் பாராட்டு..

பொய்த்துப் போன மழை, தொடர்ந்து விவசாயத்தில் ஏற்பட்டு வரும் நஷ்டம், நகரமயமாக்கல் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் தமிழகத்தில் விவசாயம் பொய்த்துப் போய் வருகிறது. இதனால் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர்.

இதையடுத்து பெரும்பாலான விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களை பிளாட் போட்டு விற்கத் தொடங்கியுள்ளனர். ரியல் எஸ்டேட் முதலாளிகளும் விவசாய நிலங்களை கூறுபோட்டு விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை தேவயானி ஈரோடு அருகே தனது தோட்டத்துக்கு அருகே மனைகளாக பிரிக்கப்பட்டு விற்பனைக்கு தயாராக இருந்த பிளாட்டுகளை வாங்கி அதில் விவசாயம் செய்து வருகிறார்.
நடிகை தேவயானியின் கணவர் இயக்குநர் ராஜகுமாரன், ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த சந்திப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். சொந்த ஊருக்கு அடிக்கடி செல்லும் தேவயானி தம்பதிகள், அருகில் உள்ள மாத்தூரில் நிலம் வாங்கி விவசாயம் செய்து வருகின்றனர்.

இதனால் அடிக்கடி ஊருக்குச் சென்று தங்கள் விவசாய நிலங்களை குழந்தைகளுடன் பார்த்து வருவார்கள்.

இந்நிலையில் அவர்களது தோட்டத்துக்கு அருகே ஒருவர் 2 ஏக்கர் விவசாய நிலத்தை விற்பனை செய்வதற்காக பிளாட்டுகளாக மாற்றியுள்ளார். இதையறிந்த தேவயானி அந் நபரிடம் 2 ஏக்கர் வீட்டு மனைகளையும் விலை கொடுத்து வாங்கியுள்ளார்.

பின்னர் அதை விவசாய நிலமாக மாற்றி தற்போது 2 ஏக்கரில் செண்டுமல்லி பயிரிட்டுள்ளார். இதற்காக சொட்டுநீர் பாசனம் வைத்து தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச ஏற்பாடு செய்துள்ளார். தற்போது அந்த விவசாய நிலம் முழுவதும் செண்டு மல்லி பூத்துக் குலுங்குகிறது. இந்த தோட்டத்தை திருவிழாவுக்காக சொந்த ஊர் வந்த தேவயானி குடும்பத்தினர் சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர்.
விவசாய நிலங்கள் பிளாட்டுகளாக மாற்றப்பட்டு வரும் நிலையில், நடிகை தேவயானி, பிளாட்டுகளை விவசாய நிலங்களாக மாற்றி சாகுபடி செய்து வருவதை அப்பகுதி விவசாயிகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
வாழ்த்துக்கள் அம்மா.
தமிழ் மண்ணே வணக்கம்.